May

அனுதின சுத்திகரிப்பும் இளைப்பாறுதலும்

(வேதபகுதி: லேவியராகமம் 15:1-33) “பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான். எட்டாம் நாளிலே, அவன் இரண்டு காட்டுப் புறாக்களையாவது, இரண்டு புறாக் குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடார வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்” (வச. 13,14). இந்த அதிகாரம் ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ இயல்பாய் ஏற்படக்கூடிய பிரமியம் (மேகவெட்டை), இந்திரியக்கழிவு (விந்து வெளியேறுதல்), அளவுக்கு…

May

புதிய வாழ்க்கைக்கு திரும்புதல்

(வேதபகுதி: லேவியராகமம் 14:1-57) “ஆசாரியன் பாளையத்துக்குப் புறம்பே போய், குஷ்டரோகியின் குஷ்ட வியாதி, சொஸ்தமாயிற்று என்று கண்டால், சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுரு கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடக்கடவன்” (வச. 3,4). ஒரு குஷ்டரோகிக்கு மீண்டும் மறுவாழ்வு கிடைக்குமா? அவனுடைய குஷ்டரோகத்திலிருந்து அவனுக்கு விடுதலை கிடைக்குமா? அவன் மீண்டும் பொதுமக்களோடு மக்களாகக் கலந்து சகசமான வாழ்க்கைக்குத் திரும்ப முடியுமா? ஆம், அதற்கான வாய்ப்பைத் தேவன் வழங்குகிறார். இதற்கான சுத்திகரிப்பு முறைகளையே…

May

கண்டுபிடித்துத் தீர்த்தல்

(வேதபகுதி: லேவியராகமம் 13:1-59) “குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால் அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவர வேண்டும்” (வச. 9). குஷ்டரோகம் குணப்படுத்த வேண்டிய ஒரு நோயாக மட்டுமின்றி, அது சுத்தப்படுத்த வேண்டிய ஓர் அசுத்தமாகவும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே இது பாவத்துக்கு ஒப்புமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. எபிரெய வேதாகமத்தில் இந்தத் தொழுநோய்க்கு கொடுக்கப்பட்டுள்ள வார்த்தை வெறுமனே குஷ்டரோகத்தை மட்டும் குறிக்காமல் தோலில் ஏற்படக்கூடிய பிற வியாதிகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறது. இவ்வகை அனைத்தும் ஆபத்தான நோயாகவும், தனிப்பட்ட நபரை மட்டுமின்றி, முழு…

May

பாவசுபாவத்தை நினைவூட்டல்

(வேதபகுதி: லேவியராகமம் 12:1-8) “ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண் பிள்ளையைப் பெற்றாள், அவள் சூதகஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழு நாள் தீட்டாயிருப்பாள். எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படக்கடவது” (வச. 2,3). இங்கு சொல்லப்பட்டிருக்கும் காரியங்களைக் கவனிக்கும்போது, தேவன் பிரசவத்துக்கு எதிரானவராக இருப்பதுபோல் தோன்றுகிறது. உண்மையில் அவ்வாறு அல்ல. அவர் குழந்தைகளுக்கும் எதிரானவர் அல்லர். மனிதப் பிறப்பும், பாலினமும் கூட அவருடைய பார்வையில் தீட்டானது அல்ல. அடிப்படையானதும், இன்றியமையாததுமான ஓர் உண்மையை…

May

வேறுபாட்டின் அளவீடு

(வேதபகுதி: லேவியராகமம் 11:1-47) “கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடு சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவ சந்துக்கள் யாதெனில்” (வச. 1, 2). இந்தப் பகுதியில், நன்மை எது தீமை எது என்பதற்கான ஒரு தரநிர்ணய அளவுகோலை தேவன் வழங்குகிறார். இவ்வாறு நன்மை தீமையை அடையாளம் கண்டு தரம் பிரிப்பது எளிதான காரியம் அல்ல. எந்த ஒரு பொருளோ, அல்லது உயிரோ தீமையானது என எதுவும் இல்லை, நாம்…

May

நியாயப்பிரமாணத்தின் நோக்கம்

(வேதபகுதி: லேவியராகமம் 10:12-20) “அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரண பலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரண பலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான். மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்” (வச. 19,20). இரண்டு மகன்களை இழக்கக்கொடுத்த ஆரோனின் துயரமிக்க, ஆனால் ஆழமான உணர்வுமிக்க வார்த்தைகளை இங்கே காண்கிறோம். இரண்டு வகையான பாவநிவராண பலியைப் பற்றி கூறப்பட்டுள்ளது…

May

அந்நிய நெருப்பு

(வேதபகுதி: லேவியராகமம் 10:1-11) “பின்பு ஆரோனின் குமாரனாகிய நாதாவும் அபியூவும் தன் தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவர் சந்நிதியில் கொண்டுவந்தார்கள் ” (வச. 1). ஓர் அற்புதமான காட்சிக்குப் பிறகு ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வு. மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஆரோனின் நான்கு மகன்களின் இருவரின் மரணம் அவனை மட்டுமின்றி, நம்மையும், பேச்சற்றவர்களாக்கிவிட்டது. மோசே, ஆரோனின் குடும்பத்தார், முழு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும்…

May

மகிமை வெளிப்படும் இடம்

(வேதபகுதி: லேவியராகமம் 9:1-24) “பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது” (வச. 23). ஓர் அற்புதமான காட்சி. ஆரோனுக்கும் அவனுடைய குமாரருக்கும் எட்டு நாட்களுக்கான சுத்திகரிப்பு முறைமைகள் முடிந்துவிட்டன. எட்டாம் நாளில் அவர்கள் முதன் முதலாக ஆசரிப்புக்கூடாரத்துக்குள் சென்று பலிசெலுத்துகிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் கூடாரத்தின் முன்னால் இருந்து அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கர்த்தருடைய கட்டளையின்படி ஆரோனும் மோசேயும் உள்ளே கூடாரத்துக்குள் பிரவேசித்துவிட்டு திரும்பி…

May

பிரித்தெடுக்கப்பட்ட பிரதான ஆசாரியர்

(வேதபகுதி: லேவியராகமம் 8:18-36) “பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்” (வச. 1-4). ஆசாரியர்களைப் பிரதிஷ்டை செய்கிற பலியைக் குறித்து வாசிக்கிறோம். அவர்களுடைய தனிப்பட்ட தகுதி அல்ல, ஆட்டுக்கடாவின் இரத்தமே அவர்களைத் தகுதிப்படுத்துகிறது. கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக நமக்குக் கிடைக்கிற தகுதியைத் தவிர நமக்கும் எவ்விதத் தனிப்பட்ட தகுதியும் இல்லை என்பதை இந்த இரத்தம் சுட்டிக்காட்டுகிறது. ஆசாரியன் சற்று வித்தியாசமாகக் காட்சியளிக்கிறான். கிறிஸ்துவின் இரத்தத்தால்…

May

நமக்காக ஒரு பிரதான ஆசாரியர்

(வேதபகுதி: லேவியராகமம் 8:1-17) “கர்த்தர் மோசேயை நோக்கி, நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேக தைலத்தையும் பாவநிவராண பலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டுவந்து, சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடார வாசலுக்கு முன்பாகக் வடிவரச் செய்தான்” (வச. 1-4). நமக்காகப் பரலோகத்தில் வேண்டுதல் செய்துகொண்டிருக்கிற மகா பிரதான ஆசாரியராகிய கிறிஸ்துவின் நிழல் சித்திரத்தை இங்கே காண்கிறோம். கர்த்தருடைய கட்டளைப்படி மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் அழைத்தான். தேவனால் அழைக்கப்பட்டாலொழிய,…