February

வேதனையின்மேல் வேதனை

2024 பிப்ரவரி 5 (வேத பகுதி: 2 சாமுவேல் 13,33 முதல் 39 வரை) “அப்சலோம் ஓடிப்போனான்” (வசனம் 33). அப்சலோம் சகோதரன் அம்னோனைக் கொலை செய்துவிட்டு, தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். இந்தத் தல்மாய் என்பவன் அப்சலோமின் தாத்தா (தாயின் தந்தை) ஆவான். அண்டை நாடுகளுடன் சமாதானமாக இருக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கேசூர் ராஜாவின் மகளாகிய மாக்காளை தாவீது மணம் முடித்திருந்தான். இந்த மாக்காளுக்குப் பிறந்தவர்களே தாமாரும் அப்சலோமும். இவனைப் பற்றி,…

February

வேதனைகளும் வலிகளும்

2024 பிப்ரவரி 4 (வேத பகுதி: 2 சாமுவேல் 13,23 முதல் 32 வரை) “இரண்டு வருஷம் சென்றபின்பு …” (வசனம் 23). அம்னோன் தாமாரை தகாதவிதமாய் நடத்தி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவள் தன் அண்ணன் அப்சலோமின் வீட்டில் துக்கத்தோடும் கண்ணீரோடும் இருக்கிறாள். நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் காத்திருந்தாள். தாவீது அம்னோனின் செயலால் கோபம் கொண்டானே தவிர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவளுடைய எதிர்காலம் இருண்டதாக மாறிவிட்டது. அப்சலோம் அவளைப் பார்க்கும்போதெல்லாம் உடன் பிறந்த அண்ணனாக தங்கைக்கு…

February

சிட்சையின் வடுக்கள்

2024 பிப்ரவரி 3 (வேத பகுதி: 2 சாமுவேல் 13,8 முதல் 22 வரை) “தாவீதுராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகு கோபமாயெரிந்தான்” (வசனம் 21). அம்னோனின் திட்டங்கள் எவற்றையும் அறியாதவளாக தாமார் இரண்டு பணியாரங்களை ஆயத்தம் செய்தாள். தாமார் தந்தையின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தாள், அண்ணணிடமும் பாசம் வைத்திருந்தாள். ஆனால் அம்னோன் பணியாரங்களைச் சாப்பிட மறுத்ததன் மூலம் தந்தையிடம்  சொன்னதெல்லாம் பொய் என்பதை இதன் மூலம் காட்டினான். இவனுடைய பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை. அவனுடைய இச்சை அவன்…

February

குடும்பத்தைக் கட்டுதல்

2024 பிப்ரவரி 2 (வேத பகுதி: 2 சாமுவேல் 13,3 முதல் 7 வரை) “அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி” (வசனம் 3). தாவீதின் அண்ணன் சிமியாவின் மகன் யோனதாப். இவன் மிகவும் வஞ்சகமுள்ள மனிதன். அம்னோனுக்கு பொல்லாத அறிவுரைகள் வழங்கி, அவனைப் பேரழிவுக்கு நேராக நடத்தியவன் இவனே. நெருங்கிய உறவினன் நண்பனாக இருந்தாலும் ஆலோசனையைப் பெறுவதில் கவனம் தேவை. அப்சலோமுக்கு…

February

நற்சான்று தவறுதல்

2024 பெப்ரவரி 1 (வேத பகுதி: 2 சாமுவேல் 13,1 முதல் 2 வரை) “இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்” (வசனம் 1). தாவீதுக்கும் மாக்காளுக்குப் பிறந்த பிள்ளைகளே அப்சலோமும் தாமாரும். இந்த மாக்காள் ஓர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி. கேசூரின் ராஜாவான தல்மாய் என்பவனின் குமாரத்தி ஆவாள் (2 சாமுவேல் 3,3). தாவீதின் தலைமகன் அம்மோன். இவனுடைய…

January

இழந்த வெற்றியைப் பெறுதல்

2024 ஜனவரி 31 (வேத பகுதி: 2 சாமுவேல் 12,26 முதல் 31 வரை) “அவர்களுடைய ராஜாவின் தலைமேலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; … அது தாவீதினுடைய தலையில் வைக்கப்பட்டது” (வசனம் 30). தேவனுடைய மன்னிப்பானது பாவிகளை இரட்சிக்கக்கூடாதபடி குறுகிய எல்லைக்குட்பட்டதல்ல, அதுபோலவே பின்மாற்றம் அடைந்தோரையும் மன்னிப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்: “நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று” (யோசியா 14,4). நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருந்தபோது, அவரால் நம்மை…

January

இழந்த சந்தோஷத்தைப் பெறுதல்

2024 ஜனவரி 30 (வேத பகுதி: 2 சாமுவேல் 12,15 முதல் 25 வரை) “பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, … அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்; அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார்” (வசனம் 24). நாத்தான் அங்கிருந்து புறப்பட்டவுடன் தாவீது தன்னுடைய பாவத்தைக் கர்த்தரிடம் அறிக்கை செய்தான். ஒருவன் பாவம் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து பின் சந்ததியினரும் அறிந்துகொள்ளும்படி அதைக் கவிதையாக எழுதியும்…

January

பாவத்தை அறிக்கையிடுதல்

2024 ஜனவரி 29 (வேத பகுதி: 2 சாமுவேல் 12,1 முதல் 14 வரை)  “தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்” (வசனம் 13). நாத்தான் வாயிலாக தாவீதின் பாவம் அவனுக்கு உணர்த்தப்பட்டது. ஏறத்தாழ ஓராண்டு காலம் அவன் பாவத்தை மூடிமறைத்தான். தேவனுடைய அன்புள்ள சிட்சையின் காரணமாக அது வெளியே தெரிந்தது. இந்தக் காலங்களில் தான் அடைந்த உணர்வுகளை சங்கீதம் 32…

January

மாம்சத்தில் நடந்துகொள்ளுதல்

2024 ஜனவரி 28 (வேத பகுதி: 2 சாமுவேல் 11,1 முதல் 27 வரை) “துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை (பத்சேபாளை) அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது” (வசனம் 27). தாவீதின் வாழ்க்கையில் நேரிட்ட சோகமான சம்பவங்களில் ஒன்று இது. இது ஏதேச்சையாகவோ அல்லது சடுதியாகவோ நடந்த ஒன்றல்ல. இது அவனுடைய அந்தரங்க வாழ்க்கையில் ஏற்பட்ட படிப்படியான…

January

ஆவிக்குரிய போரை எதிர்கொள்ளுதல்

2024 ஜனவரி 27 (வேத பகுதி: 2 சாமுவேல் 10,6 முதல் 19 வரை)    “அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்” (வசனம் 7). தாவீது அம்மோனியர்களுடன் சமாதானமாக இருக்க எண்ணினான். அவர்களோ போருக்கு வந்தார்கள். தாவீதால் அனுப்பப்பட்ட தூதுவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டதன் காரணமாக அவர்கள் துணிகரங்கொண்டார்கள். ஆனால் இந்த முறை தாவீது சமாதானத்தின் தூதுவர்களை அல்ல, யோவாப் தலைமையில் நன்கு பயிற்சி பெற்ற பராக்கிரமசாலிகளாகிய சிறப்புப் படையை அனுப்பினான். இந்த…