May

மே 19

மே 19

எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப் பட்டதோ, அவன் பாக்கியவான் (சங்.32:1).

நாம் செய்த தவறுகள், முறைகேடுகள், உள்ளத்தின் ஆழத்தில் தேங்கிக் கிடக்கும் பாவம் போன்றவைதான் உண்மையான மனந்திரும்புதலுக்கும், பாவ மன்னிப்பிற்குனும் தடையாக உள்ளது. சால்லஸ் பின்னியைப் பெருமை தடைசெய்தது. தன் சட்டப் புத்தகங்களுக்கு இடையே வேதாகமத்தை வைப்பதற்கு வெட்கப்பட்டு அதை ஒளித்து வைத்தார். அதன்பின்பு அவர் ஜெபித்தபோது அவர் இருதயம் கடினப்பட்டு, ஜெபிப்பதற்கு உதடுகளில் சப்தம் எழவில்லை.

வில்லியம் பூத்துக்கு தடையாக இருந்தது ஒரு வெள்ளியால் செய்யப்பட்ட பென்சில் பெட்டி, அவர் பதினைந்து வயதாயிருந்தபோது தெளிவாக சவிசேஷத்தைக் கேட்டு, உள்ளத்தில் குத்தப்பட்டார். ஆயினும் அவர் இரட்சிப்படையாமல்தான் இருந்தார். அப்பொழுதுதான் அவன் தன் நண்பன் ஒருவனிடம் வெள்ளிப் பெட்டியை ஏமாற்றியதை நினைவுகூர்ந்தார். அவனைத் தேடிக் கண்டுபிடித்து குற்றத்தை அறிக்கையிட்டார். அதைப்பற்றி, என் உள்ளத்திலிருந்த அந்த குற்ற உணர்வின் பாரம் என்னிலிருந்து உருண்டு ஓடிற்று. அந்த இடத்தில் சமாதானம் நிறைந்தது. அந்நேரமுதல் நான் தேவனுக்கென தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்யத் தீர்மானித்துச் செயல்ப்பட்டேன் எனக் கூறியுள்ளார்.

பாவ உணர்வின் வேதனையை அனுபவித்த உள்ளத்தில் இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பாவம் மன்னிக்கப்பட்டு, பாக்கியமுள்ள வாழ்வினை பெற்று தேவனைத் துதிக்கும். இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம் (ரோ.5:1).