August

தேவனுடைய அன்பை பெற்ற மக்கள்

(வேத பகுதி: உபாகமம் 4:32-49) ”அவர் உன் பிதாக்களில் அன்பு கூர்ந்தபடியால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு, உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்” (வச. 37,38). தேவன் இஸ்ரயேல் மக்களோடு பேசவும், தமது வல்லமையைக் காண்பிக்கவும், அவர்களைத் தெரிந்துகொண்டு ஒரு நாட்டை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் காரணமாக இருந்தது எது; அவருடைய…

August

தேவனை உடைய மக்கள்

(வேதபகுதி: உபாகமம் 4:15 -31) “உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்கு தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவும் மாட்டார்” (வச. 31). வேதத்தை உடைய மக்கள் என்னும் சிறப்பைப் பெற்றிருந்த இஸ்ரயேலர், தங்களுடைய கடவுளாக மெய்த் தேவனைப் பெற்றிருந்த மக்கள் என்னும் அந்தஸ்தை உடையவர்களாகவும் விளங்கினார்கள். ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருந்தவர் இஸ்ரயேலர்களின் தேவனாக விளங்கினார். சதாகாலங்களிலுமுள்ள இந்தத் தேவனே நமக்கும் தேவனாயிருக்கிறார்.…

August

வேதத்தின் மக்கள்

(வேதபகுதி: உபாகமம் 4:1-14) இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது? (வச. 8). தேவன் இஸ்ரயேலர்களுக்கு வேதத்தைக் கொடுத்தார். தங்களுடைய வழிபாட்டு முறைக்கு மட்டுமின்றி, தங்களுடைய அன்றாட வாழ்க்கைக்கான நடைமுறை ஆலோசனைகளையும் அந்த நல்ல தேவனிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். அவர்களுடைய வேதம் அவர்களைச் சிறப்பானவர்களாக ஆக்கியது. பல்வேறு மதங்களும் வழிபாடுகளும் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுடனும் ஊடுருவிச்…

August

சசோகோதர பாசம்

(வேத பகுதி: உபாகமம் 3:18-29) ”யுத்தஞ்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரருக்கு முன்னே ஆயுதபாணிகளாக நடந்து போங்கள். உங்கள் மனைவிகளும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் ஆடுமாடுகளும்மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்” (வச. 18,19). கர்த்தரின் பேரில் மிகப் பெரிய விசுவாசம் இருந்தால் தவிர இரண்டரைக் கோத்திரத்தார் தங்கள் மனைவிகளையும், பிள்ளைகளையும், ஆடு மாடுகளையும் யோர்தானின் இக்கரையில் விட்டு விட்டு ஆற்றைக் கடந்து பிற கோத்திரத்தாருக்காக ஆண்கள் போருக்குச் செல்ல முடியாது.…

August

ஜெயங்கொள்ளும் விசுவாசம்

(வேதபகுதி: உபாகமம் 3:1 -17) “பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல ஜனங்களோடும் நம்மோடே எதிர்த்து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்” (வச. 1). எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் தோல்வி, அவனுடைய கூட்டாளியான ஓகை உசுப்பிவிட்டது. ஓக் தன்னுடைய சகல பலத்தோடும், இராணுவத்தோடும் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிடவந்தான். நம்முடைய கிறிஸ்தவ விசுவாச வாழ்வில் வெற்றிக்கான போர் என்பது தொடர்ச்சியானது. சீகோனின்மேல் பெற்ற வெற்றி என்பது நாம் ஓய்ந்திருப்பதற்காக அல்ல, அடுத்த போருக்கு ஆயத்தம் செய்வதற்காகவும் தான். மீந்திருந்த…

August

தேவனுடைய முதலாவதே நமக்கும் இருக்கட்டும்

(வேதபகுதி: உபாகமம் 2:24 -37) “நீங்கள் எழுந்து பிரயாணம்பண்ணி, அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவன் தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். இதுமுதல் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவனோடே யுத்தஞ்செய்” (வச. 24). ஏதோமியரோடும் அம்மோனியரோடும் மோவாபியரோடும் போரிட வேண்டாம் என்று கூறிய தேவன் இப்பொழுது சிலைவணத்துக்கும் குழந்தைகளைப் பலியிடுவதற்கும் பேர்போன எமோரியருடன் போரிட்டு அதன் ராஜாவையும் மக்களையும் முற்றிலுமாக அழித்து அவர்களுடைய நாட்டைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கூறுகிறார். தேவன் எல்லா மக்களுக்கும் தேவனாக…

August

சகோதர யுத்தத்தைத் தவிர்ப்போம்

(வேத பகுதி: உபாகமம் 2:1-23) சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களோடே போர்ச்செய்யவேண்டாம் (வச. 4,5). கிறிஸ்தவ வாழ்கையில் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று நம்முடைய உறவினர்களையும் நண்பர்களையும் எதிர்கொள்ளவது ஆகும். அவர்களை விட்டு விலகியும் செல்ல முடியாது, நெருங்கி உறவாடும் முடியாது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் சகோதரரான ஏசாவின் வம்சத்தாரான ஏதோமியரை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும்…

August

உண்மையை ஏற்றுக்கொள்ளும் தலைவன்

(வேதபகுதி: உபாகமம் 1:43-46) “அன்றியும் உங்கள் நிமித்தம் கர்த்தர் என் மேல் கோபங்கொண்டு நீயும் அதில் பிரவேசிப்பதில்லை. உனக்கு முன்பாக இருக்கிற நூனின் குமாரனாகிய யோசுவா அதில் பிரவேசிப்பான்” (வச. 37,38). தன்னைப் பற்றிய தாழ்வான விமர்சனங்களையும் பிறரைப் பற்றிய உயர்வான பாராட்டுகளையும் ஏற்றுக் கொள்கிற தலைவனே ஓர் உண்மையான தலைவனாக இருக்க முடியும். தன்னுடைய தவறுகளை ஒத்துக் கொண்டு, யோசுவா மற்றும் காலேப்பின் நற் பண்புகளை மெச்சிக் கூறுகிற செயல் இங்கே மோசேயை ஒரு மாமனிதனாகக்…

August

விசுவாசமா அல்லது பயமா?

(வேதபகுதி: உபாகமம் 1:16-33) “… கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன்” (வச. 21). விசுவாசமும் பயமும் இணைந்து பயணிக்க முடியாது. பயம் குடியிருந்தால் விசுவாசம் ஓடிப்போகும். எங்கே விசுவாசித்து நடக்கிறோமோ அங்கே கடினமாக பாதையெல்லாம் எளிமையான பாதையாக மாறிப்போகும். ஓரேபிலிருந்து காதேஸ் பர்னேயாவிற்கு செல்லும் பாலைவன மார்க்கம் பயரங்கரமானதுதான் (வச. 19), ஆயினும் மேகஸ்தம்பமும், அக்கினிஸ்தம்பமும் முன்னே சென்றால் கானானின் எல்லையும் தொட்டுவிடும் தூரம்தான். கர்த்தர் கட்டளைக்குத்…

August

உற்சாகமூட்டுதலின் அவசியம்

(வேதபகுதி: உபாகமம் 1:5-15) “… நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்ததுபோதும், நீங்கள் திரும்பிப் பிரயாணப்பட்டு, … போங்கள் ” (வச. 6,7). ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு. கூடாரங்களில் தங்கியிருக்க ஒரு காலம் உண்டு, கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டு பயணிக்கவும் ஒரு காலம் உண்டு. பல வேளைகளில் நாம் எதற்காக அழைக்கப்பட்டோமோ அதை மறந்துபோனவர்களாவோ அல்லது எங்கு செல்ல வேண்டுமோ அதற்கு எதிரான திசையில் பயணிக்கிறவர்களாகவோ இருப்போம். நம்முடைய தூக்கத்தைக் களைந்து, நம்மைத் திருப்தியாக்கி வைத்திருக்கிற காரியங்களைவிட்டு எழுந்து…