May

பரிசுத்தமான சபைகூடுதல்

(வேதபகுதி: லேவியராகமம் 23:4-8) “முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்தி நேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும், அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும். ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்க வேண்டும்” (வச.5,6). இஸ்ரயேல் மக்கள் ஆசரிக்கும்படி ஏழு பண்டிகைகளை ஆண்டவர் நியமித்தார். இப்பண்டிகைக் காலங்களில் அவர்கள் எருசலேமில் கூட வேண்டும். இது பரிசுத்தமான சபை கூடுதல் என்று அழைக்கப்பட்டது. முதலாவது பண்டிகை பஸ்கா. இது இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்றதுடன்…

May

மெய்யான ஓய்வும் இளைப்பாறுதலும்

(வேதபகுதி: லேவியராகமம் 23:1-3) “ஆறுநாளும் வேலை செய்ய வேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்ய வேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக” (வச. 3). ஓய்வு நாள் படைப்பில் தொடங்குகிறது. தேவன் ஆறு நாளில் இப்பிரபஞ்சத்தைப் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அதாவது அந்த நாளில் படைப்பின் எவ்விதச் செயலும் செய்யாமல் ஓய்ந்திருந்தார். சீனாய் மலையில் மோசேக்கு நியாயப்பிரமாணத்தை வழங்கியபோது, தன்னுடைய எல்லாக் கிரியைகளிலும் ஓய்வுநாளை மையமாகக் கொண்டிருக்கிறேன்…

May

பொறுப்பின் மேன்மையும் கடமையும்

(வேதபகுதி: லேவியராகமம் 22:1-33) “நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்” (வச. 33). நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக எகிப்திலிருந்து விடுதலையாக்கி, அங்கிருந்து உங்களை அழைத்துக்கொண்டு வந்தேன். இந்த வார்த்தைகளில் எவ்வளவு இரக்கமும், கருணையும் தெரிகிறது. நீங்கள் அங்கே உபத்திரவத்தை அனுபவித்தீர்கள், சுதந்தரத்தையும், சுயாதீனத்தையும் இழந்து கிடந்தீர்கள், கொடுமையாய் வேலை வாங்கப்பட்டீர்கள், இதிலிருந்து நான் உங்களை அற்புதமாக விடுவித்தேன். இப்பொழுது உங்களை ஆசீர்வாதமும், வளமும் கொண்ட வாக்குத்தத்த பூமிக்கு…

May

தேவ சேவைக்கான அழைப்பும் பொறுப்பும்

(வேதபகுதி: லேவியராகமம் 21:1-24) “மோசே இவைகளை ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரரர் அனைவரோடும் சொன்னான்” (வச. 24). ஆரோனும், அவன் குமாரரும் இஸ்ரயேல் மக்களின் தேவனுடைய ஆசாரியர் என்ற முறையில் அவர்களுடைய தனிப்பட்ட, குடும்ப, சமுதாய வாழ்க்கை எவ்விதமாக இருக்க வேண்டும் என்பதை இப்பகுதி போதிக்கிறது. பிரதான ஆசாரியர் என்ற முறையில் ஆரோனும், ஆசாரியர்கள் என்ற முறையிலும் அவனுடைய குமாரரும் இஸ்ரயேல் மக்களின் ஆவிக்குரிய தலைவர்கள் என்ற முறையில் நடத்தையிலும், குணத்திலும் ஒரு சிறந்த முன்மாதிரியான…

May

தேவன் நம்மோடு இருப்பதே பெலன்

(வேதபகுதி: லேவியராகமம் 20:1-27) “நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை உங்களுக்குக் சுதந்தரமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே” (வச. 24). உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே என்று தேவன் தம்மை வெளிப்படுத்தி, தம்மை இஸ்ரயேல் மக்களுடன் அடையாளப்படுத்துகிறார். இவர்கள் கடைப்பிடிக்கும்படி பல்வேறு கட்டளைக் கொடுத்துவிட்டு, நான் உங்களுக்கு நித்திய கடவுளாகவும், உங்களை அழைத்தவராகவும், வாக்குத்தத்த நாட்டில்…

May

அன்றாட நடக்கையில் தனித்துவம்

லேவியராகமம் 19:1-37 “என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருக ஜீவன்களை வேறு ஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல் நூலும் கம்பளி நூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக” (வச. 19). நம்முடைய அன்றாட நடவடிக்கைகளிலும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் தேவனுடைய மக்கள் என்ற முறையில் உண்மை, நேர்மை, பரிசுத்தம், அன்பு, இரக்கம் போன்றவற்றை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை இவ்வேதபகுதி நமக்கு அறிவுறுத்துகிறது. எடுத்துக்காட்டாக, நாம் அணியும் ஆடைகள்…

May

தனித்துவமான வாழ்க்கை

லேவியராகமம் 18:1-30) “நீங்கள் குடியிருந்த எகிப்து தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாலும், என்னுடைய நியாயயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்” (வச. 2,3). இந்த அதிகாரத்தில் மூன்று தடவை “நான் கர்த்தர்” என்றும் “நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்றும் ஆறுதடவை சொல்லப்பட்டிருக்கிறது (வச. 2,4,5,6,21,30).தேவன், இஸ்ரயேல் மக்களுடன் தம்மை ஒரு சிறப்பான வகையில் இணைத்துக்கொள்கிறார். தனக்கும்…

May

வாழ்க்கையின் ஆதாரம் இரத்தமே

(வேதபகுதி: லேவியராகமம் 17:1-16) “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன். ஆத்துமாவிற்காகப் பாவநிவர்த்தி செய்கிறது இரத்தமே” (வச. 11). இவ்வசனம் முழு வேதாகமத்துக்குமான திறவுகோலாக விளங்குகிறது. இரத்தமே மக்களுடைய ஆத்துமாவுக்காகப் பாவநிவர்த்தி உண்டாகக்கூடிய ஒரே வழி என்று இது தெளிவாகக் கூறுகிறது. இரத்தமே மனித உயிரின் ஆதாரம் என்று வேதாகமம் கூறிய பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே அறிவியல் இவ்வுண்மையைக் கண்டுகொண்டது. ஒருவரிடமிருந்து பெறப்படுகிற இரத்தம் இன்னொரு…

May

கிறிஸ்துவே நமக்கான போக்காடு

(வேதபகுதி: லேவியராகமம் 16:20-34) “… உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி, அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலைமையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்” (வச. 20,21). பாவநிவர்த்திப் பலியில் இரண்டு வெள்ளாட்டுக் கடாக்கள் ஒரே தகன பலியாகக் கருதப்படுகிறது (வச. 5). இது கல்வாரிச் சிலுவை மரணத்தின் இரண்டு…

May

பாவநிவர்த்தி பெருநாள்

(வேதபகுதி: லேவியராகமம் 16:1-19) “பாவநிவர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும், தன் வீட்டாருக்காகவும், இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக்கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது” (வச. 17). இந்தப் பகுதியில் இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளாகிய பாவநிவர்த்திப் பெருநாளைக் குறித்துப் படிக்கிறோம் (23:27). இந்நாளில் ஆரோன் மட்டுமே தனியே சென்று, தனக்காகவும், மக்களுக்காகவும் பலிகளைச் செலுத்தி, மகாபரிசுத்த ஸ்தலத்துக்குள் சென்று கிருபாசனத்தின்மேல் இரத்தத்தைத் தெளித்து, தூபங்காட்டுகிறான். இது ஆண்டுக்கு…