March

மார்ச் 3

மார்ச் 3 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள் (மத்.5:4) நாம் வியாதியாகவோ, கவலையாகவோ இருக்கும்போது நம்முடைய நண்பர்களின் ஜெபங்களினால் ஆறுதலும் உற்சாகமும் அடைவதுண்டு. நான் ஜெபிக்க முடியாதபடி பலவீனனாக இருந்தேன். தியானிக்க இயலாதபடி நோய்வாய்ப்பட்டிருந்தேன். அப்பொழுது எனக்காக அங்குள்ள மருத்துவ தாதிமார் ஜெபித்தனர். அதனால் நான் புதுப்பெலன் அடைந்தேன். நம்முடைய பெலவீனங்களை உணர்ந்து, நமக்காகப் பாரப்பட்டு ஜெபிக்கும் ஆண்டவர் பரலோகத்தில் இருக்கிறார். அவர் நம்மைப் பார்த்து பரிதாபப்படுகிறார் என்பதைக் கேள்விப்படும்போது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது! நாம் படும்…

March

மார்ச் 2

மார்ச் 2 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது (மத்.5:3). தரித்திரர் எப்போதும்; உங்களிடத்தில் இருக்கிறார்கள்….நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம் என்று இயேசு கூறினார். ஏனெனில், அவர் அவர்களுக்காகமனதுருகுகிறவர். இங்குப் பணம், பொருள் இவற்றில்தரித்திரராயிருக்கிறவர்களை இயேசு குறிப்பிடாமல் ஆவியில் தரித்திரரைக் குறிப்பிடுகிறார்.யாக்கோபு இதையே, தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும்தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச்சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? எனக் கேட்கிறார் (யாக்.2:5). தேவகிருபையும், மனுஷர் தயவும் தேவை என்ற உணர்வுடன்,இரட்சகர் இல்லாமல் தான் ஒன்றுமில்லை என்கிற அறிவும்…

March

மார்ச் 1

மார்ச் 1 எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். (எரேமி.42:6) எரேமியா 42ம் அதிகாரத்தில் தேவன் நம்மைஎவ்விதம் வழி நடத்துகிறார் என்பதைக் காண்கிறோம். நாம் எதையும் தீர்மானிப்பதற்குமுன்பு மூன்று காரியங்களைக் கவனிக்கவேண்டும். முதலாவது நம்மைத் தேவனுடைய வழிநடத்துதலுக்குவிரும்பி ஒப்புக்கொடுக்கவேண்டும். தேவனுடைய வெளிப்படுத்ததலுக்கென உண்மையோடும்,விசுவாசத்தோடும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க வேண்டும். அதாவது அது நன்மையானாலும்சரி… எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்போம் (வச.6)என்று அவருடைய வெளிப்படுத்துதலுக்கென முற்றிலுமாக நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். இரண்டாவதாக, தேவனுடைய பதில் கிடைக்கும்வரைகாத்திருக்கவேண்டும். அசட்டையாகவோ,…

February

பெப்ரவரி 28

பெப்ரவரி 28 கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை…. தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார் (2.தெச.3:3) இந்த வாக்குத்ததம் கிறிஸ்துவுக்குள் வந்த அன்றைய புதிய விசுவாசிகளுக்குக் கொடுக்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் அறியாமையிலும், விக்கிரக வழிபாட்டிலுமிருந்து விடுதலை பெற்று சுவிசேஷமாகிய ஒளியினிடத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் கிறிஸ்தவ வாழ்வில் ஏற்படும் தோல்விகளைக் குறித்து கவலைப்படுவது இயல்பு. இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தினால் இரட்சிப்புக்குள் வந்த அவர்களுக்கு வேத அறிவு குறைவாகவே இருந்தது. அவர்களைச் சுற்றிலும் ஆபத்துக்களும், இக்கட்டுகளுமே சூழ்ந்திருந்தது. இரட்சகரை விரோதிக்கிற மக்களால் பெரும்…

February

பெப்ரவரி 27

பெப்ரவரி 27 மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு (யோசு.1:7) அன்று இராட்சத மக்கள் தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழுப்பினதுபோல இன்றும் பலர் இருக்கின்றனர். ஆகவே, பலங்கொண்டு திடமனதாயிரு என்று யோசுவாவுக்குக் கூறப்பட்ட அதே வார்த்தைகள் நமக்கும் தேவைப்படுகின்றன. தேவனுக்குப் பயந்திரு. இராட்சதருக்குப் பயப்பட வேண்டாம். உயிர்த்தெழுந்த இரட்சகரைப் பார். உயர்ந்த கோட்டை மதிற்சுவரைப் பார்க்காதே. வாக்குத்தத்தங்களைப் பார். முடியாதது ஏதுமில்லை. தைரியமுள்ள யோசுவாவும், காலேபும், நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம். நாம் அதை எளிதாய் ஜெயித்துக்…

February

பெப்ரவரி 26

பெப்ரவரி 26 நான் இந்தத் தேனில் கொஞ்சம் ருசி பார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள் (1.சாமு.14:29) யோனத்தானுக்கு கொஞ்சம் தேன் தேவைப்பட்டது.ஏனெனில், அவன் அந்த நாளில் சோர்ந்து, களைத்துப்போய், விடாய்த்தவனாய் இருந்தான்.தன் ஆயுதம் சுமக்கிற வேலைக்காரனோடு தனித்துச் சென்று செயற்கரிய செயலைச் செய்து,மலையின்மீது ஏறிச் சென்று பெலிஸ்தியருடன் போரிடத் துணிந்தான். அவன், கர்த்தர்நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம் பேரைக் கொண்டாகிலும் கொஞ்சம் பேரைக்கொண்டாகிலும் இரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான் (1.சாமு.14:6). யுத்தம் முடிந்து வெற்றி…

February

பெப்ரவரி 25

பெப்ரவரி 25 தேவனோ அவனை நோக்கி மதிகேடனே… என்றார் (லூக்.12:20) ஆவிக்குரிய உண்மைகளைக் கூறும் வேதம் இவ்வுலகஐசுவரியத்தைக் குறித்தும் எச்சரித்துக் கூறியுள்ளது. சங்கீதம் 62:10ல் ஐசுவரியம்விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள் எனக் காண்கிறோம். நமது இரட்சகரும்இதைப்பற்றிப் போதித்து, பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அவைகளைக் கெடுக்கும்,… பரலோகத்திலேஉங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்… உங்கள் பொக்கிஷம்எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் (மத்.6:19.21) எனக் கூறியுள்ளார். இங்கே ஆண்டவர் ஆவிக்குரிய வாழ்வைக் கெடுக்கும்பொருளாசையின் ஆபத்தைக்…

February

பெப்ரவரி 24

பெப்ரவரி 24 கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்,… இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது (ரோ.1:16). நம்மை வியக்கச்செய்யும் ஒரு காரியத்தை வைத்தேஅது நிகழ்வதற்குக் காரணமாயிருந்த சக்தியைக் கணக்கிடுகிறோம். சர்வவல்லமையுள்ளவரின்பெலனை நாம் எவ்வாறு கணக்கிட இயலும். சுவிசேஷம் என்று கூறப்படும் நற்செய்தி சர்வவல்லமையுள்ளது. அதாவது மனித வாழ்வில் தேவனுடைய வல்லமையை உணரச்செய்வது அது. ஏனெனில், இரட்சிப்புஉண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது. வேதத்திலுள்ள ஒரு நல்ல வார்த்தை இரட்சிப்புஎன்பது. அநேகர் இதை மதிக்காமல் தள்ளிவிடுகின்றனர். இது உண்மை எனக்…

February

பெப்ரவரி 23

பெப்ரவரி 23 நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம். என் பிராணனை வாங்கத் தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத் தேடுகிறான். நீ என் ஆதரவில் இரு (1.சாமு.22:23). சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச்சிநேகிப்பவனுமுண்டு என்று சாலோமோன் ஞானி (நீதி.18:24) கூறியுள்ளார். அப்படிச்சிநேகிக்கும் ஒருவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துதான் என்பது எவ்வளவு பெரிய உண்மை! அவர் தமதுநட்பை அடிக்கடி வெளிப்படுத்துகிறார். நமது கஷ்டங்கள் பெருகும்போது அவர் நம்மோடிருப்பதைநாம் உணரலாம். உண்மையான உள்ளத்தோடு அவரைத் தேடும்போது மட்டுமே அவரது ஐக்கியத்தைநம்மால் உரணமுடியும். அபியத்தாருக்குத்…

February

பெப்ரவரி 22

பெப்ரவரி 22 இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புக்கு ஒளஷதமுமாகும் (நீதி16:24). கடுமையான வார்த்தைகளால் எந்தவிதமான நன்மையம்கிட்டாது. இதனால் பல உறவுகள் முறிவடையும். பலருடைய வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும்.பிறரைப் பரியாசம் செய்யும்போது, நாம் எவரோடும் இணைந்து வாழமுடியாது. பிறரைப்புண்படுத்திப் பேசும் நமக்கு ஆசீர்வாதம் கிட்டுவது அரியதாயிருக்கிறது. பிறரை இழிவாகப்பேசுவதால் லாபம் ஏதும் கிட்டாது. நம் புத்தியீனத்தைத்தான் வெளிப்படுத்துகிறோம். இனிய சொற்களோ இதற்கு மாறானது. இனியசொற்களால் இரக்கத்தையும், தாழ்மையையும், கிருபையையும் வெளிப்படுத்துகிறோம். மெதுவானபிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும். கடுஞ்சொற்களோ…