February

ஞானத்தைக் காட்டிலும் பெரியது

2024 பிப்ரவரி 29 (வேத பகுதி: 2 சாமுவேல் 17,5 முதல் 14 வரை) “அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்” (வசனம் 14). தாவீதைக் கொல்வதற்கான அகித்தோப்பேலின் ஆலோசனை சிறந்ததுதான் என்பதை அப்சலோம் அறிந்திருந்தான். ஆயினும் தன்னைச் சேவிக்கும்படி வந்திருக்கிற ஊசாயின் ஆலோசனையையும் கேட்போம் என்னும் அப்சலோமின் முடிவு அகித்தோப்பேலின் ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றிப்போட்டது. ஊசாய் அப்சலோமின் பெருமைக்கு தீனிபோடும் விதமாக, படையை அகித்தோப்பேல் அல்ல,…

February

உலக ஞானத்தின் தோல்வி

2024 பிப்ரவரி 28 (வேத பகுதி: 2 சாமுவேல் 17,1 முதல் 4 வரை) “இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்” (வசனம் 14). அகித்தோப்பேல் அப்சலோமின் ஆலோசனைக் குழுவில் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தான். அவன் தாவீதைத் தோற்கடிப்பதற்கு சூழ்நிலைக்கேற்ற, தந்திரமான சரியான ஆலோசனையைக் கூறினான். இவனுடைய ஆலோசனையைக் கேட்டிருந்தால் ஒருவேளை தாவீது தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் மனிதருடைய எல்லா ஆலோசனைகளின்மீதும் கர்த்தர் மேலாதிக்கம் செய்து திட்டங்களை மாற்றுகிறார்.…

February

பிளவுகளை உருவாக்க வேண்டாம்

2024 பிப்ரவரி 27 (வேத பகுதி: 2 சாமுவேல் 16,20 முதல் 23 வரை) “அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனையெல்லாம் தேவனுடைய வாக்கைப்போல இருந்தது, அப்படியே அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது” (வசனம் 23). “அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்” (வசனம் 20). அப்சலோம், உடன்படிக்கைப் பெட்டியோடு எருசலேமுக்குத் திரும்பி வந்திருக்கிற ஆசாரியனாகிய சாதோக்கிடமோ அல்லது அபியத்தாரிடமோ ஆலோசனை கேட்டிருந்தால் அவனுடைய ராஜ்யபாரத்தைக் குறித்த கர்த்தருடைய…

February

ஏமாற்றும் வார்த்தை வேண்டாம்

2024 பிப்ரவரி 26 (வேத பகுதி: 2 சாமுவேல் 16,15 முதல் 19 வரை) “அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்” (வசனம் 15). அப்சலோமும் அவனுடைய ஆதரவாளர்களும், திரளான மக்களும், ஆலோசனைக்காரன் அகித்தோப்பேலும் எவ்வித எதிர்ப்புமின்றி எருசலேமுக்குள் நுழைந்தார்கள். தாவீதும் அவனுடைய ஆதரவாளர்களும் அரண்மனையிலிருந்து தப்பி ஓடிவிட்டார்கள் என்னும் செய்தி அவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தியாகவே இருந்திருக்கும். தலைநகரைக் கைப்பற்றியது அப்சலோமுக்குக் கிடைத்த ஆரம்ப வெற்றி. இனிமேல் நாடுமுழுவதும் தன்…

February

கசப்பான வார்த்தை வேண்டாம்

2024 பிப்ரவரி 25 (வேத பகுதி: 2 சாமுவேல் 16,9 முதல் 14 வரை) “அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.” (வசனம் 9). அபிசாய் சிறந்த வீரன்தான்; ஆயினும் வாள் எடுத்து போரிடுவதற்கு இது நேரமன்று. சீமேயியின் சாப வார்த்தைகளையும், அவனது கற்களையும் தடுக்க தாவீது விரும்பவில்லை. தாவீது விமர்சனங்களுக்கு தன்னுடைய காதை மூட விரும்பவில்லை. இத்தகைய விமர்சனங்களின் வாயிலாகக் கர்த்தர்…

February

அவசரம் வேண்டாம்

2024 பிப்ரவரி 24 (வேத பகுதி: 2 சாமுவேல் 16,5 முதல் 8 வரை) “(சீமேயி) தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்” (வசனம் 6). சீமேயி ஏன் தாவீதைத் தூஷித்து, அவன்மீது கற்களை எறிய வேண்டும்? தாவீதின் புகழையும், அவனுடைய கண்ணியத்தையும் கெடுக்க வேண்டும். அதற்காக சமயம் பார்த்துக்கொண்டிருந்தான், அது இப்பொழுது வாய்த்தது. நம்முடைய வீழ்ச்சியில், நம்முடைய குறைவில், நம்முடைய இழப்பில் மகிழ்ச்சியடையும்படி ஒரு கூட்டம் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.…

February

தவறாக நியாயந்தீர்க்கப்படுதல்

2024 பிப்ரவரி 23 (வேத பகுதி: 2 சாமுவேல் 16,5) “சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து …” (வசனம் 5). தாவீதும் அவனோடிருந்த சிறு குழுவினரும் ஒலிவ மலையின் மறுபுறத்தில் பள்ளத்தாக்கில் இருக்கிற பகூரிம் என்னும் ஊருக்கு வந்தபோது, சீமேயி என்பவன் அவனுக்கு எதிரே புறப்பட்டு வந்து தாவீதைத் தூஷித்தான். சற்று முன்னர் சந்தித்த சீபாவுக்கும் இவனுக்கும் எத்தனை வேறுபாடு? “ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயை…

February

தவறாக நியாயந்தீர்த்தல்

2024 பிப்ரவரி 22 (வேத பகுதி: 2 சாமுவேல் 16,1 முதல் 4 வரை) “அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்துக்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான்” (வசனம் 4). தாவீது மிகப்பெரிய சிக்கலிலும், அச்சுறுத்தலிலும் இருக்கிறான். அவன் இதுவரை சந்தித்த நபர்களைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமான நபர்களைச் சந்திக்கிறான். இது தாவீதுக்கு மட்டுமல்ல, நமக்கும் பொருந்தும். எப்பொழுதெல்லாம் நாமும் சிக்கலில் இருக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நம்மைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி பலர் புதிது புதிதாக முளைத்து வருகிறதைக் காணமுடியும். தாவீது…

February

பாடுகளில் சார்ந்துகொள்ளுதல்

2024 பிப்ரவரி 21 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,32 முதல் 37 வரை) “தாவீது மலையின் உச்சிமட்டும் வந்து, அங்கே தேவனைப் பணிந்துகொண்டபோது, …” (வசனம் 32). தாவீது ஒலிவ மலைக்கு வந்தபோது, தனக்கு நேரிட்ட எல்லாப் பிரச்சினைகளின் நடுவிலும் அவன் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான், அவரைப் பணிந்து கொண்டான். தன்னுடைய அனுபவங்களை அவன் மூன்றாம் சங்கீதத்தில் அழகாகப் பதிவு செய்திருக்கிறான். “தேவனிடத்தில் இரட்சிப்பு இல்லை என்று சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள் … நான் கர்த்தரை…

February

பாடுகளில் தேவசித்தம்

2024 பிப்ரவரி 20 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,30 முதல் 31 வரை) “தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப் போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்” (வசனம் 30). தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப் போனான் என்பது அவன் அடைந்த தெய்வீக துக்கத்தின் உச்சகட்டத்தைக் காண்பிக்கிறது. முகத்தை மூடுதல் சுய கண்டனத்துக்கு அடையாளமாகவும், வெறுங்காலால் நடத்தல் சுயவெறுப்புக்கு…