சிறப்பான கவனம் செலுத்துதல்
2023 யூன் 14 (வேத பகுதி: ரூத் 2,15 முதல் 16 வரை) “அவள் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகளின் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும் அவளை ஈனம்பண்ண வேண்டாம்” (வசனம் 15). ரூத் மீண்டுமாக தன் வேலையில் கவனத்துடன் ஈடுபட்டாள். உணவு வேளைக்குப் பின்பு மீண்டும் கதிர்பொறுக்கும்படி எழுந்துபோனாள் (வசனம் 15). எனவே போவாசின் கவனமும் அவள் மீது விழுந்தது. இந்த உலகத்தின் மாயையையும், இன்பங்களையும் வெறுத்து, ஜீவ அப்பத்தினாலும் ஜீவதண்ணீராலும் திருப்தியடைகிறவர்கள்,…