மே 2
மே 2 ….. பயப்படாதிருங்கள். நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள் (யாத்.14:13). நம்முடைய வாழ்விலும் பலமுறை கொடிய எஜமானாகியபார்வோனுக்கும், சிவந்த சமுத்திரத்திற்கும் நடுவே நிற்பதாகக் கூறியுள்ளோம். இப்படிப்பட்டஇக்கட்டில் சிக்கித் தவிப்பது வேதனைக்குரியது. இஸ்ரவேலர் அவர்களது பழைய கொடிய எஜமானாகியபார்வோனுக்கும், சிவந்த சமுத்திரத்திற்கும் நடுவே மாட்டிக்கொண்டனர். இரண்டு பக்கமும்தப்பிக்க வழியின்றி தவித்தனர். நம்மைப்போன்ற மனிதர்களாகிய அவர்கள் தேவனை நோக்கிக்கூப்பிடுவதை மறந்து மோசேயை நோக்கிக் கூக்குரலிட்டனர். இப்படிப்பட்ட சம்பவங்கள் நம் ஸ்தாபனங்களில் நிகழுவது சகஜம்.…