May

மே 13

மே 13

இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல. பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் (2.நாளா.20:17)

நாம் எப்பொழுது புறப்பட்டுச் செல்வது? தரித்து நின்று தேவனுடைய இரட்சிப்பைக் காணுவது எப்போ? தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொண்டு, யுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லாத வேளையில் அவருக்கென்று எங்கு யுத்தம் செய்வது?

இக் கேள்விக்குப் பதில் கிடைப்பது கடினம். நமது இரட்சிப்பின் சேனைத் தலைவர் ஆவியானவரின் உதவியால் தமது வார்த்தைகளினால் தெளிவாக்கிக் காட்டுவார். யோசபாத்தின் தகப்பன் ஆசாவைப் போன்று, தேவனுக்கென யுத்தம் செய்ய வேண்டிய வேளைகளும் உண்டு (2.நாளா.14:9.15). தேவனிடம் நம்பிக்கை வைத்து, நம் பலத்தைச் செலவிடாமல் தரித்து நிற்கவேண்டிய வேளைகளும் உண்டு. அப்பொழுது அவர் நம்மைப் பார்த்து, நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்… இந்த யுத்தம் உங்களுடையதல்ல. தேவனுடையது (20:15). எனக் கூறுவார்.

நம் எல்லாப் பாரத்தையும் அவர்மீது வைத்துவிட்டு ஒன்றுக்கும் கவலைப்படாமல் இருப்போமாயின் உள்ளத்தில் இளைப்பாறுதலைக் கண்டடைவோம். பயமின்றி நாமும் தரித்து நின்று கர்த்தர் செய்யும் இரட்சிப்பைக் காணமுடியும். வேதம் கூறும் உறுதியும், ஆவியானவரின் ஆறுதலான வார்த்தைகளும் நமக்கு தைரியமளிக்கும்.