February

அமர்ந்திருந்து ஊழியம்

 2024 பிப்ரவரி 19 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,27 முதல் 29 வரை) “அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்” (வசனம் 29). ராஜா ஆசாரியனாகிய சாதோக்கின்மேல், அவன் ஞானதிருஷ்டிக்காரன் என்ற முறையில் கூடுதலாக நம்பிக்கை வைத்திருந்தான். ஒருவேளை எருசலேமுக்குத் திரும்பிச் செல்கிற அவனால், ஆசாரியப் பணிகளைச் செய்ய அனுமதிக்கப்படாவிட்டாலும், அங்கே தாவீதுக்காக செய்ய வேண்டிய வேலைகள் இருந்தன. அது அப்சலோமின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அச்செய்தியை தாவீதுக்கு மறைமுகமாக…

February

பாடுகளில் நம்பிக்கை

2024 பிப்ரவரி 18 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,23 முதல் 26 வரை) “ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்” (வசனம் 23). தாவீது ராஜா தன்னுடைய நண்பர்களோடு கீதரோன் ஆற்றைக் கடந்து சென்ற நிகழ்வு, நம் ஆண்டவரின் துயரமும் கசப்பும் நிறைந்த பாடுகளுக்கு ஓர் நிழலாக இருக்கிறது. அவர் தம் சொந்த மக்களால் புறக்கணிக்கப்பட்டவராக எருசலேமை விட்டு கெதரோன் ஆற்றைக் கடந்து கெத்சமனே தோட்டத்திற்குச் சென்றார். அதைக் குறித்து யோவான், “இயேசு இவைகளைச் சொன்ன பின்பு…

February

பாசத்துக்குரிய கண்கள்

2024 பிப்ரவரி 17 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,23) “சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்” (வசனம் 23). வயதான தந்தை தன் சொந்த மகனிடமிருந்து தப்பி காடுகளில் தஞ்சம் அடைகிறார். மென்மையான இருதயமுள்ள எவராலும் இதைக் காண்பது சகிக்க முடியாததுதான். ஆகவேதான் ஆவியானவர் இவ்வாறாக எழுதி வைத்திருக்கிறார்: “சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்” (வசனம் 23). பெரும்பான்மையான மக்கள் அப்சலோமைப் பின்பற்றி, தங்கள் ராஜாவாகிய…

February

விருப்பத்துடன் பின்பற்றுதல்

2024 பிப்ரவரி 16 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,19 முதல் 22 வரை) “ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்” (வசனம் 21). தாவீது அப்சலோமுக்கு தப்பி ஓடுகையில், தன்னுடைய மெய்க்காவல் படையின் தலைவனாகிய  கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ…

February

தேவனின் இறையாண்மை

2024 பிப்ரவரி 15 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,15 முதல் 18 வரை) “அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும், பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள்” (வசனம் 18). ராஜாவின் ஊழியக்காரர், ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள் (வசனம் 15). அப்சலோம் இஸ்ரவேல் மக்களின் இருதயங்களைக் கவர்ந்துகொண்டாலும், தாவீதை முழு மனதுடனும், உண்மையுடனும்…

February

மேடுகளும் பள்ளங்களும்

2024 பிப்ரவரி 14 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,14) “தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை” (வசனம் 14). தாவீது அரசனின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக துயரமான நிகழ்வுகளில் ஒன்று தன் சொந்த மகன் அப்சலோமுக்குப் பயந்து, எருசலேமை விட்டு ஒடிப்போனது. அதிகாரத்தை அடையத் துடிக்கும் அப்சலோமின் இரக்கமற்ற முரட்டுக் குணத்தை அறிந்த தாவீது எருசலேம் போர்க்களமாக மாறுவதைத் தவிர்க்க அங்கிருந்து ஓடினான்.…

February

ஆபத்துநேரத்தில் காட்டிக்கொடுத்தல்

2024 பிப்ரவரி 13 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,12 முதல் 13 வரை) “அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்” (வசனம் 12). தாவீதின் முக்கியமான ஆலோசகர் கிலோனியனான அகித்தோப்பேலை அப்சலோம் தன் பக்கம் இழுத்துக்கொண்டான். இதனால் மக்கள் மத்தியில் அப்சலோமின் செயல்கள் அதிக மதிப்பைப் பெற்று, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. இது தாவீதைக் காயப்படுத்தியது. இந்தக் காயத்தின் உணர்வுகளை தாவீது சங்கீதம் 41…

February

வஞ்சகமும் அறியாமையும்

2024 பிப்ரவரி 12 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,7 முதல் 11 வரை) “எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்” (வசனம் 11). அப்சலோம் தந்தையிடம் மிகப் பெரிய மறைமுகத் திட்டத்தோடு வந்தான். ஊராரின் இருதயத்தைக் கவர்ந்துகொண்ட அப்சலோம் தன் தந்தையின் இருதயத்தை ஏமாற்றும் கலையையும் அறிந்திருந்தான். நான் பொருத்தனை பண்ணியிருந்தேன், ஆகவே எப்ரோனுக்குப் போய் கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும் என தந்தைக்குப் பிடித்தமான வார்த்தைகளைப் பேசினான். தந்தையை…

February

போலிகளின் நடமாட்டம்

2024 பிப்ரவரி 11 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,2 முதல் 6 வரை) “இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்” (வசனம் 6). அப்சலோம் மக்களைக் கவர்ந்திழுக்கும் தந்திரக் கலையை அறிந்தவன். தன் அழகு மற்றும் அறிவால் ராஜாவினிடத்தில் நீதி கேட்டு வருகிறவர்களைச் சந்தித்து, அவரிடத்தில் உங்களுக்கு நீதி கிடைக்காது, நான் உங்களுக்கு ராஜாவாயிருந்தால் மட்டுமே உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற பொய்யான வார்த்தைகளைப் பேசினான். நல்லவன்…

February

வெற்றுப் புகழ்

2024 பிப்ரவரி 10 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,1) “இதற்குப் பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும் தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்” (வசனம் 1). “இதற்குப் பின்பு”, அதாவது தாவீது அப்சலோமை அரண்மனையில் சந்தித்த பின்பு, அப்சலோம் தன் தந்திரமான காரியங்களைச் செய்யத் தொடங்கினான். அப்சலோமின் மனப்பான்மையில் எவ்வித மாற்றமும் காணப்படவில்லை. அவன் மென்மேலும் தன் சதிவலைகளை பின்னிக்கொண்டே போனான். கொலைகாரனான தன்னை தந்தை ஏற்றுக்கொண்டார் என்னும் நன்றியுணர்வின் தீப்பொறி அப்சலோமின் இருதயத்தில்…