May

மே 21

மே 21

…. பயப்படாதே, இது முதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் (லூக்.5:10).

நமது இரட்சகரைச் சந்திக்கும் வரையில் சீமோன் பேதுரு சுயநிறைவுள்ளவனாயிருந்தான். யோர்தான் நதிக்கரையில் யோவான் ஸ்நானன், இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டி எனக் கூறிய வார்த்தைகளைக் கேட்டான். இரா முழுவதும் பாடுபட்டு ஒன்றும் கிட்டாமல் சோர்ந்து போன அவன் ஆண்டவரின் கட்டளைப்படி மீண்டும் வலை வீசினான். திரளான மீன்கள் கிட்டியதால் திடுக்கிட்டான். இயேசுவின் பாதத்தில் விழுந்து, ஆண்டவரே நான் பாவியான மனுஷன். நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான் (வச.8)

உண்மையாகவே ஓர் ஆத்துமா இரட்சகரை சந்திக்குமாயின் தன் பாவத்தைக் குறித்தும், தகுதியின்மையைக் குறித்தும் உணர்வடையும். தன் குற்றங்களை உணரும் ஒவ்வொருவரின் நிலையும் இதுவே. ஆகவே பேதுருவே நீ பயப்படாதே! இயேசு கிறிஸ்து இழந்துபோனதைதத் தேடவும், இரட்சிக்கவுமே இவ்வுலகில் வந்தார் (லூக்.19:10). நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல் தமது இரக்கத்தின்படியே …… நம்மை இரட்சித்தார் (தீத்து 3:5). பாவியான பேதுரு இரட்சிக்கப்படான். தேவ பயமற்றவன் நீதிமானாக்கப்பட்டான்.

உன் தோல்விகள், வீழ்ச்சிகள் யாவும் மன்னிக்கப்பட்டு பாவங்கள் கழுவி சுத்திகரிக்கப்படும். ஆகவே நீ பயப்படாதே! இரட்சிக்கப்படாதவர்கள்கூட இயேசுவின்மூலம் பயமின்றி மனுஷரைப் பிடிக்கிறவர்களாக மாறி, இரட்சகர் இயேசுவுக்கென சாட்சியாக நின்று அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும் பணியில் ஈடுபடமுடியும். பயப்படாதே!