July

தொடரும் போர்

(வேதபகுதி: எண்ணாகமம் 31:1-24) “இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன்பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்” (வச. 2). மோசே என்னும் மாபெரும் தேவமனிதனின் வாழ்க்கை மீதியானியருக்கு எதிரான போரோடு நிறைவு பெறுகிறது. யார் இந்த மீதியானியர்? மோசே எகிப்திலிருந்து தப்பி ஓடியபோது, அடைக்கலம் கொடுத்தவர்கள் அல்லவா? மோசேயின் மனைவி மீதியான் தேசத்துப் பெண் அல்லவா? அவனுடைய மாமனார், மைத்துனர்கள் அனைவரும் மீதியானியர்கள் அல்லவா? ஆம், இத்தகைய சொந்தபந்தங்களுக்கு எதிரான போரைத்தான் மோசே தன் வாழ்வின்…

July

ஆணையிட்டதில் உறுதியாயிருத்தல்

(வேதபகுதி: எண்ணாகமம் 30:1-16) “ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்” (வச. 2). விசுவாசிகள் மகிழ்ச்சியுடன் இருக்கும்போதோ அல்லது குறைவோ, பிரச்சினையோ, துன்பமோ ஏற்படும்போதோ கர்த்தரிடம் பொருத்தனையோ அல்லது ஒரு குறிப்பிட்ட காரியத்தை எதிர்காலத்தில் செய்வேன் என்று நேர்ந்துகொள்வது இயல்பான காரியமாகவே இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. தனிப்பட்ட முறையில் பொருத்தனை மற்றும்…

July

கிறிஸ்துவின் ஒப்பற்ற பலி

(வேதபகுதி: எண்ணாகமம் 28:11-29:40) “நீங்கள் உங்கள் பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்த வேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்” (வச. 29:39). இந்த நீண்ட வேதபகுதியில் இஸ்ரயேல் மக்கள் அனுசரிக்க வேண்டிய ஏழு பண்டிகைகளும் அப்பண்டிகையின் நாட்களில் செலுத்த வேண்டிய பலிமுறைமைகளும் கூறப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி மக்கள் தானாக முன்வந்து மனபூர்வமாகச் செலுத்த வேண்டிய பலிகளுக்கான விதிகளும் சொல்லப்பட்டுள்ளன. இவையாவும் முடிவில்லாமல், தொடர்ந்து செய்ய வேண்டிய பலிகள். இந்தப் பண்டிகைகள் இஸ்ரயேல் மக்களின் கடந்த காலத்தோடும் வருங்காலத்தோடும் தொடர்புடையவை.…

July

புதிய தலைமுறைக்கான நினைவூட்டல்

(வேதபகுதி: எண்ணாகமம் 28:1-10) “எனக்குச் சுகந்த வாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும், குறித்த காலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு” (வச. 2.) இஸ்ரயேல் மக்களுடைய சூழ்நிலை இப்பொழுது மாறிவிட்டது. ஒரு புதிய தலைவரின் கீழ், ஒரு புதிய நாட்டுக்குள், ஒரு புதிய சுதந்தரத்தை பெற்றுக்கொள்ளப் போகிறார்கள். ஆயினும் சில குறிப்பிட்ட காரியங்கள் மாறாதவை. அவை புதிய நாட்டிலும் தொடர்ந்து செய்ய வேண்டியவை. பலி செலுத்துதலும் அவற்றுள் ஒன்று. முதல்…

July

புதிய தலைவர் யோசுவா

எண்ணாகமம் 27:1-23 “கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப் போல இராதபடிக்கு… தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்த வேண்டும் என்றான்” (வச. 16,17). மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். தன்னிடம் வந்த எந்தப் பிரச்சினைக்கும் தேவனிடத்தில் ஆலோசனை கேட்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அவர் சொல்லுகிற வார்த்தைக்கு கீழ்ப்படிகிற பழக்கத்தையும் கொண்டிருந்தான் (வச. 11, 22). உன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது, நீ மரணமடையப்போகிறாய் என தேவன் அறிவித்த தன்னுடைய முடிவை எவ்வித மறுப்புமின்றி…

July

மீண்டும் மக்கள் தொகை கணக்கீடு

(வேதபகுதி: எண்ணாகமம் 26:1-65) “அநேகம்பேருக்கு அதிகச் சுதந்தரமும், கொஞ்சம் பேருக்குக் கொஞ்சம் சுதந்தரமும் கொடுப்பாயாக; அவர்களில் எண்ணப்பட்டவர்களின் இலக்கத்துக்குத் தக்கதாக அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்க வேண்டும்” (வச. 11). பின்னாவைகளை மறந்து முன்னானவைகளை நோக்கி தேவன் அழைத்த பரம அழைப்புக்கு இலக்கை நோக்கித் தொடருகிறேன் என்று பவுல் அடிகளார் சொன்னதுபோல, பாவத்தினால் ஏற்பட்ட தோல்விகள், அவிசுவாசத்தினால் உண்டான இழப்புகள், பாலைவனத்தில் நிகழ்ந்த மரணங்கள் ஆகிய யாவற்றிலிருந்து விடுபட்டவர்களாக ஒரு புதிய சந்ததியாக இஸ்ரயேலர் கானானுக்குள் பிரவேசிக்க இருக்கிறார்கள்.…

July

நம்மைக் காப்பாற்றுகிற கிறிஸ்து

(வேதபகுதி: எண்ணாகமம் 25:1-18) “… பினெகாஸ், என் நிமித்தம் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரகத்தைத் திருப்பினான்” (வச. 11). இஸ்ரயேலர்கள் தனித்துவமான வாழ்க்கைக்காக பிரித்து எடுக்கப்பட்டவர்கள். தேவனுக்கு விரோதமான பகையை உண்டுபண்ணுகிற உலக சிநேகத்தை நாடாதீர்கள் என்று தேவன் அவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். மோவாபின் அரசன் பிலேயாம் மந்திரத்தால் முடியாததை தந்திரத்தினால் சாதித்தான். தங்களுடைய வாளுக்கு முன் மண்டியிட வைக்கமுடியாத இஸ்ரயேலரை தம்முடைய சிலைகளுக்கு முன் மண்டியிட வைத்தான். கெர்ச்சிக்கிற சிங்கமாய் வந்தான், முடியவில்லை,…

July

யாக்கோபிலிருந்து தோன்றும் நட்சத்திரம்

(வேதபகுதி: எண்ணாகமம் 24:12-25) “… ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத் புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்” (வச. 17). தேவனுடைய வழிகள் நம்மால் ஆராய்ந்து முடியாதவை. நம்முடைய எண்ணங்களைக் காட்டிலும் அவருடைய எண்ணங்கள் உயர்வானவை. நம்முடைய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறவர். நாம் நினைத்தபடி அவருடைய ஒரு கட்டத்துக்குள் அடக்கமுடியாதவர். பணத்துக்காக அஞ்சனம் பார்க்கிற ஒரு மனிதன் மூலமாகவும் தம்முடைய நோக்கத்தை, இஸ்ரயேலரைக் குறித்த எதிர்காலத் திட்டத்தை…

July

தேவனுக்குப் பிரியமான யாக்கோபு

(வேதபகுதி: எண்ணாகமம் 24:1-11) “யாக்கோபே, உன் கூடாரங்களும் இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவை” (வச. 5). தேவனுடைய மக்களைத் தெளிவாகக் காணக்கூடாதபடிக்கு பாலாக் பிலேயாமை உயரமான மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான். பரிசுத்த ஆவியானவரோ பிலேயாமினிடத்தில் வந்து அவனுடைய கண்களைத் திறந்து இஸ்ரயேலரின் பாளையத்தை தெளிவாகக் காண்பித்தார். இப்பொழுது தேவன் காண்கிற வண்ணமாகவே பிலேயாமும் இஸ்ரயேலரைக் கண்டான். கண்கள் திறக்கப்பட்டவனாக ஆண்டவரின் வார்த்தைகளை இஸ்ரயேலரின் அழகை வர்ணித்தான். தேவன் காண்கிறவிதமாகவே நாமும் பார்ப்பதற்கு பரிசுத்த ஆவியானவரின்…

July

பொய்யுரையாத தேவன்

(வேதபகுதி: எண்ணாகமம் 23:13-30) “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரோ? (வச. 19). பாலாக் பிலேயாமை நோக்கி, இஸ்ரயேலரின் கடைசிப் பாளையத்தை மட்டும் பார்க்கும்படி இன்னும் உயரமான மலையுச்சிக்கு அழைத்துச் சென்றான். அதாவது அவர்களுடைய குடியிருப்பு முழுவதையும் பார்க்கக்கூடாதபடி, பிலேயாமின் கண் பார்க்கும் தூரத்தை இன்னும் அதிகமாக்கினான். (வச. 13,14). பல நேரங்களில் இந்த பாலாக்கைப் போலவே நாம் என்ன…