February

தேவனின் இறையாண்மை

2024 பிப்ரவரி 15 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,15 முதல் 18 வரை) “அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும், பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள்” (வசனம் 18). ராஜாவின் ஊழியக்காரர், ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள் (வசனம் 15). அப்சலோம் இஸ்ரவேல் மக்களின் இருதயங்களைக் கவர்ந்துகொண்டாலும், தாவீதை முழு மனதுடனும், உண்மையுடனும்…

February

மேடுகளும் பள்ளங்களும்

2024 பிப்ரவரி 14 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,14) “தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை” (வசனம் 14). தாவீது அரசனின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக துயரமான நிகழ்வுகளில் ஒன்று தன் சொந்த மகன் அப்சலோமுக்குப் பயந்து, எருசலேமை விட்டு ஒடிப்போனது. அதிகாரத்தை அடையத் துடிக்கும் அப்சலோமின் இரக்கமற்ற முரட்டுக் குணத்தை அறிந்த தாவீது எருசலேம் போர்க்களமாக மாறுவதைத் தவிர்க்க அங்கிருந்து ஓடினான்.…

February

ஆபத்துநேரத்தில் காட்டிக்கொடுத்தல்

2024 பிப்ரவரி 13 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,12 முதல் 13 வரை) “அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்” (வசனம் 12). தாவீதின் முக்கியமான ஆலோசகர் கிலோனியனான அகித்தோப்பேலை அப்சலோம் தன் பக்கம் இழுத்துக்கொண்டான். இதனால் மக்கள் மத்தியில் அப்சலோமின் செயல்கள் அதிக மதிப்பைப் பெற்று, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. இது தாவீதைக் காயப்படுத்தியது. இந்தக் காயத்தின் உணர்வுகளை தாவீது சங்கீதம் 41…

February

வஞ்சகமும் அறியாமையும்

2024 பிப்ரவரி 12 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,7 முதல் 11 வரை) “எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்” (வசனம் 11). அப்சலோம் தந்தையிடம் மிகப் பெரிய மறைமுகத் திட்டத்தோடு வந்தான். ஊராரின் இருதயத்தைக் கவர்ந்துகொண்ட அப்சலோம் தன் தந்தையின் இருதயத்தை ஏமாற்றும் கலையையும் அறிந்திருந்தான். நான் பொருத்தனை பண்ணியிருந்தேன், ஆகவே எப்ரோனுக்குப் போய் கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும் என தந்தைக்குப் பிடித்தமான வார்த்தைகளைப் பேசினான். தந்தையை…

February

போலிகளின் நடமாட்டம்

2024 பிப்ரவரி 11 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,2 முதல் 6 வரை) “இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்” (வசனம் 6). அப்சலோம் மக்களைக் கவர்ந்திழுக்கும் தந்திரக் கலையை அறிந்தவன். தன் அழகு மற்றும் அறிவால் ராஜாவினிடத்தில் நீதி கேட்டு வருகிறவர்களைச் சந்தித்து, அவரிடத்தில் உங்களுக்கு நீதி கிடைக்காது, நான் உங்களுக்கு ராஜாவாயிருந்தால் மட்டுமே உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற பொய்யான வார்த்தைகளைப் பேசினான். நல்லவன்…

February

வெற்றுப் புகழ்

2024 பிப்ரவரி 10 (வேத பகுதி: 2 சாமுவேல் 15,1) “இதற்குப் பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும் தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்” (வசனம் 1). “இதற்குப் பின்பு”, அதாவது தாவீது அப்சலோமை அரண்மனையில் சந்தித்த பின்பு, அப்சலோம் தன் தந்திரமான காரியங்களைச் செய்யத் தொடங்கினான். அப்சலோமின் மனப்பான்மையில் எவ்வித மாற்றமும் காணப்படவில்லை. அவன் மென்மேலும் தன் சதிவலைகளை பின்னிக்கொண்டே போனான். கொலைகாரனான தன்னை தந்தை ஏற்றுக்கொண்டார் என்னும் நன்றியுணர்வின் தீப்பொறி அப்சலோமின் இருதயத்தில்…

February

தானாக முடிவெடுத்தலின் தீமை

2024 பிப்ரவரி 9 (வேத பகுதி: 2 சாமுவேல் 14,27 முதல் 33 வரை) “அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்” (வசனம் 28). அப்சலோம் குடும்ப உறவுகளின்மேல் ஆழ்ந்த பற்றும் அனுதாபமும் கொண்டவன். தன் சகோதரி தாமாரை அவனால் மறக்கமுடியவில்லை. அவளுடைய பெயரையே தன் மகளுக்கும் பெயரிட்டான். தன் சகோதரி தன்னோடு வசிக்காவிட்டாலும், அவளுடைய பெயர் தன் வீட்டில் அனுதினமும் உச்சரிக்கப்படுவதன் வாயிலாக, அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் அதற்குக் காரணமானவர்களின்மீதான கோபமும்…

February

முடிவெடுப்பதில் சிரமம்

 (வேத பகுதி: 2 சாமுவேல் 14,23 முதல் 26 வரை) “பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்” (வசனம் 23). தாவீது அப்சலோமை எருசலேமுக்கு வர அனுமதியளித்தான். ஆயினும் தாவீதின் மனநிலை அரைகுறையாகவே இருந்தது. தாவீது அவனை எருசலேமுக்கு வர அனுமதித்தானே தவிர, அரண்மனைக்கு வருவதற்கோ அல்லது தன் முகத்தைக் காணவோ அனுமதிக்கவில்லை. தாவீது அப்சலோமை முழுவதும் தண்டிக்கவில்லை, அதுபோலவே அவனை முழுவதும் மன்னிக்கவும் முடியவில்லை. அவன் இவ்விரு நிலைகளுக்கும் இடையில் சிக்கிகொண்டான்.…

February

கிருபையும் சத்தியமும்

2024 பிப்ரவரி 7 (வேத பகுதி: 2 சாமுவேல் 14,2 முதல் 22 வரை) “நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடிக்கு, தரையிலே சுவறுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்துண்டவன் முற்றிலும் தம்மைவிட்டு விலக்கப்படாதிருக்கும் நினைவுகளை நினைக்கிறார்” (வசனம் 14). யோவாப் தாவீதுக்கு விசுவாசமாக இருந்த ஓர் அமைச்சர். அப்சலோமுக்கும் தாவீதுக்கும் உறவு சரியானதாக இல்லை என்பதைப் புரிந்துகொண்டவன். அப்சலோம் நீண்ட நாட்கள் நாட்டை விட்டு வெளியே இருப்பது நல்லதன்று கருதி அவனை இங்கே…

February

மாறாத அன்பு

2024 பிப்ரவரி 6 (வேத பகுதி: 2 சாமுவேல் 14,1) “ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செரூயாவின் குமாரன் யோவாப் கண்டு,” (வசனம் 1). காலம் ஒரு மிகப் பெரிய நோய்நிவாரணி. இருதயத்துக்கும் மனதுக்கும் சஞ்சலத்தை உண்டாக்குகிற பல பல காரியங்களை இது மறக்கச் செய்துவிடும். கால ஓட்டத்தைச் சரியான விதத்தில் பயன்படுத்துவோமாயின், அது காயங்களை மறந்து புதுப்பித்தலுக்கோ அல்லது கசப்பை மறந்து ஒப்புரவாகுதலுக்கோ அல்லது பகையை மறந்து சமாதானத்துக்கோ பல வகைகளில் பலருக்கும் உபயோகமான…