மே 22
மே 22 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் (மத்.5:9). சமாதானம்பண்ணுகிறவர்கள் தங்களுக்குத் தீங்கு செய்கிறவர்களைப்பற்றி கவலைப்படார். தீமைகளைக் கடந்து செல்வர். அதிகமாக அடிக்கப்பட்டாலும் அமைதியுடனிருப்பர். ஏனெனில், தாம் சமாதானம்பண்ண விரும்புவதை அறிகிறவர் ஒருவர் உண்டென அறிந்து அயலாரோடு சமாதானத்துடன் இருப்பர். சமாதானம் பண்ணுகிறவர்கள், ஆண்டவரின் ஆலோசனையின்படி செய்கிறவர்கள். ஏனெனில் அவர், உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில் அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து. அவன் உனக்குச் செவிகொடுத்தால்,…