February

பெப்ரவரி 9

பெப்ரவரி 9 அதையல்ல, அதிலும் மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள். ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை. அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம் பண்ணினாரே (எபி.11:16). புண்ணிய யாத்திரை செய்பவனுக்கும், நாடோடிக்கும்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த இருவரும் ஊருராய்ச் சுற்றித் திரிபவர்கள் தான். இவர்களுக்கெனஇவ்வுலகில் எவ்விதமான பதவியோ, குறிப்பிட்ட இடமோ கிடையாது. நாடோடிக்கு குறிப்பிட்டஎல்லையோ, நோக்கமோ கிடையாது. விருப்பமான எந்த இடத்திற்கும் செல்வான். ஆனால் புனிதயாத்திரை செல்பவனுக்குப் பரலோகமே எல்லை. அவனது எண்ணமெல்லாம் தேவனைமகிமைப்படுத்துவதையே மையமாகக் கொண்டு…

February

பெப்ரவரி 8

பெப்ரவரி 8 நீ எகிப்து தேசத்துக்குப் போகப் பயப்படவேண்டாம். (ஆதி.46:3) தேவாதி தேவனை முழுமையாக நம்புகிற பிள்ளைகளுக்குஅவரது ஆலோசனைகள் தெளிவாகக் கொடுக்கப்படுகின்றன. இருப்பினும் இதுவே சில சமயங்களில்அவர்களுக்கு முரணானதாகத் தோன்றும். அவருடைய சித்தம் என்று நாம் புரிந்து கொண்டதற்குமாறாக சில வேளைகளில் அவரது ஆலோசனைகள் இருக்கும். தன் தகப்பனுக்கும், பாட்டனுக்கும்வாக்களிக்கப்பட்ட நாட்டிலேதான் யாக்கோபு இருந்தான். அங்கு பஞ்சம் உண்டாயிற்று. இதறக்காகநாட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டுமா? பொன்னைக் காட்டிலும் விலையேறப்பெற்றதல்லவாஉங்கள் விசுவாசம். ஆகவே தேவன் நமக்கென தெரிந்துகொண்ட இடத்திற்குச் சென்று நாம்விசுவாசமுள்ள…

February

பெப்ரவரி 7

பெப்ரவரி 7 மன்னா…. அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது (யாத்.16:31). இஸ்ரவேலருக்கு வனாந்தரத்தில் தேவைகள் அதிகம் இருந்தது.பசியுள்ளவர்களாயிருந்தனர். தேவனுடைய கட்டளையின்படியே அவர்கள் எகிப்த்தைவிட்டு தானியங்கள்,காய்கறிகள், இறைச்சி, மீன் முதலியவற்றோடு புறப்பட்டனர். ஆனால் வனாந்தரத்தில்அவர்களுக்குப் பனியைப்போன்று பெய்த மன்னாவைத் தவிர வேறு எவ்விதமான உணவும்கிடைக்கவில்லை. அந்த மன்னா தேனிட்ட பணிகாரம்போன்று இனிமையாக இருந்தது. இது பசியைத்தாங்கும் சக்தியைக் கொடுக்கவல்லது. ஆனால் இஸ்ரவேலரோ அவிசுவாசமுள்ளவர்களாகவும்,நன்றியற்றவர்களாகவும் முறுமுறுக்க ஆரம்பித்தனர். அப்பொழுது அந்த மன்னாவின் ருசி புது ஒலிவஎண்ணெயின் ருசி போலிருந்தது…

February

பெப்ரவரி 6

பெப்ரவரி 6 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளில் உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் (மீகா 7:8). கர்த்தருடைய பிள்ளைகளின் வாழ்வில் இருண்டபகுதியைக் காண்பது அரிது. நம்முடைய கீழ்ப்படியாமையால் இருண்ட அனுபவம் கிட்டுமேயொழியவேறுவகையில் ஏற்படாது. தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதனை விசுவாசிக்கும்போது நம்சொந்த நிழலைக் கண்டால்கூட பயந்து அவரிடம் ஓடுவோம். தேவன் நமக்கு முன்பாகச்செல்கிறார் என்பதனை நாம் அறியாத வரையில் நாம் தனித்தே நிற்கிறவர்களாயிருப்போம். யோபுவின் வாழ்வில் இருள் சூழ்ந்தது.…

February

பெப்ரவரி 5

பெப்ரவரி 5 இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியர் (எபி.2:17) ஆசாரிய ஊழியத்தைப்பற்றி வேதத்தில் அதிகமாகக்கூறப்பட்டுள்ளது. அதைப்பற்றி தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும். ஏனெனில், அதனுடையதன்மைகளும், வாய்ப்புகளும் மற்ற சத்தியங்களைவிட மிகவும் குழப்பமாகவும், தவறாகவும்திரித்துக் கூறப்பட்டு வருகின்றன. ஆதியிலே மனிதன் சர்வ வல்ல தேவனை வணங்கிஆராதிக்கும் ஆசாரியனாகத்தான் உருவாக்கப்பட்டான். மெல்கிசேதேக்கு இரத்தப் பலியிடாதஆசாரியனாக காணப்படுகிறார் (ஆதி.14:18-20). நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதும்,தேவஆட்டுக்குட்டியின் முன்னடையாளமாக மிருகங்கள் பலியிடப்பட்டன. இதற்கென ஆரோனும் அவன்சந்ததியாரும் ஆசாரியர்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டனர் (யாத்.28:1). இந்த ஆசாரியஊழியம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி…

February

பெப்ரவரி 4

பெப்ரவரி 4 மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு (யோசு.1:7) நிதானித்து செயல்படுவது ஒருவகை ஒழுங்கு. அதாவதுஎந்த ஒரு தொழிலையும் ஆரம்பிக்குமுன், அதற்கென ஆயத்தப்படுவதற்கு முன்பாக அதனால் வரும்பலாபலன்களைப்பற்றியும், வசதிகளைப்பற்றியும் ஆழ்ந்து யோசிக்க வேண்டும். அதே வேளையில்துணிந்து செயல்ப்படுவதற்குமுன் அதனால் வரும் ஆபத்துக்களையும் இக்கட்டுக்களையும் அறிந்துஅதில் இறங்கவேண்டும். சரியாக நிதானித்து செயல்படாத வேலையில் தோல்வி கிட்டலாம்.அப்பொழுது தேவனுடைய உதவி நமக்கில்லையோ என சந்தேகப்படுவோம். தேவன் நம்மோடு இருக்கிறார்.நம்மை வழிநடத்துகிறார் என்று அறிந்துகொண்டால் தணிவுகொண்டு ஒருவராலும் செயல் இயலாதவற்றையும்நம்மால் செய்துமுடிக்க இயலும்.…

February

பெப்ரவரி 3

பெப்ரவரி 3 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றைம் உங்களுக்கு போதித்து… நினைப்பூட்டுவார் (யோ.14:26). நமதாண்டவர் இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில்நாமும் வாழ்ந்திருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும். நாம் அவரை நன்குஅறிந்திருப்போம். நாம் வாழும் இக்காலத்தில் மனித வடிவில் அவர் இருப்பாராகில் அவரிடம்சென்று புத்திமதிகளையும் ஆலோசனைகளையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே என ஏங்குகிறோம்.ஆயினும் ஆலோசனை கூறுவதற்கென இவ்வுலகில் இங்கேயே இருக்கிறார். அவர்தான் விசுவாசத்தினால்நம் இருதயங்களில் வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவர். அவரைப் பற்றி ஆண்டவர் இயேசு, நான்பிதாவே வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே…

February

பெப்ரவரி 2

“…. அவள்…. வெட்கப்படவேண்டாமோ?” (எண்.12:4) உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டுரம் உள்ளது, பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? (நீதி.27:14) என்று நீதிமொழிகளில் ஒரு பெரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மிரீயாமும், ஆரோனும் மோசேயின் பேரில் பொறாமை கொண்டது நியாயம் அல்ல. அவர்களுக்குப் பெரும் பொறுப்புகள் இருந்தன. உயர்ந்த நிலையில் இருந்தனர். இருப்பினும் இஸ்ரவேலர் அனைவருக்கும் மோசே தலைவனாக இருந்ததினால் அவன்மேல் அவர்கள் பொறாமை கொண்டனர். மக்கள் தலைவனாக இருப்பவர்கள் எவரும், பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் யாவரும் மக்களுடைய வெறுப்பையும்,…

February

பெப்ரவரி 1

பயப்படாதிருங்கள், நான் தேவனா (ஆதி.50:19) பிறர் குற்றங்களை மன்னிக்கிற நாம் அக்குற்றங்களை மறந்துவிடவேண்டியது அவசியம். பழிவாங்கும் எண்ணத்தை மக்கள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மனதிற்குள் அடக்கி வைத்திருப்பது இயல்பு. அதுபோன்று யோசேப்பும் தங்கள் தகப்பன் மரிக்கும்வரையில் பழிவாங்கும் எண்ணத்தை அடக்கி வைத்துக்கொண்டிருப்பான் என அவனது தமையன்மார் கருதினர். இப்பொழுதோ அவர்களது அன்பான தகப்பன் யாக்கோபு மரித்துவிட்டான். வேதனையடைந்த யோசேப்பு நினைத்திருந்தால் அவர்களைப் பழிவாங்க முடியும். ஆனால் அவன் அப்படிப்பட்டவனல்ல. பயந்து நடுங்கிக்கொண்டிருந்த அவர்களை நோக்கி யோசேப்பு, பயப்படாதிருங்கள்,…