February

பெப்ரவரி 4

பெப்ரவரி 4

மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு (யோசு.1:7)

நிதானித்து செயல்படுவது ஒருவகை ஒழுங்கு. அதாவதுஎந்த ஒரு தொழிலையும் ஆரம்பிக்குமுன், அதற்கென ஆயத்தப்படுவதற்கு முன்பாக அதனால் வரும்பலாபலன்களைப்பற்றியும், வசதிகளைப்பற்றியும் ஆழ்ந்து யோசிக்க வேண்டும். அதே வேளையில்துணிந்து செயல்ப்படுவதற்குமுன் அதனால் வரும் ஆபத்துக்களையும் இக்கட்டுக்களையும் அறிந்துஅதில் இறங்கவேண்டும். சரியாக நிதானித்து செயல்படாத வேலையில் தோல்வி கிட்டலாம்.அப்பொழுது தேவனுடைய உதவி நமக்கில்லையோ என சந்தேகப்படுவோம். தேவன் நம்மோடு இருக்கிறார்.நம்மை வழிநடத்துகிறார் என்று அறிந்துகொண்டால் தணிவுகொண்டு ஒருவராலும் செயல் இயலாதவற்றையும்நம்மால் செய்துமுடிக்க இயலும். இந்தத் துணிவின் பயனாக வெற்றியடைவோம்.

துணிவுடையோர் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவர்.கீழ்ப்படிதலினாலே நாம் தேவபிரசன்னத்தை உணரமுடியும். இல்லையெனில் உள்ளம் தளர்ந்துசோர்ந்துவிடுவோம். பயம் வந்து சேரும். துணிவுடையோர் மற்றவரால் செயல் இயலாதததைச்செய்து காட்டுவர். ஒருவராலும் நுழைய முடியாத இடத்திற்குள்ளும் நுழைந்து செல்லமுடியும்.

பெட்டியசை; சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள்தண்ணீரின் ஓரத்தில்பட்டவுடனே, மேலேயிருந்து ஓடி வருகிற தண்ணீர் நின்று தண்ணீரற்றஉலர்ந்த தரை வழியாய்க் கடந்து போனார்கள் (யோசு.3:15-17), இதுதான் துணிவின் இலக்கணம்.முடியாததென பிறர் கருதும்போது அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அதைச் செய்யத்துணியவேண்டும். திடமனதாயிருந்து, இக்கட்டின் நடுவே நாம் காலடி எடுத்துவைக்கவேண்டும்.

கர்த்தர் தன்னோடு இருந்ததையும் உதவி செய்ததையும்யோசுவா அறிந்திருந்தான். அவர்களுக்கும் சாட்சி கூறினான். தேவனுடைய சித்தத்தைச்செய்வதுதான் மெய்யான துணிவு என்பதில் ஐயமில்லை.