July

வளருதல்

2023 யூலை 24 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,26) “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்” (வசனம் 26). சாமுவேல் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ச்சியடைந்து வாலிபன் என்ற கட்டத்தை எட்டினான். அவன் கர்த்தரிடம் மட்டுமின்றி மனிதரிடமும் பிரியமாக நடந்துகொண்டான். ஏலி தன் மகன்களைச் சரியாக வளர்ப்பதில் தோல்வியடைந்தவன்தான், ஆனால் சாமுவேலை மிகக் கவனமாக வளர்த்திருக்கிறான். அவன் சாமுவேலை தேவ உறவில் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதையும், மனித உறவை எவ்வாறு…

July

நாம் பாவஞ்செய்தால்…

2023 யூலை 23 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,22 முதல் 25 வரை) “மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்” (வசனம் 26). ஆசாரியனாகிய ஏலிக்கு மிகவும் வயதாகிவிட்டது. தன்னுடைய குமாரர்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டான். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றுகூட இவனுக்குத் தெரியவில்லை அல்லது நேரடியாகச் சென்று பார்வையிடவுமில்லை. அவனுடைய குமாரர்களுடைய பாவங்கள் வாய்வழிச் செய்தியாகவே இவனை வந்தடைந்தது என்பது…

July

சமநிலை வளர்ச்சி

2023 யூலை 22 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,19 முதல் 21 வரை) “அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்” (வசனம் 19). அன்னாள் தன் நேசத்துக்குரிய மகன் சாமுவேலை கர்த்தருக்கென்று ஒப்புவித்திருந்தாலும் அவள் அவனை நேசிப்பதை நிறுத்தவில்லை. ஒருவேளை நாள்தோறும் அவனுடைய முகத்தைப் பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவனைப் பற்றிய நினைவுகள் அவளுடைய இருதயத்திலிருந்து இல்லாமற்போயிருக்காது. ஆண்டுதோறும் குடும்பமாகப்…

July

சிறுவர்களின் பயன்பாடு

2023 யூலை 21 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,18) “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான்” (வசனம் 18). ஏலியின் மகன்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தார்களோ அதற்கு மாறான வகையில், சாமுவேல் வேறுபட்டவனாக வாழ்ந்தான். ஏலியின் மகன்களுடைய தவறான நடத்தையின் காரணமாகக் கர்த்தர் சாமுவேலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் எனலாம். ஏலியின் வாரிசுகள் கர்த்தரால் வழிநடத்தப்படுவதற்கு இடங்கொடுக்கவில்லை. ஆனால் சிறுவன் சாமுவேல் அதற்கு இடங்கொடுத்தான். அவர் அவனை வழிநடத்தினார். நாம் தகுதியானவர்களாக…

July

பயனற்ற வாழ்வு

2023 யூலை 20 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,13 முதல் 17 வரை) “ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது; மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள்” (வசனம் 17). பிரதான ஆசாரியனாகிய ஏலியின் மகன்கள் கர்த்தருடைய அறிகிற அறிவுக்கும், மெய்யான தேவபக்திக்கும் அந்நியர்களாக இருந்தது மட்டுமின்றி, அவர்கள் அநாகரீகமாகவும், முரட்டாட்டமாகவும் நடந்துகொண்டார்கள். அவர்கள் லேவியர்களுக்கு என்று பரிந்துரைக்கப்பட்ட பலியின் அளவைக் காட்டிலும் கூடுதலான பங்கைக் வலுக்கட்டாயமாகப் பறித்துகொண்டார்கள். அவர்கள் நியாயப்பிரமாணம்…

July

கர்த்தரை அறியாத வாழ்வு

2023 யூலை 19 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,12) “ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை” (வசனம் 12). ஆசாரியனாகிய ஏலியின் மகன்கள் ஊழல்வாதிகளாக விளங்கினார்கள். ஆசரிப்புக்கூடாரப் பணிகளில் நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டார்கள். அவர்களுடைய செயல்கள் அவர்களை மக்கள் நடுவில் பேலியாளின் மக்கள் என்று அறியச் செய்தன. பேலியாளின் மக்கள் என்பதற்கு, மெய்யான கர்த்தரை வணங்காத, விக்கிரகங்களை வணங்கி, சமயச் சடங்குகளில் மூழ்கி, பொல்லாத காரியங்களைச் செய்கிறவர்கள் என்று பொருள். அதாவது கடவுளுக்கும்…

July

கர்த்தருக்காக அர்ப்பணித்தல்

2023 யூலை 18 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,11) “பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்” (வசனம் 11). பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம் என்று வேதம் கூறுகிறது. இந்த உலகத்தில் நாம் ஒரு பெற்றோருக்குப் பிறந்தோம். நமக்கும் கர்த்தர் பிள்ளைகளைச் சுதந்தரமாக அருளுகிறார். ஆனால் ஒவ்வொரு பிள்ளைகளைக் குறித்தும் குறிப்பாக இரட்சிக்கப்படுகிற ஒவ்வொருவரைக்குறித்தும் கர்த்தர் ஒரு சித்தத்தை வைத்திருக்கிறார். அதை அறிந்துகொள்வதும் …

July

கர்த்தருடைய வல்லமை

2023 யூலை 17 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,8 முதல் 10 வரை) “பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்” (வசனம் 8). விசுவாசமுள்ள அன்னாள் கர்த்தருடைய வல்லமையின்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தாள். உலகத்திலுள்ள பலவான்கள், ஐசுவரியவான்கள், அகந்தையுடையவர்கள் தங்களுடைய விருப்பத்தின்படி காரியங்களைச் செய்தால் என்ன நிகழும்? ஏழைகள் துன்பமடைவார்கள், எளியவர்களும் சிறியவர்களும் ஒடுக்கப்படுவார்கள், நீதியும் நியாயமும் அற்றுப்போய் அநீதியும் அநியாயமும் பெருமையுடன் உலாவரும். கடவுள் ஒருவர் இருக்கிறாரா என்னும் கேள்வி மக்கள்…

July

தாழ்விலிருந்து உயர்வுக்கு

2023 யூலை 16 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,4 முதல் 7 வரை) “பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்” (வசனம் 4). அன்னாள் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று ஜெபித்தபோது (வசனம் 1,11) சேனைகளின் கர்த்தாவே என்று தொடங்கினாள். தனக்கு நேரிட்ட அவமானத்தையும், இழிவையும் ஒரு போராகக் கருதினாள். எனவே கடவுளை இராணுவங்களின் கர்த்தராக அடைமொழியிட்டு உதவிக்கு அழைத்தாள். இப்பொழுது கூறுகிறாள்: “பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்” (வசனம்…

July

கடவுளைப் பற்றிய பார்வை

2023 யூலை 15 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,2 முதல் 3 வரை) “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்” (வசனம் 8). இன்றைய நாளிலும் நாம் தொடர்ந்து அன்னாளின் ஆராதனையைப் பற்றிச் சிந்திப்போம். இந்த நன்றி ஏறெடுப்பு முழுவதும் கர்த்தருடைய பண்புகள், அவருடைய செயல்கள் பற்றியே சொல்லப்பட்டுள்ளது. அவளுக்குக் கர்த்தரைப் பற்றிய ஆழமான அறிவும், பார்வையும், புரிதலும் இருந்தது. அவள் தன்னுடைய…