January

ஆசீர்வாதத்தின் இரகசியம்

2024 ஜனவரி 16 வேத பகுதி (2 சாமுவேல் 6,12 முதல் 15 வரை) “தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத் ஏதோமையும் அவன் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசிர்வதித்தார்” *( வசனம் 12). உடன்படிக்கைப் பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. கர்த்தர் அக்குடும்பத்தை ஆசீர்வதித்தார். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கிறார் என்ற காரியம் பிறருக்கும் தெரிய வந்தது. அது பின்னர் தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. வார்த்தையாகிய கிறிஸ்து கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார்.…

January

கோபத்தின் காரணம்

2024 ஜனவரி 15 வேத பகுதி (2 சாமுவேல் 6,7 முதல் 11 வரை) “கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் மூண்டது” (வசனம் 7). பெட்டி ஆசாரியர்களால் தோள்களில் தூக்கிச் செல்வதைக் காட்டிலும், ஒரு வண்டியில் ஏற்றிச் செல்வது ஒரு சிறந்த நடைமுறைக் காரியமாக தாவீதுக்குத் தோன்றியது. அவ்வாறே பெட்டி சாயும்போது அதைத் தொடுவது ஊசாவுக்கு நலமானதாகத் தோன்றியது. ஆனால் தேவனைப் பொறுத்தவரை அது ஒரு தவறான செயல். அவருடைய வார்த்தைக்கு மாற்றான ஒன்றை யோசிப்பதையும் அதன்படி செய்வதையும்…

January

சோதனையில் நம்பிக்கை

2024 ஜனவரி 14 (வேத பகுதி: 2 சாமுவேல் 6,6) “அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்” (வசனம் 6) கர்த்தருடைய பெட்டி நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு, அது அசைந்தது. சர்வ வல்ல கடவுளாலும், சர்வ ஞானியாகிய கடவுளாலும் இந்தப் பிரபஞ்சத்தில் சகலமும் கட்டுப்படுத்தப்படுகின்றன எனவும், இயக்கப்படுகின்றன எனவும் நாம் விசுவாசிப்போமானால் இந்தக்…

January

சரியானது தவறான முறையில்

2024 ஜனவரி 13 (வேத பகுதி: 2 சாமுவேல் 6,1 முதல் 5 வரை) “கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுது கொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி…” (வசனம் 2). தேவனுடைய பெட்டி என்பது அவருடைய மகிமையும் பிரசன்னமும் இஸ்ரவேலின் நடுவில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக மோசேயின் காலத்தில் செய்யப்பட்டு கனத்துக்குரியதாக விளங்கிய இந்தப் பெட்டி, இப்பொழுது மக்களால் மறக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது வருத்தத்திற்கு உரிய காரியமே. அதைத் தலைநகராம்…

January

கர்த்தரிடத்தில் வழிகேட்டல்

2024 ஜனவரி 12 (வேத பகுதி: 2 சாமுவேல் 4,13 முதல் 25 வரை) “தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல் …” (வசனம் 23). சமஸ்த இஸ்ரவேலரும் தாவீதைத் தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்டார்கள். தாவீது சவுலின் குடும்பத்தாரின்மீது வெற்றி பெற்றான். தாவீதுக்கு இப்பொழுது உள்நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை எதிரிகளும் இல்லை. “தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்” (வசனம் 10). ஆனால் இந்த வெற்றி  வெளியில் இருந்து…

January

நம்பிக்கெடுதல்

2024 ஜனவரி 11 (வேத பகுதி: 2 சாமுவேல் 4,1 முதல் 12 வரை) “இன்றைய தினம் கர்த்தர் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் குடும்பத்தாரின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்” (வசனம் 8). அப்னேர் எப்ரோனிலே செத்துப்போனதைச் சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுபோயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள் (வசனம் 1). அப்னேர் இஸ்போசேத்துக்கு மட்டுமின்றி, முழு இஸ்ரவேல் மக்களுக்கும் எந்த அளவுக்கு நம்பிக்கையாக இருந்தான் என்பது  இதன் மூலம் புலனாகிறது. இதனாலேயே தாவீதும்…

January

எதிரியையும் பாராட்டுவோம்

2024 ஜனவரி 10 (வேத பகுதி: 2 சாமுவேல் 3,31 முதல் 39 வரை) “தாவீது யோவாபையும், அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீதுராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான்” (வசனம் 31). தாவீது அப்னேரின் பாடைக்கு முன்பாக நடந்துபோனதும், அடக்கம் செய்தபோது அழுது புலம்பியதும் ஓர் ஆச்சரியமான காரியமாகும். அப்னேர் தனக்கு எதிராகச் செயல்பட்டதையும், தான் ராஜாவாக வரக்கூடாது என்பதற்காக தீவிரமாகச்…

January

துரோகப் பழிவாங்கல்

2024 ஜனவரி 9 (வேத பகுதி: 2 சாமுவேல் 3,22 முதல் 30 வரை) “அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல, அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக்கொன்றுபோட்டான்”. (வசனம் 27). அப்னேரின் சடுதியான மரணம் தாவீதை அதிர்ச்சியடையச் செய்தது. மனித முயற்சிகளுக்கு அப்பால் தேவனின் தெய்வீகக் கரத்தின் செயல்பாட்டை அப்னேருடைய மரணம் நமக்கு வெளிப்படுத்துகிறது. தாவீது அப்னேருடன்…

January

சண்டைக்குப் பின் சமாதானம்

2024 ஜனவரி 8 (வேத பகுதி: 2 சாமுவேல் 3,12 முதல் 21 வரை) “அப்னேரும், அவனோடேகூட இருபதுபேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்” (வசனம் 20). தாவீது சமாதானத்தை விரும்புகிறவன். எதிரிகளாக இருந்தாலும் அவர்களுடைய பலத்தையும் திறமையையும் மதிக்கிறவன். அப்னேர் தூது அனுப்பினபோது தாவீது அதை ஏற்றுக்கொண்டான். அவனுக்கு விருந்து செய்து அவனைச் சமாதானத்துடன் அனுப்பிவிட்டான். இதுவரை கர்த்தருடைய சித்தத்துக்கு விரோதமாக இருந்த அப்னேர் இப்பொழுது அதைப் புரிந்துகொண்டவனாக…

January

சண்டைகளின் முடிவு

2024 ஜனவரி 7 (வேத பகுதி: 2 சாமுவேல் 3,1 முதல் 11 வரை) “சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள்” (வசனம் 1). உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதர்கள் பலத்தின்மேல் பலம் அடைவார்கள் என்ற சங்கீதத்தின் வரிகள் தாவீதின் வாழ்க்கையில் உண்மையாயின (84,5 மற்றும் 7). தாவீது கர்த்தரில் நம்பிக்கை வைத்து, அவரில் பெலன் கொண்டான். சவுலின் குமாரன் இஸ்போசேத்தோ அப்னேரின்மேல் நம்பிக்கை…