February

பெப்ரவரி 9

பெப்ரவரி 9

அதையல்ல, அதிலும் மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள். ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை. அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம் பண்ணினாரே (எபி.11:16).

புண்ணிய யாத்திரை செய்பவனுக்கும், நாடோடிக்கும்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த இருவரும் ஊருராய்ச் சுற்றித் திரிபவர்கள் தான். இவர்களுக்கெனஇவ்வுலகில் எவ்விதமான பதவியோ, குறிப்பிட்ட இடமோ கிடையாது. நாடோடிக்கு குறிப்பிட்டஎல்லையோ, நோக்கமோ கிடையாது. விருப்பமான எந்த இடத்திற்கும் செல்வான். ஆனால் புனிதயாத்திரை செல்பவனுக்குப் பரலோகமே எல்லை. அவனது எண்ணமெல்லாம் தேவனைமகிமைப்படுத்துவதையே மையமாகக் கொண்டு செயல்ப்படும்.

உலகத் தோற்ற முதற்கொண்டு இவ்விதமாகபரலோகத்தை நோக்கி (ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், எலியா, எலிசா, யோவான், பவுல்போன்ற) புண்ணிய யாத்திரை செய்தவர்களை நாம் வேதத்தில் காண்கிறோம். இதையே,பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனை அழைத்த பரமஅழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். நம்முடையகுடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது (பிலி.3:13,14,20) என்று பவுல் கூறியுள்ளார்.

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போதுபரலோக இராஜ்யம் நமக்குள் வந்துவிடுகிறது. அதை ஏற்றுக்கொண்ட நாம் இப்பொழுதுவிசுவாசமுள்ளவர்களாய் இலக்கை நோக்கித் தொடருவோம். தேவன் நம்மை வெட்கப்படுத்தமாட்டார்.