May

கட்டுமான முறை

2024 மே 17 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,7 முதல் 10 வரை) “ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை” (வசனம் 7). சாலொமோன் ஆலயத்தைக் கட்டும் போது சுத்தியல் அல்லது உளி போன்ற இரும்புக் கருவிகளின் ஓசை எதுவும் அதன் வளாகத்தில் கேட்கப்படவில்லை. அதாவது ஆலயம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் அனைத்தும் வேறோர் இடத்தில்…

May

ஆலயத்தின் மாதிரி

2024 மே 16 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,2 முதல் 6 வரை) “சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபது முழ நீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது” (வசனம் 2). சாலொமோன் ஆலயத்தை அறுபது முழ நீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமும் இருக்கும்படி கட்டத் தொடங்கினான். இந்த அளவை யார் கொடுத்தது? தாவீது இந்த அளவையும் அதனுடைய மாதிரியையும் கர்த்தரிடமிருந்து பெற்று, அதைத் சாலொமோனுக்கு வழங்கினான்…

May

தேவனுடைய ஆலயம்

2024 மே 15 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,1) “இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்” (வசனம் 1). இந்த அதிகாரத்தின் முதல் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஆண்டு விவரங்கள் நமக்குப் பல்வேறு விதமான வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கிறது. வேதாகமம் ஒரு புனை கதையோ அல்லது புராணக் கதையோ அன்று. அது வரலாற்றை இயக்குபவரின்…

May

மறைவானவற்றில் முக்கியத்துவம்

2024 மே 14 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 5,13 முதல் 18 வரை) “வெட்டின கல்லால் ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட, பெரிதும் விலையேறப்பெற்றதுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்” (வசனம் 17). எருசலேமில் ஆலயம் கட்டும் பணியில் பலதரப்பட்ட மக்கள் பங்கு பெற்றார்கள் (இஸ்ரவேல் மக்களிலிருந்து வேலைக்காரர்கள், கானானிய வேலைக்காரர்கள், ஈராமின் வேலைக்காரர்கள், கிபலி ஊர் வேலைக்காரர்கள்). ஓர் உள்ளூர் திருச்சபை திறம்படக் கட்டப்பட வேண்டும் என்றால், அதன் அனைத்து விசுவாசிகளின் ஒத்துழைப்பும் அவசியம். சாலொமோன் ஆலயம்…

May

பிறருக்காக நன்றிசெலுத்துதல்

2024 மே 13 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 5,7 முதல் 12 வரை) “அந்த ஏராளமான ஜனங்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி” (வசனம் 7). ஆலயம் கட்டுவதற்காக உதவி வேண்டும் என்னும் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்ட போது, ஈராம் மிகவும் சந்தோஷப்பட்டான். கர்த்தருக்காகவும் அவருடைய ஊழியத்துக்காகவும் பிறர் எடுக்கிற முயற்சியைக் கண்டு நாமும் மகிழ்ச்சியடையவும், குறிப்பாக உதவி கேட்டுவரும்போது நம்மால் இயன்ற உதவிகளை மனமுவந்து…

May

சமாதானகால வளர்ச்சி

2024 மே 12 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 5,1 முதல் 6 வரை) “ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை” (வசனம் 4). தாவீது ஆட்சியில் இருந்த சகலநாள்களிலும் தீருவின் ராஜாவாகிய ஈராம் நண்பனாயிருந்தான். இஸ்ரவேலின் எதிரிகளுக்கு தாவீது ஒரு வலிமைமிக்க போர்வீரனாக விளங்கினாலும், அண்டை நாடுகளிலுள்ள சில நல்ல உள்ளங்களுக்கு உற்ற நண்பனாகவும் இருந்தான். நமக்கு விரோதமாக இராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்று…

May

சாலொமோனிலும் பெரியவர்

2024 மே 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 4,29 முதல் 34 வரை) “தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்” (வசனம் 29). கர்த்தர் சாலொமோனுக்கு பரந்த ஞானத்தையும் மிகப் பெரிய புரிதலையும் கொடுத்தார். சாலொமோன் தனது ராஜ்யபாரத்தின் மேன்மையான ஆண்டுகளில், கர்த்தர் கொடுத்த விலை மதிப்பற்ற ஞானத்தைப் பயன்படுத்தினான். துக்கமான காரியம் என்னவெனில், அவன் அந்த ஞானத்தை எப்பொழுதும் எல்லா இடங்களிலும் பிரயோகிக்காமல் விட்டுவிட்டதேயாகும். இது அவனை படிப்படியாக…

May

உண்மையான செழிப்பு

மே 10 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 4,21 முதல் 28 வரை) “சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்” (வசனம் 25). இஸ்ரவேல் நாட்டின் வரலாற்றிலேயே சாலொமோனின் ராஜ்யம் மிகப் பெரிய எல்லைகளைக் கொண்டதாக இருந்தது. “அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதுமான” (ஆதியாகமம் 15,18) தேசத்தைக் கொடுப்பேன்…

May

உண்மையுள்ள வேலைக்காரர்கள்

2024 மே 9 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 4,1 முதல் 20 வரை) “ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாயிருந்தான்” (வசனம் 1). சாலொமோனின் அரசாட்சி ஸ்திரப்பட்டது. அவனுடைய ஆட்சிக் காலத்தில் செல்வமும் செழிப்பும் பெருகி, அமைதியும், சமாதானமும் உண்டாகியது. அவன் ஆண்டவர் அருளிய ஞானத்தால் ஆட்சிபுரிந்தான். இந்த ஆட்சி இஸ்ரவேல் நாட்டுக்கு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தது. போரற்ற அமைதியும், அநீதியற்ற ராஜ்யமும் ஸ்தாபிக்கப்பட்டது. பல்வேறு தீமைகளுக்கும், எண்ணற்ற மனித உயிர்களைப் பழிவாங்கிய…

May

பிரச்சினைகள் தீவிரமாகும்போது…

2024 மே 8 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,16 முதல் 28 வரை) “ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்” (வசனம் 28). ஒரு குழந்தைக்குச் சொந்தங்கொண்டாடிய இரு தாயார்களின் உண்மைக் கதை இது. தேவன் அருளிய ஞானத்தின் அடிப்படையில் இந்த வழக்கை சாலொமோன் மிகவும் அற்புதமாகத் தீர்த்துவைத்தான். இரண்டு வேசிப் பெண்கள் அரண்மனை வழக்காடு மன்றத்தில் நின்றார்கள்…