January

ஐனவரி 11

“துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும். சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்” (சங்.74:21)

பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டின் விசுவாசிகள் பலர் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கென பல வேதனைகளையும், பாடுகளையும் அனுபவித்தனர். அவர்களுக்குப் பிரியமானது இந்த 74ம் சங்கீதம் எனலாம். அவர்கள், ‘தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்?” (வச.10) எனக்; கேட்பதில் தவறு இல்லையே! ‘பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறது” (வச.20) என்று அவர்கள் நன்கு அறிவர்.

பயங்கரத்திலும், இருளிலும் சிக்கித் தவிக்கும் உள்ளத்திலிருந்து எழும்பும் ஒப்பாரிப் பாடலைப்போன்று இச்சங்கீதம் அமைந்துள்ளது. சர்வ வல்லமையுள்ள தேவன் மிகுந்த இரக்கமுள்ளவராகவும் இருக்கிறார். அவரது வல்லமையுள்ள செயல்கள் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றன. ஏனெனில், நாம் பூமியில் இருப்பதினால் மனுஷனுக்குரியவற்றையே நோக்குகிறோம். சோதனையில் சிக்கித் தவித்த பரிசுத்தவான்கள் பலர் ஆச்சரியமான விதமாக விடுவிக்கப்பட்டனர். ஆனால், ‘வேறு சிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுக்களையும், காவலையும் அனுபவித்தார்கள், கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள்” (எபி.11:36-37). ஏnனினில், இவர்களுக்கு ‘உலகம் பாத்திரமாயிருக்கவில்லை” இதனால் ‘இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றனர்”.

இப்பொழுதும் நாம் கைவிடப்பட்டவர்களாக இருப்பதுபோல் நமக்குத் தோன்றும். ஆனால் இது உண்மையல்ல. ஏனெனில், இராயனுக்கு முன்பு நின்ற பவுலுடனேகூட இருந்த இரட்சகராகிய இயேசு நம்மோடுகூட இருக்கிறார். வாடாத ஐPவ கிரீடத்தையும் அவர் நமக்கென வைத்துக்கொண்டிருக்கிறார். ஆகவே நாம் இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதுமே வெட்கமடைவதில்லை என்று உறுதி கூறலாமே!