January

2022 ஜனவரி 11

(வேதபகுதி: யாத்திராகமம் 3:2) “அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப் பார்த்தான்; முட்செடி ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது” (வச. 2). விசுவாசத்தினால் கிறிஸ்துவைத் தரிசித்து, அவரால் வரும் நிந்தையை அதிகப் பாக்கியமென்று எண்ணி எகிப்தின் பொக்கிஷங்களை உதறித் தள்ளிய மோசேக்கு (எபி. 11:26,27) இப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் அக்கினி ஜுவாலையின் வாயிலாகக் காட்சியளிக்கிறார். ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிற ஓர் எளிய மேய்ப்பனிடம்…

January

2022 ஜனவரி 10

(வேதபகுதி: யாத்திராகமம் 3:1) “மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான்; அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான்” (வச. 1). அரண்மனை ராஜகுமாரன் இப்பொழுது ஆடுகளின் மேய்ப்பன். மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்கிற ஒரு தலைவனாகவும், பொறுமையும், சாந்தமும் நிறைந்த ஒரு தலைவனாகவும் மாற்றுவதற்கான பயிற்சி இப்பொழுது நிறைவு பெற்றது. பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் மேய்ப்பர்களைப் பற்றி அதிகமாகவே பேசுகிறது. ஒரு மேய்ப்பனின் பணி கனிவு,…

January

2022 ஜனவரி 09

(வேதபகுதி: யாத்திராகமம் 2:23-25) “தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்” (வச. 24). காலங்கள் கடந்தன. எபிரெயர்களைக் கொடுமைக்குள்ளாக்கிய அரசன் இறந்தான். ஒருவேளை புதிய அரசன் தங்களை மென்மையாக நடத்தலாம் என்று இவர்கள் நம்பியிருக்கலாம். ஆனாலும் இவர்களுடைய துன்பத்துக்கு முடிவில்லை. புதிய பார்வோனும் இவர்களைத் துன்பப்படுத்துவதையே தெரிந்துகொண்டான். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இந்த மக்கள் உலகத்திலிருந்து நமக்கு நன்மை உண்டாகும் என்ற பொய்யான நம்பிக்கையைச் சார்ந்துகொள்ளாமல் இருப்பதற்கு துன்பத்தைத் தேவன்…

January

2022 ஜனவரி 08

(வேதபகுதி: யாத்திராகமம் 2:15-22) “அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்திலே பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்” (வச. 22). மோசேயின் வாழ்க்கையை மூன்று நாற்பதுகளாகப் பிரிக்கலாம்: முதல் நாற்பது எகிப்திய இளவரசன், இரண்டாவது நாற்பது மீதியான் தேசத்து மந்தை மேய்ப்பன், கடைசி நாற்பது எபிரெயர்களின் விடுதலைத் தலைவன். உலகக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்த மோசே, இப்பொழுது தெய்வீகப் பல்கலைக் கழகத்தின் முதுநிலைப் படிப்புக்கான இரண்டாவது காலகட்டத்துக்குள் அடியெடுத்து வைக்கிறான்.…

January

2022 ஜனவரி 07

(வேதபகுதி: யாத்திராகமம் 2:10-14; எபிரெயர். 11: 24-27) “இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிகப் பாக்கியமென்று எண்ணினான் ” (எபி. 11:26). எந்தப் பார்வோன் ஆண் பிள்ளைகளையெல்லாம் ஆற்றில் போட்டுவிட ஆணையிட்டானோ, அவனே, “மோசே” என்று ஒவ்வொரு முறை அழைக்கும்போதும் “இவன் ஆற்றிலிருந்து எடுக்கப்பட்டவன்“ என்பதை பறை சாற்றிக்கொண்டிருந்தான். ஒரு நகைமுரண். “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்” (சங். 2:4) என்ற சங்கீதக்காரனின் கூற்றை இந்த வகையிலும் தேவன் நிறைவேற்றுவார் போல. தம்முடைய…

January

2022 ஜனவரி 06

(வேதபகுதி: யாத்திராகமம் 2:5-9) “அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயப் பிள்ளைகளில் ஒன்று என்றாள் ” (யாத். 2:6). தேவன் காலங்களைக் கச்சிதமாக ஒருங்கிணைக்கிறவர். குழந்தை வைக்கப்பட்ட பெட்டி கரை ஒதுங்கிய இடம் மற்றும் நேரம், பார்வோனின் குமாரத்தி நீராட வருகிற நேரம் எல்லாம் தேவனின் அநாதி திட்டத்தில் இருந்தன. நைல் நதியின் நீர் அவளுடைய அழுக்கைக் கரைத்ததோ இல்லையோ, ஆனால் இளங்குழந்தையின் அழுகை அவளுடைய கடின இருதயத்தைக்…

January

2022 ஜனவரி 05

(வேதபகுதி: யாத்திராகமம் 2:1-4) “மோசே பிறந்தபோது அவனுடைய தாய் தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதம் ஒளித்துவைத்தார்கள்” (எபி. 11:23). ஒரு திருமணம், ஒரு குடும்பம், ஒரு குழந்தை. முழு இஸ்ரவேல் குடும்பத்தாரையும் மீட்க ஒரு குடும்பத்தைத் தெரிந்துகொள்கிறார். நிலைமை மோசமாகும்போது தேவன் தம்முடைய வேலையைத் தொடங்குகிறார். துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிற மக்கள் கூட்டத்திலிருந்தே ஓர் இரட்சகனை ஆயத்தம் செய்கிறார். நம்முடைய பரம மீட்பரும் நேரே வானத்திலிருந்து இறங்காமல்…

January

2022 ஜனவரி 04

(வேதபகுதி: யாத்திராகமம் 1:15-22) “மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண் பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்” (வச. 17). யோசேப்பை அறியாத அரசனின் உள்ளத்தில் தோன்றிய இரண்டாவது உபாயம் எபிரெய மக்களில் பிறக்கிற ஆண் பிள்ளைகளைக் கொல்வது. இவ்வாறு செய்வதன் மூலமாக எபிரெய இனம் மேலும் பெருக விடாமல் தடுப்பது, அடிமைத்தனத்தை எதிர்த்துப் போரிடக்கூடிய ஆண்கள் இல்லாதபடி ஒழிப்பது. இதை நிறைவேற்றுவதற்காக பார்வோனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களே சிப்பிராள், பூவாள் என்னும் பிள்ளைப்பேறு பார்க்கிற…

January

2022 ஜனவரி 03

(வேதபகுதி: யாத்திராகமம் 1:9-14) “நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ண வேண்டும்” (வச. 10). யோசேப்பை அறியாத அரசனின் உள்ளத்தில் தோன்றிய முதல் எண்ணம் பயம். போர் ஏற்பாட்டால், இஸ்ரவேலர் எதிரியோடு சேர்ந்துவிடுவாhர்கள் என்ற பயம். அவர்களுடைய ராணுவ வீரர்கள், அவர்கள் வைத்திருக்கிற போர் ரதங்கள், இன்னும் பல ஆயுதங்கள்; இவற்றின்மேல் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. தங்களுடைய பலவீனம், அவநம்பிக்கை, பயம் இவற்றை மறைக்க இஸ்ரவேலரைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இன்றைக்கு உலகமெங்கும் கிறிஸ்தவர்களைக் எண்ணம் இப்படியானதாகவே இருக்கிறது.…

January

2022 ஜனவரி 02

(வேதபகுதி: யாத்திராகமம் 1:1-8) “யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்திலே தோன்றினான்” (வச. 8). யாக்கோபும், அவனுடைய பிள்ளைகளும் கானான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தினிமித்தம் எகிப்துக்குச் சென்றார்கள். இவனுடைய மகன் யோசேப்பு அங்கே அதிபதியாயிருந்தான். இந்த யோசேப்பைக் கொண்டு கர்த்தர் எகிப்தையும், சுற்றியிருந்த நாடுகளையும் பஞ்சத்தினின்று காப்பாற்றினார். யோசேப்பு உயிரோடிருந்த நாட்களிலும், அவனுக்குப் பின் அவனுடைய செயல்களை அறிந்த வரையிலும் யாக்கோபின் இனத்தார் அங்கே சுதந்தரமாக வாழ்ந்தார்கள். இப்பொழுது எகிப்தில் வேறொரு புதிய சாம்ராஜ்யம் உருவாகிறது.…