January

வாக்குறுதியைப் பற்றிக்கொள்வோம்

2024 ஜனவரி 21 (வேத பகுதி: 2 சாமுவேல் 7,17 முதல் 29 வரை) “இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்” (வசனம் 25). கர்த்தர் தனக்குச் சொன்னதை மிகைப்படுத்துதலோ அல்லது குறைவுபடுத்துதலோ இல்லாமல் நாத்தான் தாவீதிடம் அறிவித்தான். இது நாத்தானின் உண்மைத்தன்மையையும் வெளிப்படத் தன்மையையும் காண்பிக்கிறது. தாவீதுக்குத் தேவையானவற்றைச் சொல்வதற்காகக் கர்த்தர் தன்னையே தெரிந்துகொண்டார் என்ற எவ்விதப் பெருமையும் சுயகௌரவமும்…

January

தாவீதுடன் உடன்படிக்கை

2024 ஜனவரி 20 வேதபகுதி (2 சாமுவேல் 7,8 முதல் 16 வரை) “அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்” (வசனம் 13). நீ எனக்கு ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று விருப்பப்படுகிறாய். இது நல்ல காரியம்தான். ஆயினும் நான் ஒருபோதும் அவ்வாறு கேட்கவில்லையே? உங்கள் முன்னோர்கள் எகிப்திலிருந்து வெளியேறி வந்த நாள் முதல் நான் கூடாரங்களில் வாசம்செய்வதையே தெரிந்துகொண்டேன். எகிப்திய கடவுள்களைப் போல நான் மாடமாளிகைகளிலும்…

January

பிறருக்காகவும் வாழ்வோம்

2024 ஜனவரி 19 வேத பகுதி (2 சாமுவேல் 7,4 முதல் 7 வரை) “அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி…” (வசனம் 4). “கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்” (சங்கீதம் 119 ,55) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, அந்த இரவில் நாத்தானுக்கு கூடுதல் வெளிச்சம் கிடைத்தது. கர்த்தர் அவனோடு பேசினார். தான் இதுவரை பேசினதற்கு மாற்றாகக் கர்த்தர் பேசுவதைக் கேட்கிற அளவுக்குத் திறந்த செவியும் கீழ்ப்படிதலுள்ள இருதயமும் அவனுக்கு…

January

கர்த்தர் வசிக்கிற இருதயம்

2024 ஜனவரி 18 வேத பகுதி (2 சாமுவேல் 7,1 முதல் 3 வரை) “ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்” (வசனம் 2). “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்” (16,7) என்ற நீதிமொழிக்கு ஏற்ப, கர்த்தர் தாவீது ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினார். தாவீது கேதுரு…

January

மகிழ்ச்சிக்கு இடையூறு

2024 ஜனவரி 17 வேத பகுதி (2 சாமுவேல்  6,16 முதல் 23 வரை) “சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப் போடுகிறதுபோல இன்று தம்முடைய ஊழியக்காரருடைய கண்களுக்கு முன்பாக தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் இராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள் (வசனம் 20). தேவனுடைய பெட்டி மகிழ்ச்சியுடன் எருசலேமில் நிலைநிறுத்தப்பட்ட நாளில் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்குபெற்று மகிழ்வுடன் விடைபெற்றுச் சென்றபோது எருசலேமில் வசித்த…

January

ஆசீர்வாதத்தின் இரகசியம்

2024 ஜனவரி 16 வேத பகுதி (2 சாமுவேல் 6,12 முதல் 15 வரை) “தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத் ஏதோமையும் அவன் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசிர்வதித்தார்” *( வசனம் 12). உடன்படிக்கைப் பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. கர்த்தர் அக்குடும்பத்தை ஆசீர்வதித்தார். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கிறார் என்ற காரியம் பிறருக்கும் தெரிய வந்தது. அது பின்னர் தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. வார்த்தையாகிய கிறிஸ்து கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார்.…

January

கோபத்தின் காரணம்

2024 ஜனவரி 15 வேத பகுதி (2 சாமுவேல் 6,7 முதல் 11 வரை) “கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் மூண்டது” (வசனம் 7). பெட்டி ஆசாரியர்களால் தோள்களில் தூக்கிச் செல்வதைக் காட்டிலும், ஒரு வண்டியில் ஏற்றிச் செல்வது ஒரு சிறந்த நடைமுறைக் காரியமாக தாவீதுக்குத் தோன்றியது. அவ்வாறே பெட்டி சாயும்போது அதைத் தொடுவது ஊசாவுக்கு நலமானதாகத் தோன்றியது. ஆனால் தேவனைப் பொறுத்தவரை அது ஒரு தவறான செயல். அவருடைய வார்த்தைக்கு மாற்றான ஒன்றை யோசிப்பதையும் அதன்படி செய்வதையும்…

January

சோதனையில் நம்பிக்கை

2024 ஜனவரி 14 (வேத பகுதி: 2 சாமுவேல் 6,6) “அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்” (வசனம் 6) கர்த்தருடைய பெட்டி நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு, அது அசைந்தது. சர்வ வல்ல கடவுளாலும், சர்வ ஞானியாகிய கடவுளாலும் இந்தப் பிரபஞ்சத்தில் சகலமும் கட்டுப்படுத்தப்படுகின்றன எனவும், இயக்கப்படுகின்றன எனவும் நாம் விசுவாசிப்போமானால் இந்தக்…

January

சரியானது தவறான முறையில்

2024 ஜனவரி 13 (வேத பகுதி: 2 சாமுவேல் 6,1 முதல் 5 வரை) “கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுது கொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி…” (வசனம் 2). தேவனுடைய பெட்டி என்பது அவருடைய மகிமையும் பிரசன்னமும் இஸ்ரவேலின் நடுவில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக மோசேயின் காலத்தில் செய்யப்பட்டு கனத்துக்குரியதாக விளங்கிய இந்தப் பெட்டி, இப்பொழுது மக்களால் மறக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது வருத்தத்திற்கு உரிய காரியமே. அதைத் தலைநகராம்…

January

கர்த்தரிடத்தில் வழிகேட்டல்

2024 ஜனவரி 12 (வேத பகுதி: 2 சாமுவேல் 4,13 முதல் 25 வரை) “தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல் …” (வசனம் 23). சமஸ்த இஸ்ரவேலரும் தாவீதைத் தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்டார்கள். தாவீது சவுலின் குடும்பத்தாரின்மீது வெற்றி பெற்றான். தாவீதுக்கு இப்பொழுது உள்நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை எதிரிகளும் இல்லை. “தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்” (வசனம் 10). ஆனால் இந்த வெற்றி  வெளியில் இருந்து…