யூன் 21
யூன் 21 அவருடைய வார்த்தையை விசுவாசியாமல்… முறுமுறுத்தார்கள் (சங்.106:24-25). தரித்திர நிலையில் இருக்கும் சிலரைப்போன்று முறுமுறுக்கவேண்டாம். இஸ்ரவேலர் ஏன் முறுமுறுக்கவேண்டும்? அவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் மேகஸ்தம்பம் இருந்தது. அக்கினி ஸ்தம்பம் எதிரிகளைத் தடுத்து, இரவில் கூடாரங்களுக்கு ஒளியைக் கொடுத்துக்கொண்டும் இருந்தது. மோசே அவர்களை வழிநடத்தும் தலைவனாக இருந்தான். வானத்து மன்னா ஆகாரமாயும், கன்மலையின் தண்ணீர் பானமாகவும், கிழியாத உடைகளும் அவர்களுக்கு அருளப்பட்டடிருந்தது. இவ்வளவு வசதிகள் இருந்தும் அவர்கள் தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தனர்! அவர்கள் அவருடைய வார்த்தையை…