உலகத்தால் பகைக்கப்படுதல்
2024 ஜனவரி 26 (வேத பகுதி: 2 சாமுவேல் 10,1 முதல் 5 வரை “தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயைசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்” (வசனம் 2). தாவீதின் இரக்கம் மேவிபோசேத்தோடு நிற்கவில்லை, அதை எல்லை கடந்து ஒரு புறமத அரசன் வரைக்கும் சென்றது. அம்மோனின் அரசன் நாகாஸ் எனக்குத் தயவு செய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு…