July

இஸ்ரயேலை ஆசீர்வதிப்பதை கர்த்தருக்குப் பிரியம்

(வேதபகுதி: எண்ணாகமம் 23:1-12) “தேவன் சபிக்காதவனை நான் சபிப்பது எப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பது எப்படி” (வச. 8). பாலாக் இஸ்ரயேல் மக்களை சபிக்க வேண்டும் என்று விரும்பினான்; கர்த்தரோ அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார். பாலாக் எந்த மனிதனுக்கு பணம் கொடுத்து சபிக்க ஏற்பாடு செய்தானோ அந்த பிலேயாமைக் கொண்டே தன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க வைக்கிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளுடைய நலனுக்காக யாரைக் கொண்டும் கிரியை செய்ய முடியும் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டை இங்கே காண்கிறோம்.…

July

தேவசித்தத்தை மாற்ற முயல வேண்டாம்

(வேதபகுதி: எண்ணாகமம் 22:22-4) “அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி; … இப்பொழுதும் உம்முடைய பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால் நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்” (வச. 34). பிலேயாம் கர்த்தருடைய சித்தத்தை மாற்ற முயன்றான். நம்முடைய விடாப்பிடியான சுயசித்தம் பல நேரங்களில் தேவசித்தத்தை அறிய முடியாதவாறு கண்களை மறைத்துவிடுகிறது. பாதிதூரம் வந்தபின்னர் “இது தகாததாயிருக்குமானால் நான் திரும்பிப் போய்விடுகிறேன்” எனக்கூறிய பிலேயாமைப் போலவே நம்முடைய ஜெபங்களும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே ஒன்றை மனதில் நிர்ணயம் செய்துவிட்டு அற்கேற்ப…

July

இருமனம் வேண்டாம்

(வேதபகுதி: எண்ணாகமம் 22:1-21) “… ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்க வேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறியடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச் சொன்னான்” (வச. 6). இஸ்ரயேலரின் வெற்றி யோர்தான் ஆற்றுக்கு இக்கரையில் இருந்த மக்களையும், அவர்களுடைய அரசர்களையும் கலங்கடித்தது. அவர்களை போரிட்டு வெற்றி கொள்ள முடியாது என்று உணர்ந்துகொண்டார்கள். இவர்களைத் தோற்கடிக்க மோவாபியர் மீதியானியரோடு கூட்டுச் சேர்ந்து, ஆலோசனை பண்ணினார்கள். பின்னர் பிலேயாமின் ஆலோசனையை நாடினார்கள். ஆவிக்குரிய…

July

தேவனின் முடிவில்லாத வல்லமை

(வேதபகுதி: எண்ணாகமம் 21:10-35) “அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச் செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்” (வச. 16). இஸ்ரயேல் மக்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காவும் முறுமுறுத்து தேவனுக்கு எதிராகக் கலம் செய்தார்கள். மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீரைக் கொடுக்க முடியாதவர் அல்லர் நம்முடைய தேவன். தம்முடைய ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் முன்னர், அதைப் பெற்றுக்கொள்வதற்குப் பாத்திரவான்களாக நம்மை மாற்ற முயலுகிறார். கிறிஸ்துவின் சிலுவை மரணமே நம்முடைய அனைத்து…

July

உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பம்

(வேதபகுதி: எண்ணாகமம் 21:1-9) “அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப் பார்த்தால் பிழைப்பான் என்றார்” (வச. 9). இஸ்ரயேலரின் முந்தின தலைமுறை விசுவாசிகள் அனைவரும் மரித்து விட்டார்கள். இஸ்ரயேலர் ஏறத்தாழ கானான் நாட்டை நெருங்கி விட்டார்கள். இந்தப் புதிய தலைமுறை விசுவாசிகளுடைய வேண்டுதலை தேவன் கேட்டு, கானானியரை வெற்றிகொள்ளும்படி செய்தார். கானானை நோக்கிய தொடர் பயணம் அவர்களுக்கு…

July

எதிரியாகிப்போன சகோதரர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 20:14-29) “இப்படி ஏதோம் தன் எல்லை வழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனைவிட்டு விலகிப்போனார்கள்” (வச. 21). இஸ்ரயேலர் தங்கள் நிலையை விவரித்தும், தயவுபண்ணிக் கேட்டும் (வச. 15-17) தங்கள் நாட்டின் எல்லை வழியாகச் செல்வதற்கு ஏதோமியர் மறுத்துவிட்டார்கள். இந்த எதோமியர் யார்? யாக்கோபுடன் பிறந்த இரட்டைப்பிள்ளைகளில் ஒருவனாகிய ஏசாவின் வழிவந்தவர்கள். ஒருவேளை உணவுக்காக, தலைமகனுக்குரிய சுதந்தரத்தை இழந்துபோன உலகீய மனிதன். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை புறக்கணிக்கிற இயற்கை சுபாவத்தால் நிறைந்த…

July

கன்மலையாகிய கிறிஸ்து

(வேதபகுதி: எண்ணாகமம் 20:1-13) “அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், நாங்கள் இந்தக் கன்மலையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான். ” (வச. 10,11). கன்மலை கிறிஸ்துவுக்கு அடையாளம் (1 கொரி. 10:4). ஏற்கனவே ஒருமுறை தேவ ஆலோசனையின்படி மோசே கன்மலையை அடித்தான் (யாத். 17 அதி), தண்ணீர் அதிலிருந்து புறப்பட்டது, மக்களின் தாகம் தீர்க்கப்பட்டது. மக்கள் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது.…

July

பாவத்தைப் பரிகரிக்கும் நீர்

(வேதபகுதி: எண்ணாகமம் 19:11-22) “ஆகையால், தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்திலே போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்க வேண்டும்” (வச. 17). சிவப்புக் கடாரியின் சாம்பல் கலந்த நீர் வனாந்தரப் பயணத்தில் தீட்டைக் கழிக்க பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டது. இறந்துபோன ஒருவருடைய சடலம் அல்லது அவரைப் புதைக்கிற கல்லறை அல்லது கல்லறையில் கிடக்கிற எலும்புத்துண்டுகள் பாவத்தாலும் அக்கிரமத்தாலும் மரித்துக்கிடக்கிற இந்த உலக மக்களால் நமக்கு ஏற்படும் தீமையையும், வன்முறையையும், ஊழலையும்…

July

சிவப்புக் கிடாரியும் சுத்திகரிப்பும்

(வேதபகுதி: எண்ணாகமம் 19:1-10) “… பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்” (வச. 2). இலட்சக்கணக்கான மக்களின் பயணத்தில் நாள்தோறும் இறப்பு தவிர்க்க முடியாதது. மேலும் எகிப்திலிருந்து புறப்பட்ட இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்களுடைய அவிசுவாசத்தால் பாலைவனத்தில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். பிணத்தைத் தொட்டால் தீட்டு நிச்சயம். அனுதின வாழ்க்கையின் ஒன்றாகிப்போன இத்தீட்டிலிருந்து விடுபடுவது எங்ஙனம்? இதற்கான நிவாரணமே சிவப்புக் கடாரியின் சாம்பல் கலந்த நீர். லேவியராகமத்தில்…

July

நாம் சகோதரர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 18:1-32) “… நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும், பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள். ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன்” (வச. 5,6). துளிர்த்த கோலின் மூலமாக ஆரோனின் ஆசாரியத்துவத்தை உறுதிப்படுத்திய தேவன் இப்பொழுது அக்குடும்பத்தாரின் மேன்மையையும் அவர்கள் செய்கிற சேவையின் முக்கியத்தையும் தெரிவிக்கிறார். தேவன் நமக்கென்று சில பணியைக் கொடுக்கிறார். அதைப் பயத்தோடும் பக்தியோடும் அவருடைய நாம மகிமைக்காகவும் செய்ய…