May

மே 1

மே 1

சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.94:13).

தம்முடைய பிள்ளைகளைத் தண்டித்துத்திருத்துவதற்கென தேவன் அவர்களுடைய அயலாரைப் பயன்படுத்துகிறார். அவர் இரக்கத்தினாலும்கிருபையினாலும் நமக்கு இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்குகிறார். நாம் நமது தவறுகளைத்திருத்திக்கொள்ளவும், கிறிஸ்தவ வாழ்வில் பலப்படவும், கடின இருதயத்தை நீக்கிப்போடவும்,நம் சூழ்நிலையினை இனிமையாக்கிக் கொள்ளவும் வேண்டும் என்பதற்காகவே அவர் இடுக்கண்களைஅனுமதிக்கிறார்.

1935ம் ஆண்டு இத்தாலியப் படைகள்எத்தியோப்பியாவிற்குள் புகுந்து அங்குள்ள மிஷனறிகளை விரட்டிவிட்டனர். இதனால் இளம்விசுவாசிகள் மேய்ப்பனற்ற மந்தையைப் போலாயினர். அநேக ஆண்டுகட்குப் பின்னர் மிஷனறிகள்திரும்பினபோது தாங்கள் விட்டுப்போன தேவஊழியத்தைதத் தொடர்ந்து செய்வதற்கானவாய்ப்புகள் இராதென எதிர்பார்த்தனர். ஆனால் அங்கோ அவர்கள் விட்டுச்சென்றநூற்றுக்கணக்கான சபைகளுக்குப் பதிலாக பல்லாயிரக்கணக்கான சுதேச சபைகள் உருவாகியிருந்தன.

குழப்பம் நம்மைக் குருடராக்கிவிடுவதால் பலமுறைதேவன் நமக்கென வைத்திருக்கும் நன்மைகளையும், அவர் நம்மை சீர்படுத்துவதையும் நாம்மறந்துவிடுகிறோம். அவர் நம்மை நித்தியத்திற்கென மாசற்றவர்களாய் நடத்துகிறார்.அப்பொழுதுதான் நாம், அதி சீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம்அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என அறிவோம்.