June

தீர்மானம் எடுத்தல்

2023 யூன் 4 (வேத பகுதி: ரூத் 1,14 முதல் 15 வரை) “ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப் போனாள், ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்” (வசனம் 14). நகோமியின் இரண்டு மருமகள்களும் சத்தமிட்டு அழுதார்கள் (வசனம் 14). அங்கே ஒரு பாசப்பிணைப்பின் போராட்டம் நடந்தது. இது மாமியைப் பின்பற்றுவதா? அல்லது விட்டுவிட்டு தன் சொந்த ஊருக்குத் திரும்புவதா? மாமியுடன் சென்று துன்பத்தை அனுபவிப்பதா? அல்லது திரும்பிச் சென்று இன்பத்தை அனுபவிப்பதா? ஓர்பாளுக்கும் ரூத்துக்கும் முடிவெடுக்கும் நேரம்…

June

அவநம்பிக்கையின் வெளிப்பாடு

2023 யூன் 3 (வேத பகுதி: ரூத் 1,9 முதல் 13 வரை) “கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்” (வசனம் 13). பின்மாற்றமுள்ள விசுவாசி திரும்பி கர்த்தரிடம் வருகிற வேளையில் தன் சொந்தக் கருத்துகளை விட்டு கர்த்தருடைய வாக்குறுதிகளை நம்ப வேண்டியது அவசியம். நகோமி தன்னுடைய துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் பின்னாகக் கர்த்தரே இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டாள். அதாவது மோவாப்பில் அவளுக்கு நேரிட்ட துரதிஷ்டமான சம்பவங்கள் கர்த்தராலே ஏற்பட்டிருக்குமோ…

June

வழியில் ஏற்பட்ட தயக்கம்

2023 யூன் 2 (வேத பகுதி: ரூத் 1,7 முதல் 9 வரை) “நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள் … என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள்” (வசனம் 8 முதல் 9). கர்த்தரை விட்டுத் தூரம் போனவர்கள் மீண்டும் கர்த்தரிடம் திரும்பி வரும்போது எவ்வித இடையூறுகளும் இன்றி சகலமும் சுமூகமாய் நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. முதலாவது அவர்கள் தங்கள் சொந்தத் தயக்கங்களையும், பிறகு சுற்றத்தாருடைய கருத்துகளையும் எதிர்…

June

சத்தியத்துக்குத் திரும்புதல்

2023 ஜுன் 1 (வேத பகுதி: ரூத் 1,6 முதல் 7அ வரை) “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப் தேசத்திலே கேள்விப்பட்டு” (வசனம் 6). ஆண்கள் இல்லாத வீட்டில் நகோமியே இப்பொழுது குடும்பத் தலைவி. கர்த்தர் இப்பொழுது அவளுடன் இடைபட்டார். அந்நிய தேசத்தில் இளைத்துப்போயிருந்த நகோமிக்கு ஒரு நல்ல செய்தி எட்டியது. “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் கேள்விப்பட்டாள்” (வசனம் 6).…

May

மூன்று மரணங்கள்

2023 மே 31 (வேத பகுதி: ரூத் 1,3 முதல் 5 வரை) “நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்” (வசனம் 3). எலிமெலேக்கும் அவனுடைய குடும்பமும் எந்த எதிர்பார்ப்புடன் மோவாப் தேசத்துக்கு வந்தார்களோ அது அங்கே நிறைவேறவில்லை. இவன் தன் கடவுளை விட்டு, தன் நாட்டை விட்டு, தன் இனத்தை விட்டு மோவாப்புக்கு வந்தான். சிறப்பானதைப் பெற்றுக்கொள்ளும்படி வந்தான், ஆனால் இருப்பதையும் இழந்தான். முடிவில் தன் உயிரை இழந்தான்.…

May

நல்ல பெயர், தவறான புரிதல்

2023 மே 30 (வேத பகுதி: ரூத் 1,2) “அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன். ” (வசனம் 2). வேதாகம கதாபாத்திரங்களின் பெயர்கள் பொருள் பொதிந்தவை. அவை அவர்களுடைய வாழ்க்கையில் நேரடியாகவோ அல்லது எதிர்மறையாகவோ பிரதிபலித்தன. இந்த மனிதனுடைய பெயர் “எலிமெலேக்கு”. இதற்கு “என் தேவன் அரசர்” என்று பொருள். ஆனால் அவனோ இஸ்ரவேலில் பூமிக்குரிய ராஜா இல்லாத…

May

பெத்லெகேமிலிருந்து மோவாபுக்கு

2023 மே 29 (வேத பகுதி: ரூத் 1,1ஆ) “அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடும்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்” (வசனம் 1ஆ). நியாயாதிபதிகளின் காலத்தில், “அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (நீதிமொழிகள் 21,25) என்று சொல்லப்பட்டுள்ளது போலவே, அங்கு ஏற்பட்ட பஞ்சத்தினிமித்தம், “பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடும்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்” (வசனம் 1). இது அவனாகவே…

May

இருண்ட காலங்கள்

2023 மே 28 (வேத பகுதி: ரூத் 1,1) “நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று” (வசனம் 1). “நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில்” (வசனம் 1) என்று இந்தப் புத்தகம் தொடங்குகிறது. ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் வரலாற்றில் எந்த நியாயாதிபதி நியாயம் விசாரித்தபோது இந்தப் புத்தகத்தின் கதை நடைபெற்றது என்று சொல்லப்படவில்லை. ஆயினும் போவாஸ் என்னும் சுதந்தரவாளியின் பெயர் இடம்பெற்றுள்ளதால், எரிகோவைச் சேர்ந்த புற இனப் பெண்ணான அவனுடைய தாய்…

May

நல்ல செயல், தவறான வழி

2023 மே 27 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 21,10 முதல் 25) “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (வசனம் 25). நியாயாதிபதிகள் நூலின் எழுத்தாளர் நான்காவது முறையாக, “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (வசனம் 25; 17,6; 18,1; 19,1) என்ற வருத்தம் தரும் செய்தியைப் பதிவு செய்கிறார். இத்தகைய துயரமிக்க வார்த்தைகளின் உண்மைக்கு ஏற்பவே நியாயாதிபதிகளின் நூல் முடிகிறது.…

May

இழந்துபோனோருக்காக மனஸ்தாபம்

2023 மே 26 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 21,1 முதல் 9 வரை) “இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு” (வசனம் 6). பொதுவாக எந்தவொரு வெற்றிக்குப் பின்னரும் எழக்கூடிய பரவசமான உணர்வுகளும் ஆரவாரங்களும் இஸ்ரவேல் மக்கள் பென்யமீனியர்களுக்கு எதிரான வெற்றியின் போது இல்லை. அங்கே மகிழ்ச்சி தணிந்து வருத்தம் அதிகரித்தது. காரணம் அவர்கள் தேவனுடைய வீடு இருக்கும் ஸ்தலமாகிய மிஸ்பாவிலே கூடிவந்தபோது, அங்கே ஒரு கோத்திரம் குறைவுபட்டது. “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று…