இயேசு யூதருக்கு இடறுதலின் கல்லாயிருப்பார்

முன்னுரைப்பு: சங்கீதம் 118:22

juden

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.

ஏசாயா 8:14

அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார். ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.

நிறைவேறுதல்: 1.பேதுரு 2:7

ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று.

ரோமர் 9:33

இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன். அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

மேசியா உலகப் பிரகாரமாகத் தங்களை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் அரசனாகவோ அல்லது பலமிக்க தலைவனாகவோ வருவார் என்று யூதர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழைக் கன்னியின் வயிற்றில் பிறந்து,  தச்சன் வீட்டில் வளர்ந்து, சாதாரண மீன் பிடிக்கிற எளியவர்களைத் தம் சீஷராகத் தேர்ந்தெடுக்கொண்டு, ஆயக்காரரோடும் பாவிகளோடும் உறவாடி, சமாதானக் கர்த்தாவாக கழுதையின் மேல் ஏறி பவனி வந்து, என்னுடைய இராஜ்யம் இவ்வுலகுக்குரியதல்ல என்று கூறியது ஆசாரியருக்கும் பரிசேயருக்கும்,  வேதபாரகருக்கும் பொதுவாக சாதாரண யூதருக்கும் ஜீரணிக்க முடியாத ஒரு காரியமாயிருந்தது. ஆகையினால் அவரை மேசியா என்று ஏற்றுக்கொள்ளாமல் இகழ்ந்து, உதாசீனப்படுத்தி கடைசியில் சிலுவையிலறைந்து கொன்றார்கள்.

யூதர்க் அகாதென்று தள்ளிய இயேசுவே அவர்களுக்கு இடறுதலின் கல்லாகவும் விசுவாசிகளுக்கு உலக இரட்சகராகவும் பாவிகளை மீட்கும் பரிகாரியாகவும் இருந்து, தாவீது, ஏசாயாவின் முன்னறிவிப்புகளை நிறைவேற்றினார்.

இயேசு ஒரு நியாயாதிபதியாயிருப்பார்

முன்னுரைப்பு: ஏசாயா 32:22

Jesus

கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.

நிறைவேறுதல்: யோவான் 5:30

நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை.  நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

2.தீமோ.4:1

நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:

இன்னும் பல வேதவாக்கியங்களின்மூலம் இயேசுவே உலக மக்களை நியாயந்தீர்ப்பாா என்று காண்கிறோம். அவையாவன:

இயேசு கிறிஸ்து கூறியது:

(1) யோவான் 5:22: அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

(2) மத்தேயு 16:27: மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார். அப்பொழுது, அவனவன்  கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

(3) மத்தேயு 25:31-45: அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.  அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன்,  எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்@ தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள். அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள். வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள். வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள். காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.  அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.  பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை. அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை. வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை. வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.  அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 

 பரிசுத்த பவுல் கூறியது:

அப்போஸ்தலர் 17:31: மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார். அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்…..

இவ்விதமாக இயேசு கிறிஸ்து உலக நியாயாதிபதியாக வருவார் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது.

இயேசு ஒரு ஆசாரியனாயிருப்பார்

முன்னுரைப்பு: சங்கீதம் 110:4

Jesus

நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார். மனம் மாறாமலுமிருப்பார்.

சகரியா 6:12-13

……. சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும். அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார். தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார். இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.

 நிறைவேறுதல்: எபிரெயர் 3:1

இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்.

எபிரெயர் 5:5-6

அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராயிருக்கிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை. நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று  சொல்லியிருக்கிறார்.

ஒரு ஆசாரியன் தன் ஜனத்தின் பாவங்களுக்காக பலி செலுத்தி ஆண்டவரிடம் பரிந்து மன்றாடுவதுபோல இயேசு கிறிஸ்து உலக மக்களுக்காக தம்மையே பலியாக ஒப்புக் கொடுத்து ஆண்டவரின் வலது பாரிசத்திலிருந்துகொண்டு நமக்காகப் பரிந்து பேசும் ஆசாரியராயிருக்கிறார். இப்படியாக தாவீது, சகரியா முதலியவர்கள் மூலமாய் முன்னுரைக்கப்பட்டவைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்.

இயேசு ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்

முன்னுரைப்பு: உபாகமம் 18:18

Jesus

உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

 நிறைவேறுதல்: மத்தேயு 21:10-11

அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.  அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

லூக்.7:15-16

மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.  

யோவான் 4:19

அப்பொழுது அந்த ஸ்திரீ (சமாரிய ஸ்திரீ) அவரை (இயேசுவை) நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.

(இன்னும் யோவான் 6:14,  7:40,  அப்.3:22-23ஐ பார்க்கவும்.

மோசே தீர்க்கதரிசிகளில் தலைசிறந்தவராக மதிக்கப்பட்டார். அவரைப்போல ஒரு தலைசிறந்த தீர்க்கதரிசி எழும்பவார் என்ற முன்னுரைப்பு இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது. அது எப்படியெனில்:

(1) இயேசுவும் மோசேயும் குழந்தைகளாயிருந்தபோது அரச மரண தண்டனைக்குத் தப்பினர்.

(2) இருவரும் தங்கள் ஜனத்தை மீட்க உலகத்திற்கு அனுப்பப்பட்டனர்.

(3) இருவரும் யேகோவாவிற்கும், யூத ஜனத்திற்கும் மத்தியஸ்தராயிருந்தனர்.

(4) இருவரும் பாவிகளுக்காக, முரட்டாட்டம் பிடித்த மக்களுக்காக விண்ணப்பம்பண்ணுகிறவர்களாக இருந்தனர்.

இயேசு கிறிஸ்து திரியேக கடவுள்

முன்னுரைப்பு: சகரியா12:10

trinity

 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.

(1) நான் = கர்த்தர் (பிதா)

(2) கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் (பரிசுத்த ஆவி)

(3) தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து (குமாரனாகிய இயேசுவை நோக்கிப் பார்த்து)

இவ்விதமாகப் பிதா, குமாரன், பரிசுத்த அவி மூவரும் ஒரே கடவுள் என்பதை இவ்வசனம் ஊர்ஜிதப்படுத்துகிறது.

கீழ்க்கண்ட வசனங்களும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஒரே கடவுள் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றன.

யோவான் 14:16

 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

அப்போஸ்தலர் 1:4,8

அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்.  நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.  பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

இவ் வசனங்களின்மூலம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய மூவரும் ஒன்றாகச் செயல்ப்படுகிறார்கள் என்பதை அறியலாம்.

இயேசு கிறிஸ்து அற்புதங்களைச் செய்கிறவராய் இருப்பார்

முன்னுரைப்பு: ஏசாயா 35:4-6

Jesus

மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள். இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான். ஊமையன் நாவும் கெம்பீரிக்கும். வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.

ஏசாயா 42:6

நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், ..

நிறைவேறுதல்:

இயேசு கிறிஸ்து தமது ஊழியத்தில் வியாதியஸ்தரைச் சுகப்படுத்தியதும், பிசாசு பிடித்திருந்தவர்களைச் சுகப்படுத்தியதும் எண்ணிக்கைக்கு அடங்காததாக இருந்தது. அவர் மனதுருகி தம்மிடத்தில் வந்த எல்லா வியாதிக்காரருக்கும் சுகத்தைக் கட்டளையிட்டார். அவருக்கு விரோதிகளாயிருந்த ஆசாரியர்களும், பரியேசரும் அவரைப்பற்றி, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே நாம் இவனை இப்படி விட்டுவிட்டால் எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள் (யோ.11:47-48) என்று இயேசு அற்புதங்களைச் செய்தார் என்று சாட்சி கொடுத்து  அவரைக் கொலை செய்ய வகைதேடினார்கள் என்று வேதம் கூறுகிறது.

மத்தேயு 9:35

பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து,  ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல  நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

இவ்விதமாய் ஏசாயாவின் மூலமாய் ஆண்டவர் 700 வருடங்களுக்கு முன் முன்னுரைத்தது கிறிஸ்துவில் நிறைவேறியது.

இயேசு கிறிஸ்து நமது மேய்ப்பன்

முன்னுரைப்பு: ஏசாயா 40:11

Jesus

மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். 

எசேக்கியேல் 34:23

அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்.  இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார். 

நிறைவேறுதல்: யோவான் 10:11,14-16,27

நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். நானே நல்ல மேய்ப்பன். பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்.  ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு. அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.

இப்படியாக இயேசு கிறிஸ்து நமது மேய்ப்பனும் நாம் அவருடைய மேய்ச்சலின் ஆடுகளுமாய் இருக்கிறோம்.

உவமைகளினால் இயேசு பேசுவார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனம்

முன்னுரைப்பு: சங்கீதம் 78:2

Jesus

என் வாயை உவமைகளால் திறப்பேன். பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன். 

நிறைவேறுதல்: மத்தேயு 13:10-11,13

அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.

மத்தேயு 13:34-35

இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார். உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. என் வாயை உவமைகளினால் திறப்பேன். உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மேசியா உவமைகளின்மூலம் மறைபொருள்களை வெளிப்படுத்துவார் என்ற சங்கீதக்காரனின் தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்து தம்மிடத்தில் வந்த ஜனங்களிடத்தில் உவமைகளின்மூலம் சுவிசேஷத்தை அறிவித்ததினால் 1000 வருடங்களுக்குப் பின் நிறைவேறியது. 50 க்கும் மேற்பட்ட உவமைகள் இயேசு கிறிஸ்து கூறியதாக சுவிசேஷங்களில் காணலாம்.

இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் தன்மையைப்பற்றிய முன்னறிவிப்பு

முன்னுரைப்பு: ஏசாயா 61:1-3

Jesus

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார். அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள். 

நிறைவேறுதல்: லூக்கா 4:16-21

தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.  அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:  கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்.  தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்.  இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,  வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.

மேசியாவாக வருபவர் (1) தரித்திரருக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், (2) பாவ பாரத்தினால் இருதயம் நொறுங்குண்டவர்களுக்குப் பாவ விமோசனம் அளிக்கவும் (3) பாவத்தினால் சிறைப்பட்டவர்களுக்கு விடுதலைலயளிக்கவும், (4) பிணியாளிகளைச் சுகப்படுத்தவும் (5) கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து எச்சரிக்கவும் வருவார் என்று ஏசாயாவின் மூலம் முன்னறிவிக்கப்பட்டபடி 700 வருடங்களுக்குப்பின் இத்தீர்க்கதரிசனம் தம்மில் நிறைவேறுகிறது என்று இயேசு கூறினார்.

செபுலோன், நப்தலி நாடுகளில் இயேசுவின் ஊழியத்தைக் குறித்த தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவின் ஊழியம் கலிலேயாவில் ஆரம்பமாகும்

முன்னுரைப்பு: ஏசாயா 9:1-2

Jesus

ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை. ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார். இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.

யோவான் 4:12

யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய்,  

நிறைவேறுதல்: மத்தேயு 4:13-16

நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார். கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,  இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

இயேசு கிறிஸ்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார் என்ற தீர்க்கதரிசனப்படி பெத்லகேமிலே பிறந்தார். ஆனால் அவருடைய ஊழியம் செபுலோன், நப்தலி கோத்திரங்களின் பிரதேசத்திலும் கடற்கரை பிரதேசத்திலும் நடைபெறும் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் அப்பிரதேசம் கலிலேயா நாடு என்று அழைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து கலிலேயா நாட்டிலும், கலிலேயா கடற்கரைப் பிரதேசத்திலும் தமது ஊழியத்தைத் துவக்கி இத்தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்.

இயேசு கிறிஸ்துவுக்கு வந்த சோதனைகளைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள்

இயேசுவானவர் ஞானஸ்நானம் பெற்று யோர்தானை விட்டு வெளியேறியவுடன் ஆவியானவராலே வனாந்தரத்துக்குக் கொண்டு போகப்பட்டார். 40 நாள் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்.  அப்பொழுது பிசாசானவன் அவரைச் சோதிக்கத் தொடங்கினான்.

versuchung

முதலாம் சோதனை:

முன்னுரைப்பு: உபாகமம் 8:3

அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல. கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

நிறைவேறுதல்: லூக்.4:3-4

அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.  

இரண்டாம் சோதனை:

முன்னுரைப்பு: உபாகமம் 6:13

உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக.

நிறைவேறுதல்: லூக்.4:5-8

பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது.  எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.  இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

மூன்றாம் சோதனை:

முன்னுரைப்பு: சங்கீதம் 91:11-12

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில்  இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.

நிறைவேறுதல்: லூக்.4:9-11

அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

முன்னுரைப்பு: உபாகமம் 6:16

நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக.

நிறைவேறுதல்: லூக்.4:12

அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.

இவ்வண்ணமாகக் கிறிஸ்துவுக்கும் சோதனைகள் வரும், அவைகளை அவர் வேதவாக்கியங்கள் மூலமாகவே ஜெயிப்பார் என்பது ஆதியிலேயே முன்னுரைக்கப்பட்டு நிறைவேறின.

பரிசுத்தாவியானவரின் அபிஷேகம்

முன்னுரைப்பு: ஏசாயா 11:2

Jesus

ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். 

ஏசாயா 61:1

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். …….

நிறைவேறுதல்: மத்தேயு 3:16-17

இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது.  தேவ ஆவி புறாவைப்போல  இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

இயேசு கிறிஸ்து யோவானால் திருமுழுக்குப் பெற்று யோர்தான் நதியிலிருந்து கரையேறினவுடன் பரிசுத்தாவி புறாவைப்போல் அவர்மேல் இறங்கினதுமல்லாமல், வானத்திலிருந்து இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்ற ஒரு சத்தமுண்டாகி, ஏசாயாவின் மூலமாய் முன்னுரைக்கப்பட்ட வேதவாக்கியம் 700 வருடங்களுக்குப் பின் இயேசுவில் நிறைவேறியது.

இயேசு கிறிஸ்துவின் முன்னோடியைப் பற்றிய தீர்க்கதரிசனம்

முன்னுரைப்பு: ஏசாயா 40:3-5

John

 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடு முரடானவைச் சமமாக்கப்படும் என்றும், கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
John

மல்கியா 3:1

இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான். அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்.  இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

மல்கியா 4:5

 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.

நிறைவேறுதல்: மத்.3:1-3

அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது எனறு பிரசங்கம் பண்ணினான். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.

(லூக்.3:3-6 மற்றும் யோவான் 1:6-34 வசனங்களையும் பார்க்கவும்)

மேசியாவுக்கு வழியை ஆயத்தம்பண்ண ஒருவன் வருவான் என்று ஏசாயா, மல்கியா தீர்க்கதரிசிகள் மூலமாய் முன்னுரைக்கப்பட்டது யோவான்ஸ்நானன் யோர்தானுக்கடுத்த வனாந்தரத்திலே தங்கி, போதகம்பண்ணி, பாவ மன்னிப்புக்கென்று யோர்தான் நதியிலே ஞானஸ்நானம் கொடுத்து வந்ததின்மூலம் நிறைவேறியது.

பழுதற்றவராயிருந்தார்

முன்னுரைப்பு: யாத்.12:5

Jesus

அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம்.

எண்.19:2

கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்.

பஸ்காவில் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டி பழுதற்றதாய் இருக்கவேண்டும் என்று யாத்திராகமத்தில் ஆண்டவர் கூறியுள்ளார்.

நம்முடைய பாவங்களைப் பரிகரிக்கும்படியாக அடிக்கப்பட்ட பஸ்காவின் ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்து பழுதற்றவராக இருந்தார் என்று பேதுரு சாட்சி கொடுக்கிறார்.

நிறைவேறுதல்: 1.பேது.1:19

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

எபி.9:14

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

இயேசுவோடு நெருங்கிப் பழகிய அவருடைய சீடர்கள் அவா மாசற்றவராக, பழுதற்றவராக நம்முடைய பாவங்களைப் பரிகரிக்கும் பலி ஆனார் என்று கூறியிருக்கின்றனர்.

மன்னிக்கும் சுபாவம் உடையவர்

முன்னுரைப்பு: சங்கீதம் 86:5

Jesus

ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.

நிறைவேறுதல்: மத்தேயு 9:2

வியாதியஸ்தரை அவர் (இயேசு) சுகப்படுத்தும் சமயங்களில் முதலாவது, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று கூறி அவர்களைச் சுகப்படுத்தினார்.

தன்னைச் சிலுவையிலறைந்தவர்களுக்காகவும் பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கனே (லூக்.23:34) என்று தான் அவாகளை மன்னித்தது மட்டுமல்லாமல் பிதாவையும் மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டார்.

இப்படியாக அவரை நோக்கிக் கூப்பிட்ட யாவர் மேலும் கிருபை நிறைந்தவராயும் மன்னிக்கிறவராயுமிருந்தார்.

நியாயம் நீதி செய்கிறவர்

முன்னுரைப்பு: ஏசாயா 9:7

Jesus

தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை. சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
 

நிறைவேறுதல்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை விரோதித்த யூதரிடம் சொன்னது:

யோவான் 5:30

நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை.  நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்.  எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

தான் பிதாவின் சித்தப்படி நீதியை நிலைநாட்டினார் என்பதைத்தான் யூதருக்கு எடுத்துக்காட்டி ஏசாயாவின் முன்னறிவிப்பை ஊர்ஜிதப்படுத்தினார்.

சத்தியம் நேர்மை

முன்னுரைப்பு : ஏசாயா 11:1,3-4

Jesus

ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை  எழும்பிச் செழிக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும். அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,  நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின்கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
 

நிறைவேறுதல்: மத்தேயு 22:16

தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவைப் பகைத்த வேதபாரகரும், பரிசேயரும், அவர் சத்தியமுள்ளவர், முகதாட்சண்யம் இல்லாத நேர்மையுள்ளவர் என்று தங்கள் வாயினாலே அறிக்கைபண்ணி, ஏசாயாவினால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்கள்.

இயேசு தமது பிதாவின் சித்தத்திற்குக் கடைசிவரை கீழ்ப்படிந்து சிலுவை மரணத்திற்கும் தன்னை ஒப்புக் கொடுத்ததினால் ஏசாயா 11:3ம் வசனத்தை நிறைவேற்றினார்.

இயேசு தேவாலயத்துக்கு வருவார்

முன்னுரைப்பு: ஆகாய் 2:7

சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார். இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மல்கியா 3:1

இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்.  அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்.  இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறாh

நிறைவேறுதல்: லூக்.2:41-49

 இயேசு கிறிஸ்து 12 வயதாயிருக்கையில் தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபொழுது நடந்த சம்பவம்.

அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள். அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய், பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்.  இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள். காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.  அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.  தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.

(இயேசு கிறிஸ்து தேவாலயத்திறல் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்தியது இன்னொரு தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது)

இவ்விதமாய் ஆகாய், மல்கியா தீர்க்கதரிசிகள் மூலமாய் உரைக்கப்பட்டது இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது.

இயேசு எகிப்திற்குக் கொண்டு போகப்படுதலும் திரும்பி வருதலும்

முன்னுரைப்பு: ஓசியா 11:1

இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்.  எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். 

நிறைவேறுதல்: மத்.2:12-15,19-21

பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்.  ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. ஏரோது இறந்தபின்பு, கர்த்தனுடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ. பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான். அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.

எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று ஓசியா தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது. இப்படி 740 வருடங்களுக்குப் பின் நிறைவேறியது.

ஏரோது 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் சங்கரிப்பான் என்னும் முன்னறிவிப்பு

முன்னுரைப்பு: எரேமி..31:15

Rama

ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது. ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நிறைவேறுதல்: மத்.2:11-12,16-18

அவர்கள் அந்த வீட்டுக்குள்பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான். புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது. ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று, எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

ராமா என்பது பலஸ்தீனாவின் பட்டணங்களையும் ராகேல் என்பது யாக்கோபு – ராகேலின் சந்ததியாகிய இஸ்ரவேல் ஜனங்களையும் குறிக்கும்.

இப்படியாகக் கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியின் மூலமாக உரைத்த காரியம் 600 வருடங்களுக்குப் பின் நிறைவேறியது.