January

இழந்த வெற்றியைப் பெறுதல்

2024 ஜனவரி 31 (வேத பகுதி: 2 சாமுவேல் 12,26 முதல் 31 வரை) “அவர்களுடைய ராஜாவின் தலைமேலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; … அது தாவீதினுடைய தலையில் வைக்கப்பட்டது” (வசனம் 30). தேவனுடைய மன்னிப்பானது பாவிகளை இரட்சிக்கக்கூடாதபடி குறுகிய எல்லைக்குட்பட்டதல்ல, அதுபோலவே பின்மாற்றம் அடைந்தோரையும் மன்னிப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்: “நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று” (யோசியா 14,4). நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருந்தபோது, அவரால் நம்மை…

January

இழந்த சந்தோஷத்தைப் பெறுதல்

2024 ஜனவரி 30 (வேத பகுதி: 2 சாமுவேல் 12,15 முதல் 25 வரை) “பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, … அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்; அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார்” (வசனம் 24). நாத்தான் அங்கிருந்து புறப்பட்டவுடன் தாவீது தன்னுடைய பாவத்தைக் கர்த்தரிடம் அறிக்கை செய்தான். ஒருவன் பாவம் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து பின் சந்ததியினரும் அறிந்துகொள்ளும்படி அதைக் கவிதையாக எழுதியும்…

January

பாவத்தை அறிக்கையிடுதல்

2024 ஜனவரி 29 (வேத பகுதி: 2 சாமுவேல் 12,1 முதல் 14 வரை)  “தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்” (வசனம் 13). நாத்தான் வாயிலாக தாவீதின் பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டது. ஏறத்தாழ ஓராண்டு காலம் அவன் பாவத்தை மூடிமறைத்தான். தேவனுடைய அன்புள்ள சிட்சையின் காரணமாக அது வெளியே தெரிந்தது. இந்தக் காலங்களில் தான் அடைந்த உணர்வுகளை சங்கீதம் 32…

January

மாம்சத்தில் நடந்துகொள்ளுதல்

2024 ஜனவரி 28 (வேத பகுதி: 2 சாமுவேல் 11,1 முதல் 27 வரை) “துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை (பத்சேபாளை) அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது” (வசனம் 27). தாவீதின் வாழ்க்கையில் நேரிட்ட சோகமான சம்பவங்களில் ஒன்று இது. இது ஏதேச்சையாகவோ அல்லது சடுதியாகவோ நடந்த ஒன்றல்ல. இது அவனுடைய அந்தரங்க வாழ்க்கையில் ஏற்பட்ட படிப்படியான…

January

ஆவிக்குரிய போரை எதிர்கொள்ளுதல்

2024 ஜனவரி 27 (வேத பகுதி: 2 சாமுவேல் 10,6 முதல் 19 வரை)    “அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்” (வசனம் 7). தாவீது அம்மோனியர்களுடன் சமாதானமாக இருக்க எண்ணினான். அவர்களோ போருக்கு வந்தார்கள். தாவீதால் அனுப்பப்பட்ட தூதுவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டதன் காரணமாக அவர்கள் துணிகரங்கொண்டார்கள். ஆனால் இந்த முறை தாவீது சமாதானத்தின் தூதுவர்களை அல்ல, யோவாப் தலைமையில் நன்கு பயிற்சி பெற்ற பராக்கிரமசாலிகளாகிய சிறப்புப் படையை அனுப்பினான். இந்த…

January

உலகத்தால் பகைக்கப்படுதல்

2024 ஜனவரி 26 (வேத பகுதி: 2 சாமுவேல் 10,1 முதல் 5 வரை “தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயைசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்” (வசனம் 2). தாவீதின் இரக்கம் மேவிபோசேத்தோடு நிற்கவில்லை, அதை எல்லை கடந்து ஒரு புறமத அரசன் வரைக்கும் சென்றது. அம்மோனின் அரசன் நாகாஸ் எனக்குத் தயவு செய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு…

January

கிருபையின் ஆசீர்வாதம்

2024 ஜனவரி 25 (வேத பகுதி: 2 சாமுவேல் 9,9 முதல் 13 வரை) “மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது” (வசனம் 13). தாவீதின் அழைப்பு மேவிபோசேத்தின் சூழ்நிலையை மாற்றியது. அவன் இனிமேலும் லோதேபார் என்னும் வறட்சியான பூமியில் வசிக்க வேண்டியதில்லை. அவன் ராஜவிருந்தில் நாள்தோறும் பங்குபெறும் பாக்கியம் பெற்றான். சீபாவும் அவனுடைய மகன்களும் மேவிபோசேத்தின் வேலைக்காரரானார்கள். தாவீது தனக்கு உரிய எல்லாவற்றின்மேலும் மேவிபோசேத்துக்கும் சுதந்தரம் கொடுத்தான்.…

January

கிருபையின் இரட்சிப்பு

2024 ஜனவரி 24 (வேத பகுதி: 2 சாமுவேல் 9,5 முதல் 8 வரை) “சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்” (வசனம் 6). தாவீதின் தயை பாராட்டுதலுக்கான தேடலில் விடையாகக் கிடைக்கப்பெற்றவன் மேவிபோசேத். இவன் யோனத்தானின் மகன், பிறருடைய ஒத்தாசையின்றி வாழ இயலாத ஊனமுற்றவன். தாவீதுக்குப் பயந்து லோதேபாரில் மாகீரின் வீட்டில் ஒளிந்துகொண்டிருந்தவன். இவன் இழந்துபோன ஒரு…

January

தயவுபாராட்டுதல்

2024 ஜனவரி 23 (வேத பகுதி: 2 சாமுவேல் 9,1 முதல் 4 வரை) “யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்” (வசனம் 1). முந்தின அதிகாரம் (அதிகாரம் 8) தாவீது அரசனின் வெற்றிகளையும் அவனுடைய புகழ்ச்சிகளையும் அவனுடைய மகிமையையும் விளக்குகிறது. இந்த அதிகாரமோ தாவீது அரசன் மனிதர்மேல் கொண்டிருக்கிற தயவை நம் கண்முன் கொண்டுவருகிறது. மேலும் கர்த்தருக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து…

January

வெற்றிமேல் வெற்றி

2024 ஜனவரி 22 (வேத பகுதி: 2 சாமுவேல் 8,1 முதல் 18 வரை) “தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்” (வசனம் 6). தாவீது கர்த்தருடைய வாக்குறுதியால் பலப்படுத்தப்பட்டான். அவர் அவனுக்கு வெற்றிமேல் வெற்றியைக் கட்டளையிட்டார். தாவீது முதலாவது பெலிஸ்தியர்களைத் தோற்கடித்து தனக்குக் கீழாகக் கொண்டுவந்தான். இவர்கள் பலநாள் எதிரிகள், தொடர்ந்து தொந்தரவு செய்துவந்தவர்கள். இஸ்ரவேலர் பலமுறை இவர்களிடம் வீழ்ந்துபோயினர். இப்பொழுது தாவீது அவர்கள் மேல் முழு வெற்றியைப் பெற்றான். நாம் கர்த்தருடைய வார்த்தையாலும்,…