August

சசோகோதர பாசம்

(வேத பகுதி: உபாகமம் 3:18-29)

”யுத்தஞ்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரருக்கு முன்னே ஆயுதபாணிகளாக நடந்து போங்கள்.
உங்கள் மனைவிகளும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் ஆடுமாடுகளும்மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்” (வச. 18,19).

கர்த்தரின் பேரில் மிகப் பெரிய விசுவாசம் இருந்தால் தவிர இரண்டரைக் கோத்திரத்தார் தங்கள் மனைவிகளையும், பிள்ளைகளையும், ஆடு மாடுகளையும் யோர்தானின் இக்கரையில் விட்டு விட்டு ஆற்றைக் கடந்து பிற கோத்திரத்தாருக்காக ஆண்கள் போருக்குச் செல்ல முடியாது. பல வேளைகளில் கர்த்தருடைய ஊழியத்தை முன்னிட்டு குடும்பத்தையும் இல்லத்தையும் விட்டு பிரிந்து செல்ல நேரிடுகிறது. இச்சமயங்களில் எல்லாம் கர்த்தருடைய வார்த்தையும் அது தரும் நம்பிக்கையுமே சமாதானமாக ஊழியம் செய்ய காரணமாக அமைகிறது. கர்த்தர் நம் குடும்பத்தாரையும் உடைமைகனையும் கவனித்துக் கொள்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும் போது கர்த்தர் நமக்கான தேவைகளைப் பார்த்துக் கொள்கிறார். கர்த்தரே நம்முடைய குடும்பங்களுக்கான பாதுகாப்பு .

உண்மையில் இவர்கள் முதலில் இப்படிச் செய்ய வேண்டும் என்ற எண்ணமற்றவர்களாகவே இருந்தார்கள். உங்களுடைய இந்த முடிவு சகோதரர்களின் இருதயத்தைக் கறைந்து போகப்பண்ணும் என்று மோசே இவர்களை கடிந்து கொண்டார் (எண். 32 அதி). நம்முடைய சுயநலமிக்க எண்ணங்களும் திட்டங்களும் பிற விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கையின் முன்னேற்றதுக்கு தடையாக அமைந்துவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்

இவர்கள் என்ன நோக்கத்துக்காக இந்தப் பூமியை தெரிந்து கொண்டார்களோ, அதிலே அவர்கள் விசுவாசத்தைச் சோதிக்கும்படி கை வைக்கிறார். கர்த்தர் கொடுத்த ஆடு மாடுகள் முக்கியமென்று கருதினால் சகோதரர்களை இழந்து போவோம். அவைகளை தனியே விட்டு விட்டு சகோதரர்களுக்காக யுத்தம் செய்ய வாருங்கள் என கர்த்தர் அழைக்கிறார். மேலும் தங்களுக்கான வாழ்க்கைத் தேவைகள் நிறைவேறி விட்டால் போதும் என இருந்து விடக் கூடாது என்னும் பாடத்தையும் இங்கே கற்றுக்கொள்கிறாம். எருசலேமில் இருந்த ஏழை எளிய விசுவாசிகளின் தேவைகளைச் சந்திப்பதற்காக பவுல் அப்போஸ்தலன் பிற சபைகளிடமிருந்து உதவி பெற்றார். நாமும் நம்முடைய சகோதரர்களுக்காக அவர்களுடைய குடும்பங்களுக்காக கரிசனை கொள்ள வேண்டும்.

கர்த்தர் ஏற்கனவே கூறிய பிறகும் அந்த நல்ல நாட்டுக்குள் கால் பதிக்க வேண்டும் என்ற மோசேயின் ஜெபம் நிராகரிக்கப்பட்டது. நாம் ஏற்கனவே அறிந்து கொண்ட தேவ சித்தத்துக்கு கீழ்ப்படிந்து வாழ்வதே சிறந்தது. ஆயினும் மோசேயின் வாஞ்சையை கர்த்தர் அறிந்திருந்தார். முள் நீங்கும்படி செய்யும் என்ற பவுலின் ஜெபம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் கூடுதலாக கிருபை வழங்கப்பட து போலவே மோசேக்கும் அந்த நல்ல நாட்டைப் பார்க்கும்படி உதவினார். இயேசு கிறிஸ்து கிருபையும் சத்தியமும் நிறைந்தவராக இருக்கிறார். அவர் சத்தியத்தை நிலை நாட்டும் போது கிருபையுடன் செயல்படுகிறார்.