August

மீண்டும் பத்துக்கட்டளை

(வேதபகுதி: உபாகமம் 10:1-11) “நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்” (வச. 2). நாம் தேவனுடைய மக்களாக அவருடைய ஆசீர்வாதத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் முன்னேறிச் செல்வதற்கும் மீண்டும் சத்தியத்துக்குத் திரும்புவது அவசியமாயிருக்கிறது. மோசே நீதியின் கோபத்தினால் முந்தின கற்பலகைகளை உடைத்துப்போட்டான். இது இஸ்ரயேல் மக்கள் பிரமாணத்தை மீறிவிட்டார்கள் என்பதற்கு ஓர் அடையாளச் செயலாகும். ஆகவே தேவன் அவர்கள் பிரமாணம் இல்லாத மக்களாக இருக்க விரும்பாமல் மீண்டும் அவர்கள் கைக்கொள்ளும்படியாக பத்துக்கற்பனைகளை…

August

மோசேயின் மன்றாட்டு

(உபாகமம் 9:15-25) “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது ஜனத்தையும் உமது சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக” (வச. 26). நாம் விழுந்துபோகும்போதும், நாம் பாவத்தில் சிக்கிக்கொள்ளும்போதும் நமக்காகக் கரிசணையுடன் ஜெபிக்கிற ஒரு சகோதரன் இருந்தால் எப்படியிருக்கும்? சபையில் பின்வாங்கிப்போனோர் மீண்டும் எழுந்து வரும்படியாக உபவாசித்து ஆண்டவர் பாதத்தில் விழுந்து கிடக்கும் ஒரு மேய்ப்பன் நமக்கு இருந்தால் எப்படியிருக்கும்? இவ்விதமான பரிந்துரை ஜெபத்துக்காக மோசே என்றென்றும் நினைவுகூரப்படுகிறார். இஸ்ரயேல் மக்கள் பொன்…

August

வெற்றி வரும்போது …

(வேதபகுதி: உபாகமம் 9:1-14) “உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்துகையில், நீ உன் இருதயத்தில்: என் நீதியினிமித்தம் இந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக” (வச. 4). தேவன் இஸ்ரயேல் மக்களுக்கு கானான் நாட்டைக் கொடுத்தற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று முற்பிதாக்களுக்கு கொடுத்த கிருபையின் வாக்குறுதி, மற்றொன்று அந்த நாட்டு பூர்வக்குடிகளின் பாவம். என்னுடைய நீதியினிமித்தமும் என் உத்தமத்தினிமித்தமுமே இந்த கானான் நாட்டை எனக்குக் கொடுத்தார் என்று ஒரு…

August

வளமும் வாழ்வும் வரும்போது…

(வேதபகுதி: உபாகமம் 8:1-20) “அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி (தாழ்மைப்படுத்தி), உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார் ” (வச. 3). பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது பழமொழி. பசி வந்தாலும் பதறாமல் என்னை நினை என்பது தேவனின் வாய்மொழி. மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்…

August

உடன்படிக்கையின் தேவன்

(வேதபகுதி: உபாகமம் 7:12-26) “இந்த நியாயங்கனை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த உடன்படிக்கையையும், கிருபையையும் உனக்காக் காத்து, உன்மேல் அன்புவைத்து, உன்னை ஆசிர்வதித்து…” (வச. 12,13). தேவன் இஸ்ரயேல் மக்களுடன் பண்ணிய உடன்படிக்கை அவர்களுடைய கீழ்ப்படிதலுடன் தொடர்புடையது. தேவன் அருளிய நிபந்தனைகளை நிறைவேற்றினால் அவர்களையும் அவர்கள் உடைமைகளையும் ஆசீர்வதிப்பேன் என்று கூறுகிறார். உடன்படிக்கைக்கு கீழ்ப்படிவதே மக்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். அவர்களுடைய செழிப்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கான…

August

அழைக்கப்பட்டவர் சிறியோர் அழைக்கிறவர் பெரியவர்

(வேதபகுதி: உபாகமம் 7:1-11) “சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்” (வச. 7). தேவனுடைய பார்வையும், அவரது கண்ணோட்டமும் முற்றிலும் வித்தியாசமானது. அவர் எதையும் மனிதர் பார்க்கிறவண்ணமாய் பார்க்கிறவரல்லர். மனிதன் மேலோட்டமாய் முகத்தைப் பார்ப்பான், கர்த்தரோ உள்ளான இருதயத்தைப் பார்க்கிறார். இஸ்ரயேல் என்னும் நாடு உதயமாகப்போகிறது, சுற்றிலும் உள்ள நாடுகளைக் காட்டிலும் இவர்கள் எளியவர்கள், சிறியவர்கள். ஆயினும் தேவனோ இவர்களோடு இருக்கிறார், அவருடைய அன்பு…

August

மறந்துவிடாதீர்கள், நினைவுகூருங்கள்

(வேதபகுதி: உபாகமம் 6:10-25) “நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” (வச. 12). தேவன் நம்மை எவ்வாறு இந்த நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறார் என்பதைத் திரும்பிப் பார்க்கும்படி விரும்புகிறார். அதாவது நம்முடைய கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போதே இன்றைக்குத் தேவன் எவ்வித ஆசீர்வாதமான நிலையில் வைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும். தேவன் இஸ்ரயேல் மக்களுக்கு குடியிருக்கப் பட்டணங்களையும், சாப்பிடுவதற்குத் தேவையான கனிகளைக் கொடுக்கும் தோட்டங்களையும் மிகுதியாகக் கொடுத்தார். இவையாவற்றையும் அனுபவிக்கும்போது…

August

கேள், அறிக்கையிடு, அன்புகூரு

(வேதபகுதி: உபாகமம் 6:1-9) “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், என் முழு ஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் அன்புகூருவாயாக” (வச.4,5). இந்த வசனத்தைப் பக்தியுள்ள யூதர்கள் இன்றுவரை வழிவழியாக தங்களுடைய விசுவாச அறிக்கையாக சொல்லுகிறது மட்டுமின்றி, தங்கள் பிள்ளைகளும் சொல்லும்படி போதித்து வருகிறார்கள். பல திருச்சபைகளிலும் விசுவாச அறிக்கையாக இவ்வசனத்தை வாசித்து வருகிறார்கள். அன்றைக்கு இஸ்ரயேல் நாட்டைச் சுற்றி பல தெய்வக் கோட்பாடுகளும், அவற்றின்…

August

தேவனுடைய அன்பை பெற்ற மக்கள்

(வேத பகுதி: உபாகமம் 5:22-33) ”அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்” (வச.29). தேவன் எங்களோடு நேரடியாகப் பேச வேண்டாம், அவர் என்ன பேசுகிறாரோ அதைக் கேட்டு நீர் எங்களுக்குச் சொல்லும் என்று மோசேயிடம் மக்கள் வைத்த விண்ணப்பத்தை கேட்டு தேவன் மக்களின் நிலைக்கு இறங்கி வந்தார். பல நேரங்களில் தேவனுடைய மகத்துவத்தையும் வல்லமையையும் நாம் புரிந்து கொள்ளாமல் போகும் போதோ,…

August

கேள், கற்றுக்கொள், கைக்கொள்

(வேதபகுதி: உபாகமம் 5:1-21) “இஸ்ரவேலரே, நான் இன்று காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும், நியாயங்களையும், கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக்கொள்ளக்கடவீர்கள்” (வச.1). தேவன் இஸ்ரயேல் மக்களுக்கு கட்டளைகளைக் கொடுத்து, அவர்களுடன் உடன்படிக்கை பண்ணினார். அவர் மோசேயின் மூலமாக இந்தக் கட்டளைகளை ஓரேப் மலையிலிருந்து அவர்களுக்கு வழங்கினார். இந்த தலைமுறை மக்களுக்கு மிட்டுமின்றி, இனிவரும் தலைமுறையினர் அனைவருக்கும் இது பொதுவானது, அவர்கள் அனைவரும் இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். இஸ்ரயேல் மக்கள் கற்பலகைகளில் எழுதப்பட்ட பிரமாணத்துக்கு உட்பட்டிருந்தார்கள்.…