November

வெற்றியின் ஆபத்து

(வேதபகுதி: ஆதியாகமம் 14:17-24) “… ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்.” (வச. 22). “போருக்குமுன் கொள்ளவேண்டிய எச்சரிக்கையைக் காட்டிலும், பெற்றிக்குப் பின்னர் நமக்கு அதிக எச்சரிக்கை அவசியம்” என்று திருவாளர் ஆன்ட்ரு போனார் கூறினார். வெற்றிக்குப் பின் ஏற்படும் சோதனையே அநேகரைத் தோல்வியடையச் செய்திருக்கிறது. இங்கே மேலோட்டமாகப் பார்த்தால், சோதோமின் ராஜா ஆபிராமுக்கு அளித்த வெகுமதி நியாயமானதாவும் சரியானதாகவும் தெரிகிறது. ஆபிராம் தனது…

November

ஆபிராம்: ஆபத்தில் உதவும் சகோதரன்

(வேதபகுதி: ஆதியாகமம் 14:1-16) “… தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக் கொண்டுவந்தான் ” (வச. 16). ஆபிராம் விசுவாசித்து நடந்தான், லோத்து தரிசித்து நடந்தான். இது அவனை யோர்தானின் சமவெளிக்கு நேராகவும், பின்பு சோதோமுக்கு நேராகவும் நடத்தியது. லோத்து ஒரு நீதிமான் தான். அதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. ஆனால் அவர் தனக்குத் தொடர்பில்லாத இடத்துக்குச் சென்றதன் விளைவாக சோதோமின் மக்களுடன் சிறைப்பிடிக்கப்படுகிறார். அங்கே அவன் ஒரு விசுவாசியாக வாழமுடியாமலும், ஒரு அவிசுவாசியைப்…

November

இரண்டு தெரிந்தெடுப்புகள்

(வேதபகுதி: ஆதியாகமம் 13:5-18) “அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான்… கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார்” (வச. 10,14). லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். தன் கண்களுக்குப் பிரியமானதையும் பசுமையாகத் தெரியக்கூடியதையும் தனக்காகத் தெரிந்தெடுத்தான். லோத்தின் பார்வைக்கு யோர்தான் ஆற்றின் அருகான சமபூமி, தனக்கும் தன்னுடைய கால்நடைகளுக்கும்…

November

எகிப்திலிருந்து திரும்புதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 13:1-4) “அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல் மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும், தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்” (வச. 3-4). ஆபிராமுக்கு எகிப்திய அனுபவம் ஒரு சோகக் கதை. அவனுடைய விசுவாச வாழ்வில் ஏற்பட்ட சறுக்கல். எகிப்தில் அவனுக்கு கூடாரமோ பலிபீடமோ இல்லை. அதாவது, எகிப்தில் வாழ்வோருக்கு இங்கே நாம் நிரந்தரமற்றவர்கள், நாம் மோட்சத்தை நோக்கிப் பயணிக்கிறோம்…

November

கடினச் சூழலில் விசுவாசத்தைக் காத்தல்

(வேதபகுதி: ஆதியாகமம் 12:10-20) “அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்” (வச. 10). கர்த்தரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானான் நாட்டில் பஞ்சம் ஏற்படுமா? அங்கு தங்கியிருக்கும்போது குறைவுகள் ஏற்படுமா? ஆம் என்று இந்த வேதபகுதி நமக்குக் கூறுகிறது. இவ்விதச் சூழ்நிலைகளை நாம் எவ்விதம் எதிர்கொள்கிறோம், எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதைக் கர்த்தர் காண விரும்புகிறார். இங்கு ஆபிராம் கர்த்தரிடம் ஆலோசனை கேட்டது பற்றியோ, எகிப்துக்குச் செல்லப்போகிறேன் அது உம்முடைய…

November

வாக்குத்தத்த பூமியில் நடத்தல்

(ஆதியாகமம் 12:4-9) “ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமி வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்” (வச. 6). ஆபிராம் கானான் நாட்டுக்குள் நுழைந்தான், அங்கு சுற்றித் திரிந்தான். அவன் அங்கு சுற்றித்திரிந்த இடங்கள், அவன் செய்த செயல்கள் நமக்குப் பல நல்ல ஆவிக்குரிய படிப்பினையை வழங்குகின்றன. கானான் நாட்டுக்குள் ஆபிராமின் பயண அனுபவங்களில் நமக்கு முதன் முதலில் சொல்லப்பட்ட காரியம், அவன் சீகேம் என்னும் இடத்திற்குச்…

November

ஆபிரகாமுக்கு உண்டான தேவகட்டளை

(வேதபகுதி: ஆதியாகமம் 12:1-3) “கர்த்தர் ஆபிராமை நோக்கி; நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” (வச. 1). ஆதியாகமம் ஆரம்பங்களின் புத்தகம். மனித இனத்தின் தோற்றம் ஆதாமிலிருந்து தொடங்கியது. பெருவெள்ளத்துக்குப் பின் புதிய ஆரம்பம் நோவாலிருந்து தொடங்கியது. ஒரு புதிய நாட்டுக்கான தோற்றம் ஆபிராம் என்ற மனிதலிருந்து தொடங்குகிறது. தேவன் அவரை ஊர் என்ற கல்தேய தேசத்தில் சந்தித்தார். இதுவே அவருடைய வாழ்க்கையின்…

November

தேவனின் தெரிந்தெடுப்பு

(வேதபகுதி: ஆதியாகமம் 11:10-32) “தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், … அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டுடான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்” (வச. 31). ஆதியாகமப் புத்தகத்தில் இதுவரை சொல்லப்பட்ட வம்சாவழிப் பட்டியலிலிருந்து இந்த பட்டியலின் வேறுபட்ட அம்சம் என்னவென்றால், மனிதர்களுடைய வாழ்நாட்களின் ஆண்டுகள் வேகமாக குறைந்து வருவதுதான். பெருவெள்ளத்துக்குப் பின் வாழ்ந்தோரின் சராசரி ஆயுட்காலம் படிப்படியாகக் குறைந்துவிட்டது. மனிதனின் வீழ்ச்சி, காலநிலை மாற்றங்கள் போன்றவற்றின்…

November

தேவனின் தலையீடு

(வேதபகுதி: ஆதியாகமம் 11:1-9) “அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்” (வச. 6). மனிதர்கள் கட்டடக் கலையில் தேர்ச்சி பெற்றார்கள். வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தைக் கட்டத் தொடங்கினார்கள். ஆனால் கர்த்தர் இறங்கி, அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கி, மனிதர்களுடைய எண்ணத்தைத் தடுத்தார். மக்கள் சிதறிபோனார்கள், பல்வேறு மொழிகள் உண்டாயின.…

November

புதிய உலகத்தின் மக்கள்

(வேதபகுதி: ஆதியாகமம் 10:1-32) “நோவாவின் குமாரராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்ச வரலாறு; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்” (வச. 1). புதிய உலகத்தின் மனித இனத்தோற்றத்தின் வரலாற்றை இப்பகுதியில் படிக்கிறோம். நோவாவின் குமாரராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வரலாறு. இவர்களில் யாப்பேத் மூத்தவன் (வச. 21). ஆனால் ஆவியானவர் இங்கு சேமின் பெயரை முதலாவது குறிப்பிடுகிறார். இந்தச் சேமின் இனத்தில்தான் ஆபிரகாமும், தாவீதும், இயேசு கிறிஸ்துவும் தோன்றினார்கள். நாமும்கூட எந்த இனத்தாராகவும்…