March

உணர்விலிருந்து ஒரு பாடல்

2024 மார்ச் 31 (வேத பகுதி: 2 சாமுவேல் 22,5 முதல் 20 வரை) “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று” (வசனம் 7). செங்கடலைக் கடந்த பின்னர் இஸ்ரவேல் மக்கள் பாடியதுபோலவும், எதிரிகள் அழிந்ததால் தெபோராளும் பாராக்கும் பாடியதுபோலவும், தன் ஜெபங்களுக்குப் பதில் கிடைத்த பின்னர் அன்னாள் பாடியதுபோலவும் தாவீது தன்னுடைய ஆபத்தில், இக்கட்டான…

March

அனுபவத்திலிருந்து ஒரு பாடல்

2024 மார்ச் 30 (வேத பகுதி: 2 சாமுவேல் 22,1 முதல் 4 வரை) “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்” (வசனம் 2).     இந்தப் பாடல் தாவீதின் இறுதி வார்த்தைகளாகத் தோன்றுகிறது. தாவீதின் வாழ்க்கையில் இதுவரையிலும் கர்த்தர் அவனை நடத்தியதற்காக அவனது உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு சுருக்கமான நன்றிப் பாடலாக இதைக் கருதலாம். இந்தப் பாடல், சில கருத்துகளைத் தவிர, அவன் இயற்றிய பதினெட்டாம் சங்கீதத்தைப் போலவே உள்ளது. பதினெட்டாம் சங்கீதம் அவர்…

March

ஓய்வுபெறுதல்

2024 மார்ச் 29 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,15 முதல் 22 வரை) “தாவீது விடாய்த்துப்போனான்” (வசனம் 15). நாட்டின் ஆசீர்வாதத்திற்குத் தடையாயிருந்த சவுலின் குடும்பத்தாரில் ஏழு பேர் தூக்கிலிடப்பட்ட பின்னர், தாவீது எதிர்கொள்ள வேண்டிய அடுத்த பிரச்சினை காத்துக்கொண்டிருந்தது. “பின்பு பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்” (வசனம் 15) என்று வாசிக்கிறோம். நாம் ஒவ்வொரு நாளும் ஆவிக்குரிய போரை நடத்த வேண்டும். இந்த வேதபகுதி, பெலிஸ்தியரின் நான்கு ராட்சதர்கள் தாவீதுக்கும் அவனுடைய சேவகர்களுக்கும் எதிராக வந்தார்கள்…

March

காரணத்தை ஆராய்தல்

2024 மார்ச் 28 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,10 முதல் 14 வரை) “அங்கே இருந்து அவர்களைக் கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடே சேர்த்து … அடக்கம்பண்ணுவித்தான்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்” (வசனம் 13 முதல் 14). கர்த்தருடைய சமுகத்தில் மலையின்மேல் தூக்கிலிடப்பட்ட எழுவரில் இருவரின் தாய் ரிஸ்பாள் அந்தப் பாறையின்மீது இரட்டுப் புடவையை விரித்து, அந்த உடல்களை பறவைகளோ, விலங்குகளோ  சேதப்படுத்தாவண்ணம் பாதுகாத்தாள். அறுவடை தொடங்கியது முதல் மழை பெய்யும்வரை…

March

பரிகாரம் செய்தல்

2024 மார்ச் 27 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,4 முதல் 9 வரை) “நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான்” (வசனம் 3). தாவீது ஒரு ராஜாவாக நீங்கள் இன்னின்னபடி செய்ய வேண்டும் என்று உத்தரவிடாமல், நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படி நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கிபியோனியரிடம் தாழ்மையுடன் கேட்டான். ஒரு ராஜாவாக அல்லாமல், ஒரு வேலைக்காரனைப் போல நான் என்ன செய்ய வேண்டும்…

March

மனதின் நோக்கம்

2024 மார்ச் 26 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,2 முதல் 3 வரை) “அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; … சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும் யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்” (வசனம் 2). தாவீது தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்திற்கான காரணத்தை முதலாவது கர்த்தரிடத்தில் விசாரித்தான். சவுல் அரசனாக இருக்கும் போது கிபியோனியரைக் கொன்றுபோட்ட குற்றத்திற்காகப் பஞ்சம் ஏற்பட்டது என்று கர்த்தர் உணர்த்தினார். சவுல் இஸ்ரவேல் நாட்டின் மீது கொண்ட வைராக்கியத்தால் செய்தான்…

March

உடன்படிக்கையில் உண்மை

2024 மார்ச் 25 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,1) “தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்” (வசனம் 1). தாவீது அரசாண்ட காலத்தில் மூன்றாண்டுகள் தொடர்ந்து பஞ்சம் உண்டாகியது. முதலிரண்டு ஆண்டுகளில் அவன் அந்தப் பஞ்சத்தை இயல்பானதாக எடுத்துக்கொண்டான். மூன்றாம் ஆண்டும் தொடர்ந்தபோதோ அவன் அதைக் குறித்து கர்த்தரிடம் விசாரித்தான். பல நேரங்களில் நாமும் குறைவுகளோ, கஷ்டங்களோ, பிரச்சினைகளோ உண்டாகும்போது அவற்றை இயல்பான ஒன்றாகவே எடுத்துக்கொள்கிறோம்.…

March

ஆலோசனை முக்கியம்

2024 மார்ச் 24 (வேத பகுதி: 2 சாமுவேல் 20,23 முதல் 26 வரை) “யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள்” (வசனம் 23). தாவீது மீண்டும் அரசராகப் பொறுப்பேற்ற பின்னர் தன்னுடைய அமைச்சரவையை சற்று மாற்றி அமைத்தான். இந்த அமைச்சரவையில் யோவாப், பெனாயா, அதோராம், சேவா, சாதோக், அபியத்தார், ஈரா ஆகியோருடைய பெயர்களைக் காண்கிறோம். தாவீது கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவனாகவும், புத்திசாலித்தனமும் சாதுர்ய ஞானமுள்ளவனாயிருந்தாலும் தனியொருவனாக ஒரு நாட்டை…

March

சமாதானத்தை நாடுவோம்

2024 மார்ச் 23 (வேத பகுதி: 2 சாமுவேல் 20,14 முதல் 22 வரை) “அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்ட வரச் சொல்லுங்கள் என்றாள்” (வசனம் 16). சேபா ஒளிந்துகொண்டிருந்த ஆபேல் பட்டணத்தை யோவாப் சுற்றி வளைத்தான். அவனை அந்த நகரத்தோடு சேர்த்து அழிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகளை எடுத்தான். ஆனால் அங்கிருந்த ஒரு புத்தியுள்ள பெண்ணால் இந்த அழிவு தடுக்கப்பட்டது. “பூர்வகாலத்து ஜனங்கள்…

March

வஞ்சகம் வேண்டாம்

2024 மார்ச் 22 (வேத பகுதி: 2 சாமுவேல் 20,8 முதல் 13 வரை) “யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, … தாடியைப் பிடித்து,.. வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்” (வசனம் 9 முதல் 10).     மக்கள் பிளவுபட்டபோது, அந்த வாய்ப்பை பிக்கிரியின் குமாரன் சேபா தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொண்டான். ஆனால் மக்களோ கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புக் கிடைத்தும் அதைத் தவறவிட்டுவிட்டார்கள். தாவீது,…