June

யூன் 10

யூன் 10 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப் பட்டதோ, அவன் பாக்கியவான் (சங்.32:1). இரட்டிப்பான துன்பத்திற்குப் பதிலாக இங்கு இரட்டிப்பான ஆசீர்வாதம் கூறப்பட்டுள்ளது. வேதாகமத்தில் மகிழ்ச்சியினை எடுத்துரைக்கும் தலைசிறந்த அதிகாரங்களில் இதுவும் ஒன்றாகும். இது தேவனுடைய மன்னிப்பில் ஆரம்பமாகிறது. நீதிமான்களின் ஆனந்த முழக்கத்துடன் முடிவடைகிறது. இவ்விரு உயர்ந்த நிலைகளுக்கும் இடையே துயரம் ஆழத்தில் மண்டிக்கிடக்கிறது. இப்படிப்பட்ட பள்ளத்தாக்கினைக் கடந்து சென்றால்தான் உயரமான இடத்தை அடையமுடியும். கிப்போவைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர் இச்சங்கீதத்தை அதிகமாக விரும்பினார்.…

June

யூன் 9

யூன் 9 ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான் (நீதி.11:13). புறங்கூறுதலைக் குறித்த கடிந்துரைத்தலையும், அதற்கு வரும் ஆக்கினைத் தீர்ப்பைப்பற்றியும் வேதாகமத்தில் காண்கிறோம். மோசேயின் நியாயப்பிரமாணம், உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள் சொல்லித் திரியாயாக என எச்சரிக்கிறது (லேவி.19:16). இதைப்பற்றி ஆராய்ந்த சாலோமோன், கோள் சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். கோள்காரனுடைய வார்த்தைகள்…. உள்ளத்தில் தைக்கும் (நீதி.26:20,22) என்றும், பேலியாளின் மகன் கிண்டி விடுகிறான். எரிகிற அக்கினி போன்றது அவன் உதடுகளில் இருக்கிறது. மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான். கோள்…

June

யூன் 8

யூன் 8 இந்த மனுஷர் வேலையை உண்மையாகச் செய்தார்கள் (2.நாளா.34:12) இவ்வுலகிலுள்ள நாமனைவரும் தேவனால் படைக்கப்பட்டவர்களேயன்றி படைக்கிறவர்களல்ல. மனித ஆவியால் கொடுக்கப்பட்ட பொருளை ஒழுங்குபடுத்தி அழகுபடுத்தி வைக்கவே இயலும். ஆகவே புதிய கண்டுபிடிப்புகள்மூலம் நாம் பொருள்களை முன் இருந்ததைக் காட்டிலும் அழுகுள்ளதாயும், சிறப்புள்ளதாயும், பயனுள்ளதாயும் மாற்றமுடியும். வாழ்க்கைத்தரம் எவ்வளவுக்கெவ்வளவு உயரவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதற்கேற்ப நாம் உழைக்கவும், சிந்திக்கவும் வேண்டும். படைப்பின்போது தேவன் படைத்த பொருள்களிலிருந்து மாத்திரமே நாம் யாவற்றையும் உருவாக்குகிறோமேயன்றி புதிய படைப்புகள் அல்ல.…

June

யூன் 7

யூன் 7 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் (நீதி.3:5-6). இவ்வசனத்தில் “உன்” என்கிற சொல் நான்கு முறை வந்திருப்பதைச் சற்றுக் கவனியுங்கள். வேதாகமம் உனக்கு வழி காட்டும் நூல் என்பதற்கு இதுதான் சிறந்த சான்று. இவ்வசனம் நாம் செல்லவேண்டிய வழி இதுவெனத் தெளிவாகக் கூறுகிறது. நாம் முழு இருதயத்தோடும், கர்த்தரில் நம்பிக்கையாயிருக்கவேண்டும். அரைகுறையான, மாறுபாடான இருதயம் வேதனையையும், பயத்தையும்…

June

யூன் 6

யூன் 6 இவன் தச்சன் அல்லவா? (மாற்.6:3) இயேசு கிறிஸ்து தச்சன் என்பது நாசரேத்தூரார் யாவருக்கும் தெரியும். தங்கள் ஊரைச் சேர்ந்த அவரைப்பற்றி அவர்கள் புகழ்ந்து கூறிய சொற்களல்ல இவை. அவரை இழிவுபடுத்தும்படிக்கு கூறப்பட்டுள்ள இழிவான சொற்களாகும். தாவீதின் சந்ததியில் வந்த நமது இரட்சகருக்கு, மற்றவர்களால் தான் இழிவுபடுத்தப்படுவது நன்கு தெரியும். அவர் மென்மையான உள்ளமும் உதவி செய்யும் கரங்களும் கொண்டவர். தன் சொந்த ஊரான நாசரேத்துக்கு வந்தார். அங்கு அவர் ஞானமுள்ள வார்த்தைகளைக் கூறினார். குணமாகும்படி…

June

யூன் 5

யூன் 5 பயப்படாதிருங்கள். உங்களைச் சோதிப்பதற்காகவும்…. தேவன் எழுந்தருளினார் (யாத்.20:20). தைரியத்துடன் நாம் தேவனை விசுவாசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக நம் நம்பிக்கையின் கன்மலையான தேவன் திகிலை நமக்குள் உண்டாக்குகிறார். இவ்வுலகத்தில், நம் அயலாராலும் அல்லது நமது உள்ளத்திலிருந்து ஏற்படும் தொல்லைகளின்மூலமும் பயங்கள் தோன்றலாம். இஸ்ரவேலர் இடிமுழக்கங்களைக் கேட்டுப் பயந்தனர். பத்து கற்பனைகள் கொடுக்கப்பட்ட வேளையில் சீனாய் மலையடியில் இருந்திருந்தால் நாமும்கூட இப்படித்தான் பயந்திருப்போம். இயற்கையின் சீற்றங்கள் நமக்குப் பயத்தைக் கொடுக்கும். இதேபோன்றுதான் மக்களின் எதிர்ப்பு நமக்கு மிகுந்த…

June

யூன் 4

யூன் 4 ….. உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள் (சங்.22:5). தோல்வி, துக்கம், துன்பம், இழிவு, இழப்பு போன்றவற்றை எளிதாகச் சகித்துக்கொள்ள முடியுமா? இருள் சூழ்ந்து, இக்கட்டில் சிக்கித் தவிக்கும் வேளையில் ஆண்டவரைப் பார்த்து, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக் கெட்காமலிருக்க முடிந்ததா? இப்படிப்பட்ட இருண்ட சூழ்நிலையில்தான் கல்வாரி சிலுவையில் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து தொங்கிக்கொண்டிருந்தார். அவரைப் போன்று நாமும் அவ்வித சரீர வேதனைகள் அனுபவிக்காவிடினும், அதைப்போன்ற சூழ்நிலைகளுக்குள் சென்று வருகிறோம். மற்றவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை…

June

யூன் 3

யூன் 3 கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான் (சங்.128:1). தேவ பயமற்ற பொல்லாத இந்த உலகில் கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் தைரியத்தை இழக்காமல் 128ம் சங்கீதத்தைப் படித்து, கிறிஸ்தவ தகப்பன்மார்களுக்கும், தாய்மார்களுக்கும் தங்கள் பிள்ளைகள்மூலம் வரும் அசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கென குடும்ப வாழ்வில் வைத்திருக்கும் திட்டத்தையறிந்து அதை நிறைவேற்ற வேண்டும். ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை ஸ்தாபிக்க தேவையானவற்றை இன்றைய வசனம் நமக்குக் கூறுகிறது. கர்த்தருக்குப் பயந்து அவர் வழியில் நடக்கவேண்டும்.…

June

யூன் 2

யூன் 2 ….. உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? (மாற்.8:17). பிரச்சனைகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை விடுதலையாக்கினவுடனே நாம் இனிமேல் அவரது கிருபையையும், வல்லமையையும் குறித்து சந்தேகப்படுவதில்லை என்று தீர்மானிப்பது இயல்பு. இன்னொரு இக்கட்டு வரும்போது இதை மறந்து விசுவாசியாமற்போய்விடுகிறோம். இது ஏன்? இயேசுவின் சீடர்களுக்கும் இவ்விதமான அனுபவம் கிட்டிற்று. அவர்களை ஆண்டவர் கைவிட்டதேயில்லை. படகிலே அவர்களிடம் ஒரேயொரு அப்பம் இருந்ததினால், அந்தச் சந்தர்ப்பத்தில், பற்றாக்குறை அவர்களது விசுவாசத்தை நீக்கிவிட்டது.…

June

யூன் 1

யூன் 1 ….. பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே…. (யோசு.1:9). சொல்வது எளிது. செய்வது கடினம். எல்லாமே அப்படியல்ல. சில காரியங்களைச் சொல்லுவதுபோன்று செய்து முடிக்க முடியும். ஏனெனில் அது சொல்லப்படும் காரியத்தின் நிச்சயத்தைப் பொறுத்தது. உண்மையுள்ள தேவன் நம்முடைய பிள்ளைகள் ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை அறிந்திருந்த மோசே, பயப்படாதிருக்கும்படி யோசுவாவிற்கு ஆலோசனை கூறியிருந்தான் (உபா.31:8). உண்மையான போர்க்களத்தில் குதிக்கும் இச்சமயத்தில்தான் யோசுவாவிற்கு வெற்றியின் நிச்சயமும், ஊக்கமும் தேவைப்பட்டது. இவற்றை அவன் சர்வ வல்லவரிடமிருந்து பெற்றுக்கொண்டான். நீங்கள்…