கர்த்தருடனான உறவின் மேன்மை
2023 ஓகஸ்ட் 13 (வேத பகுதி: 1 சாமுவேல் 7,10 முதல் 17 வரை) “இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்” (வசனம் 12). இஸ்ரவேலர்கள் மனந்திரும்பியதால் கர்த்தர் அவர்களுக்காகப் போரிடத் தொடங்கினார். இயற்கை அவர்கள் சார்பாக நின்றது. கர்த்தர் பலத்த இடிமுழக்கங்களை பெலிஸ்தியர்களின்மீது அனுப்பினார். இஸ்ரவேலர் போரிடாமலேயே வென்றனர். இடிமுழக்கங்களைக் கேட்டு பெலிஸ்தியர் குழப்பமடைந்தனர். ஆனால் இஸ்ரவேலர்களுக்கோ நம்பிக்கை பிறந்தது. அவர்கள் ஜெயித்தார்கள். கர்த்தர் இடியை மட்டும் அனுப்பவில்லை,…