January

2022 ஜனவரி 21

(வேதபகுதி: யாத்திராகமம் 4:27-31) “கர்த்தர் ஆரோனை நோக்கி, நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவ பர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்” (வச. 27). தேவன் நம் வாழ்க்கையை வடிவமைக்கும்போதே, நம்முடைய பயணத்தில் ஏராளமான மனிதர்களைச் சந்திக்கும்படியே திட்டமிட்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், மோசே ஆரோன் சந்திப்பு நடைபெற்றது. மோசேயை ஆயத்தப்படுத்தியதுபோல ஆரோனையும் புறப்பட்டு வர ஆயத்தப்படுத்தினார். அங்கே இருதயங்கள் மகிழ்ந்தன, பாசமழை பொழிந்தது, ஆனந்தக் கண்ணீரில் குளித்தார்கள். சுவிசேஷகனாகிய பிலிப்பு-எத்தியோப்பிய மந்திரி…

January

2022 ஜனவரி 20

(வேதபகுதி: யாத்திராகமம் 4:18-26) “அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டு போனான்” (வச. 20). மோசே என்னும் தனியொருவனை ஆயத்தம் பண்ணிய தேவன் இப்பொழுது அந்தக் கனமான ஊழியத்துக்கு அவனுடைய குடும்பத்தை ஆயத்தம் செய்கிறார். தேவனுடைய மனிதன் என்ற முறையில் உலக மக்களைச் சந்திக்கும் முன் தன் சொந்தக் குடும்பத்தாரை ஆதாயம் செய்ய வேண்டியது மிக அவசியம். தன்…

January

2022 ஜனவரி 19

(வேதபகுதி: யாத்திராகமம் 4:10-17) “அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்கு வல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்” (வச. 10). தேவனையும் தேவனுடைய வல்லமையும் பார்ப்பதற்குப் பதிலாக தன்னையும், தன்னுடைய குறைவுகளையுமே மோசே இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறான். நான் உன்னோடு இருக்கிறேன் என்கிறார்; அவனோ என்னிடத்தில் திறமையில்லை என்கிறான். சாக்குப்போக்குகள் தேவையில்லை, என்னைப் பெலப்படுத்தும் என்ற மன்றாட்டே தேவையானது. தேவனுக்குச்…

January

2022 ஜனவரி 18

(வேதபகுதி: யாத்திராகமம் 4:6-9) “மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது” (வச. 6). பாலைவனமும் ஓரேப் மலையும் சந்திக்கிற அடிவாரத்தில் தேவனுடைய அளவற்ற கிருபையும் மனிதனின் அவிசுவாசமும் வெவ்வேறு வழிகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மோசேயின் அவநம்பிக்கையின் இருளைப் போக்க தேவன் மற்றுமொரு கிருபையின் ஒளிக்கீற்றை வீசச் செய்கிறார்.…

January

2022 ஜனவரி 17

(வேதபகுதி: யாத்திராகமம் 4:1-5) “கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்” (வச. 2). தேவனுடைய அழைப்பும் அவரது வாக்குறுதிகளும் மாறாதவை. “அவர்கள் என்னை நம்பார்கள்” (வச. 1) என்பது மோசேயின் நம்பிக்கையின்மையே அன்றி வேறன்று. நல்ல மேய்ப்பன் ஆடுகளின் மேய்ப்பனுடன் பொறுமையுடன் உரையாடுகிறார். விசுவாசத்தில் பின்தங்கியிருக்கிற வேளைகளில் நம்மோடும் இவ்விதமாகவே தேவன் இடைபடுகிறார். ஆடுகளின் பாதுகாவலனாகிய ஒரு மேய்ப்பனிடம் என்ன இருக்கும்? ஒரு கோல். மோசேயிடம் இருந்தவரைக்கும் இது கோல்,…

January

2022 ஜனவரி 16

(வேதபகுதி: யாத்திராகமம் 3:16-22) “அவர்கள் உன் வாக்குக்குச் செவிகொடுப்பார்கள்” (வச. 18). தேவனுடைய கடிகாரம் பூரணமானது, அதன் முட்கள் ஒருபோதும் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ ஓடாது. தேவன் ஏற்ற நேரத்தில் இருதயங்களை ஆயத்தம் செய்கிறார். எபிரெயர்களின் விடுதலைக்கான நேரம் நெருங்கிவிட்டது. என்னுடைய திட்டத்தை மூப்பர்களிடம் அறிவி, அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்கள் என்று தேவனாகிய கர்த்தர் மேசேயிடம் கூறுகிறார். நம்முடைய தேவபணியில் நாம் சோர்ந்து போயிருக்கலாம். ஆனால் பொறுமையாய்க் காத்திருந்து ஜெபத்தில் தேவ ஒத்தாசையை நாடும்போது ஏற்ற வேளையில்…

January

2022 ஜனவரி 15

(வேதபகுதி: யாத்திராகமம் 3:13-15) “அதற்குத் தேவன்: இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார் ” (வச. 14). மோசே இன்னும் தேவனுடைய பணிக்குத் தன்னைத் தகுதியற்றவனாகவே கருதுகிறான். ஆகவே தன்னுடைய அடுத்த மறுப்பை “இஸ்ரவேல் மக்கள் உம்முடைய பெயர் என்னவென்று கேட்டால் நான் என்ன சொல்லுவேன்” என்று கூறுகிறான். “எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் எற்படுத்தினவன் யார்” (2:14) என்ற கேள்வியை நாற்பது…

January

2022 ஜனவரி 14

(வேதபகுதி: யாத்திராகமம் 3:11-12) “அப்பொழுது மோசே, தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்து வரவும், நான் எம்மாத்திரம் என்றான் ” (வச. 11). நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மோசேயிடம் இருந்த மனப்பான்மை முற்றிலும் மாறிவிட்டது. இந்தப் பெரிய வேலைக்கு “நான் எம்மாத்திரம்” என்ற தாழ்மையின் உச்சரிப்பை வெளிப்படுத்தினான். தேவன் நம் ஒவ்வொருவரிடமிருந்தும் இதையே எதிர்பார்க்கிறார். இந்தப் பண்பு நம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இஸ்ரயேல் மக்களின் முதல்…

January

2022 ஜனவரி 13

(வேதபகுதி: யாத்திராகமம் 3:7-10) “அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளின் நிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனையையும் அறிந்திருக்கிறேன்” (வச. 7). நம்முடைய தேவன் ஜீவனுள்ளவர். நம்முடைய உபத்திரவத்தைக் காண்கிறவர்; ஒடுக்குதலின் புலம்புதலுக்குச் செவிகொடுக்கிறவர்; வலியையும் வேதனையையும் அறிகிறவர். இறைவனுக்கு என்னுடைய நிலை தெரியுமா என்று கலங்கத் தேவையில்லை. தேவன் இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்து, நம்மைப் போன்ற மாம்ச சரீரத்தில் வாழ்ந்தவர். அவர்தாமே சோதிக்கப்பட்டு…

January

2022 ஜனவரி 12

(வேதபகுதி: யாத்திராகமம் 3:3-6) “அப்பொழுது அவர், இங்கே நீ கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்” (வச. 5). நீ எகிப்து நாட்டுக்குப் போகப் பயப்பட வேண்டாம் என்று யாக்கோபுக்குத் தரிசனமாகிப் பேசிய அதே தேவன்தான் (ஆதி. 46:3; யாத். 3:4) இப்பொழுது மோசேக்கும் தரிசனமாகிப் பேசுகிறார். ஈசாக்கின் பயபக்திக்குரியவர் (ஆதி. 31:42) மோசேக்கும் பயபக்திக்குரியவரே. தம்மைப் பார்க்கும்படி அருகில் வர முயன்ற மோசேயிடம் தன்னுடைய…