January

ஐனவரி 11

“துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும். சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்” (சங்.74:21) பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டின் விசுவாசிகள் பலர் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கென பல வேதனைகளையும், பாடுகளையும் அனுபவித்தனர். அவர்களுக்குப் பிரியமானது இந்த 74ம் சங்கீதம் எனலாம். அவர்கள், ‘தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்?” (வச.10) எனக்; கேட்பதில் தவறு இல்லையே! ‘பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறது” (வச.20) என்று அவர்கள் நன்கு அறிவர். பயங்கரத்திலும், இருளிலும் சிக்கித் தவிக்கும் உள்ளத்திலிருந்து எழும்பும் ஒப்பாரிப்…

January

ஐனவரி 10

“மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்” (ஏசா.51:7) இவ்வுலகில் துன்மார்க்கனும், அக்கிரமக்காரனும், கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன். அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். ஆனாலும் அவன் ஓழிந்துபோனான். பாருங்கள் அவன் இல்லை. அவனைத் தேடினேன் அவன் காணப்படவில்லை. (சங் 37:35-36) எனக் கூறியுள்ளான். தேவனை மறுதலித்து, தேவனுடைய பிள்ளைகளையும் வெறுத்து, தற்பெருமை பேசிய நாத்;திகர்களை நாம் காலங்கள் தோறும் கண்டு வருகிறோம். மொர்தெகாயையும் யூதர்களையும் அழித்துப்போட வகைதேடிய ஆமான், தான்…

January

ஐனவரி 9

பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்துவார் (ஏசா.58:0-11). தேவ பக்தியுள்ள போதகர் ஒருவர் தீராத பிரச்சனை ஒன்றைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்து, தேவனுடைய வழிநடத்துதலை அறிய அதிக தீவிரமாக முயன்று கொண்டிருந்தார். பல காரியங்களில் அவர் தேவசித்தம் இன்னதென தெளிவாகக் கண்டுகொண்டவர். இந்த இக்கட்டான வேளையில் தேவசித்தம் இன்னதென அறிய ஒருநாள் முழுவதும் உபவாசத்திலும், ஜெபத்திலும்…

January

ஐனவரி 8

….. தானியேலைக்குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள். …. அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை (தானி.6:4). தீமோத்தேயு தைரியமற்ற அழுமூஞ்சியாக இருந்தான்.ஆனால் தானியேலோ பெரிய பொறுப்புகளையும், உயர்ந்த பதவிகளையும் பெற்றிருந்தான். அவன் இவ்விதமானமிகச் சிறந்த பதவியையும், மேன்மையையும் தேடவில்லை. ஆனால் அந்த இடத்திற்கு வலியதள்ளப்பட்டான். பிறர் பொறாமைப்படும்படி உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு அரசாங்கத்தில்செல்வாக்கு பெருகும்போது, உயர்ந்த நிலையில் இருப்பது கடினம். அதைவிட அறியாத இடத்தில்உண்மையுள்ளவனாக வாழ்வது நம் யாவருக்கும் எளிது. ஆரம்பம் முதல் கடைசி…

January

ஐனவரி 7

மறைபொருள்களைவெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் (தானி.2:28). மனிதனுடைய அறிவும் ஆற்றலும் குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டது. ஆனால் தேவனுடைய ஆற்றலோ அளவற்றது. தேவனை நம்புகிற பிள்ளைகளுக்கோ எல்லா புத்திக்கு மேலான தேவசமாதானம் உண்டு (பிலி.4:7). கிறிஸ்துவின் அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாக (எபேசி.3:19) இருப்போம். தேவனுடைய கிருபை, பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை, நம்மை விட்டு விலக்கினார். அவரது மன்னிக்கும் சிந்தை எவ்வளவு பெரிது!…

January

ஐனவரி 6

….. அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோ.5:5). நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றுள்ள நாம், தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மை பாராட்டுகிறோம் (ரோ.5:1-2). அதுபோல் உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோமா? (வச.3). உபத்திரவங்களினாலே நமக்கு மகிழ்ச்சி கிட்டாது. ஆனால் முடிவில் அது நமக்கு ஆதாயத்தையே கொடுக்கும். நம்மில் உள்ள பயனற்ற உமியை நீக்கி பயனுள்ள கோதுமை மணியைப்போன்று, ஒரு பிரித்தெடுக்கப்பட்ட வாழ்விற்கென்றே நம்மை உபத்திரவங்கள் நசுக்குகின்றன. உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை…

January

ஐனவரி 5

… ஒருவன் என் பின்னே வர விரும்பினால்… (லூக்.9:23). சீஷனாவதற்குச் சில ஒழுங்குகள் தேவை. ஒழுக்கமுள்ளவன் தான் சீஷன். தன்னுடைய அறியாமை, மூடநம்பிக்கை, பாவம் இவற்றோடு ஆண்டவரிடம் வந்து கற்றுக்கொள்பவன் அல்லது பயிற்சி பெறுபவன் தான் சீஷன். அவன் இரட்சகரிடம் வந்து மன்னிப்பையும், சத்தியத்தையும் பெற்றுக்கொண்டு, அவரிடம் கற்றுக்கொள்ளுகிறான். ஒழுக்கமில்லாதவன் அவரது சீஷனாக இருக்கமுடியாது. அவரது பெயரைச் சொல்லுகிற நாம் அந்த ஏழை நசரேயனுக்குப் பின்செல்ல வேண்டும். இரட்சிப்பு இல்லாமல் அவரது புத்திரராக இருக்க முடியாது. புத்திரனாக…

January

ஐனவரி 4

அதற்குக் கர்த்தர் நீ போ…என்றார் (அப்.9:15) மனிதனுடைய அறிவுக்கும், தெரிந்தெடுத்தலுக்கும் முரணான காரியங்களை நாம் செய்யும்படிக்கு தேவன் அடிக்கடி கட்டளையிடுகிறார். தேவன் வழிநடத்தும்போது நாமும் அனனியாவைப்போலக் கேள்வி கேட்பது இயல்புதான். ஏனெனில் கிறிஸ்தவர்களை நிர்மூலமாக்க ஆதிகாரம் பெற்று, அந்தப் பட்டணத்திற்குள் நுழைந்துள்ள அதே ஆளிடம் போகும்படி அவனுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. அனனியாவுக்குத் தர்சு பட்டணத்தான் சவுலபை;பற்றி பல சந்தேகங்கள் தோன்றுவதற்கு காரணங்கள் பல உண்டு. ஆனால் அவனைப்பற்றி நம்புவதற்குரிய காரணங்கள் ஏதும் இல்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச்…

January

ஐனவரி 3

கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும் (சங்.71:1). குழப்பம், வெட்கம் என்கிற இரண்டுக்கும் எபிரெய மொழியில் ஒரே சொல்தான் உள்ளது. இது எவ்வளவு பொருத்தம். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டோம் எனக் கருதும் மக்களுக்கென்றே இந்த 71ம் சங்கீதம் எழுதப்பட்டுள்ளது எனலாம். இதில் கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் யாவும் தேவனுடைய பிள்ளைகள் யாவருக்கும் கிட்டக்கூடியவை. அவன் தேவனுடைய பிள்ளை. பல ஆண்டுகளாக அவருடன் நடந்தான். அவரையே தன் பலமுள்ள இருப்பிடமாகவும், கன்மலையாகவும் கோட்டையாகவும் (வச.3)…

January

ஐனவரி 2

மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான் (எபி.3:5). இஸ்ரவேலருக்குள் மோசேயைப்போன்ற சிறந்த தலைவனைக் காணமுடியாது. காலங்கள் தோன்றி மறைந்த தலைவர்களுள் சிறந்த தலைவன் என்றே கூறலாம். தலைசிறந்த பெருந்தலைவன் மோசே. இதற்கென அவன் நாற்பதாண்டு காலம் வனாந்தரத்தில் பயிற்சி பெற்றான். இதனால்த்தான் அவன் பார்வோனை எதிர்த்து நிற்கவும், ஒழுங்கீனமான இஸ்ரவேலரை ஒழுங்குபடுத்தி ஒரு பெரும் படையாகத் திரட்ட முடிந்தது. அவன் அவர்களை வானந்தரத்தில் பொறுமையோடும், ஜெபத்தோடும் வழி நடத்தினான். முறுமுறுப்பின்றி தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். தனக்கென ஆதாயம்…