March

தாமதம் வேண்டாம்

2024 மார்ச் 21 (வேத பகுதி: 2 சாமுவேல் 20,3 முதல் 7 வரை) “அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்தகாலத்திலே வராமல் தாமதித்திருந்தான்” (வசனம் 5). தாவீது எருசலேமிலுள்ள தன் அரண்மனைக்குத் திரும்பி வந்தவுடன், அதைக் காவல்காக்கும்படி வைத்துப் போயிருந்த பத்து மறுமனையாட்டிகளை வரவழைத்து அவர்கள் அனைவரையும் தனியே வீட்டுச் சிறையில் அடைப்பதுபோல அடைத்துப் பராமரித்தான் (காண்க: வசனம் 3). தன் மகன் அப்சலோம் இவர்களிடம் தவறாக நடந்துகொண்டதினித்தம், தாவீதும் அவர்களிடத்தில் பிரவேசிக்க…

March

கிரியையோடுள்ள விசுவாசம்

2024 மார்ச் 20 (வேத பகுதி: 2 சாமுவேல் 20,1 முதல் 2 வரை) “அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்” (வசனம் 1). அப்சலோமால் உண்டான பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதற்குள் பென்யமீன் கோத்திரத்து சேபாவினால் அடுத்த பிரச்சினை எழும்பியது. அவன் தற்செயலாய் அங்கே இருந்தான், ஆயினும் அவன் சூழ்நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான். பட்டயம் உன் வீட்டை விட்டு என்றென்றைக்கும் நீங்காது…

March

கோபம் கொள்ளாமை

2024 மார்ச் 19 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,40 முதல் 43 வரை) “இதற்காக நீங்கள் கோபிப்பானேன்” (வசனம் 42). தாவீது யோர்தானைக் கடந்து கில்காலுக்கு வந்தான். யூதா கோத்திரத்தார் ராஜாவை முதலாவது வரவேற்று அழைத்துச் செல்லவேண்டும் என்பதில் மும்முரமாயிருந்தார்கள். ஆனால் தங்கள் சகோதரராகிய பிற இஸ்ரவேல் மக்கள் இதைக் குறித்து என்ன நினைப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ளத் தவறினார்கள். இஸ்ரவேலர் வந்து, “எங்கள் சகோதரராகிய யூதாமனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்து வந்தது என்ன?” என்னும் கேள்வியை…

March

பிறர் நலன் நாடுதல்

2024 மார்ச் 18 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,31 முதல் 39 வரை) “இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்” (வசனம் 37). தாவீது எருசலேமுக்கு மீண்டும் ராஜாவாகத் திரும்பி வருகையில் நடைபெற்ற நிகழ்வுகள், அதாவது சீமேயிக்கு மன்னிப்பு, மேவிபோசேத்துக்கு நீதி வழங்குதல், பர்சிலாவுக்கு வெகுமதி வழங்குதல் போன்றவை நம்முடைய ஆண்டவருடைய இரண்டாம் வருகையில் நடைபெறப் போகிற காரியங்களுக்கு ஒத்ததாக இருக்கின்றன. தாவீது…

March

சுயவெறுப்பின் வாழ்க்கை

2024 மார்ச் 17 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,24 முதல் 30 வரை) “இன்னும் நான் (மேவிபோசேத்) ராஜாவிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்” (வசனம் 28). யோனத்தானின் மகனும், சவுல் வீட்டாரில் உயிரோடு இருக்கும் கடைசி வாரிசும், தாவீதின் அரண்மனையில் நாள்தோறும் பந்தியில் பங்குபெற்றவனுமாகிய மேவிபோசேத் ராஜாவை சந்திக்க வந்தான். ராஜா அப்சலோமுக்குத் தப்பி ஓடுகையில் தானும் உடன் செல்வதற்கு ஆயத்தமாயிருந்தான். ஆனால் இவனுடைய வேலைக்காரனாகிய சீபாவினால் ஏமாற்றப்பட்டதுமின்றி, இவனைப்…

March

சுயநலம் வேண்டாம்

2024 மார்ச் 16 (வேதபகுதி: 2 சாமுவேல் 19,15 முதல் 23 வரை) “(சீமேயி) இதோ, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு எதிர்கொண்டுவர, யோசேப்பு வீட்டார் அனைவருக்கும் நான் இன்று முந்திக்கொண்டேன் என்றான்” (வசனம் 23). யூதா கோத்திரத்தாரின் அழைப்பை ஏற்று தாவீது மக்னாயீமை விட்டு புறப்பட்டு யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தான். தாவீதுக்கும் அவனுடைய மனிதர்களுக்கும் ஆற்றைக் கடக்க உதவி செய்யும்படி யூதா கோத்திரத்தாரும் கில்கால் வரைக்கும் வந்தார்கள். இந்தக் கில்கால் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்.…

March

ஒருமனம்

2024 மார்ச் 15 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,11 முதல் 15 வரை) “நீங்கள் என் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்” (வசனம் 12). நாடு முழுவதும் தாவீது மீண்டும் ராஜாவாக வேண்டும் என்று பேச்சு இருந்தாலும், குறிப்பாக அப்சலோமுக்காக தன்னை முதலாவது நிராகரித்த தன் சொந்த யூதா கோத்திரத்தார் தன்னை எருசலேமுக்கு வரவேற்க வேண்டும் என்னும் முடிவு செய்தான். ஆனால் அவர்களோ…

March

நிலையான கொள்கையைப் பின்பற்றுதல்

2024 மார்ச் 14 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,9 முதல் 10 வரை) “(இஸ்ரவேலர்) இப்போதும் ராஜாவைத்திரும்ப அழைத்து வராமல் நீங்கள் சும்மாயிருப்பானேன் என்று சொல்லிக்கொண்டார்கள்” (வசனம் 10). அப்சலோமின் மரணத்துக்குப் பிறகு நாட்டு மக்கள் குழப்பத்தில் இருந்தார்கள். அப்சலோம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டான். அது நடைபெறவில்லை. ஆயினும் தாவீது மீண்டும் அரியணையில் அமரவில்லை. இந்தச் சூழ்நிலையில் மக்கள் தங்களது அறியாமையையும் தவறாக முடிவெடுத்ததையும் குறித்து ஒருவருக்கொருவர் விவாதங்களில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அவர்கள்…

March

துக்கத்திலிருந்து மீளுதல்

2024 மார்ச் 13 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,1 முதல் 8 வரை) “ ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம் நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்” (வசனம் 2). தாவீது அப்சலோமின் இறப்பினிமித்தம் மிகுந்த துக்கம் அடைந்தான், இடைவிடாமல் அவனை நினைத்து அழுதுகொண்டிருந்தான். துக்கமும் அழுகையும் பல நேரங்களில் அவநம்பிக்கை மற்றும் சுயநலத்துடன் தொடர்புடையது. அன்பானவர்களைப் பறிகொடுத்த உறவினர்கள் எதிர்கால நம்பிக்கை அற்றவர்களாக அழுகிறதை நாமும் பல இடங்களில் கண்டிருக்கிறோம். இது தாவீதுக்காக போரிட்ட…

March

மெய்யான அன்பு

2024 மார்ச் 12 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,28 முதல் 33 வரை) “என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்” (வசனம் 33). அகிமாசோ அல்லது கூஷியோ இவர்களுடைய செய்தி என்னவாயிருந்தது என்பதைக் காட்டிலும் அப்சலோம் எப்படி இருக்கிறான் என்பதைக் குறித்தே தாவீதின் எண்ணம் இருந்தது. நாட்டின் மீது பற்றுள்ளவனாக அப்சலோமை அழிக்கப் படையை அனுப்பினான். அதேவேளையில் மகன்மீது அன்புள்ளவனாக “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா” என விசாரித்தான். எந்தக் காலத்திலும், எத்தகைய…