March

மார்ச் 2

மார்ச் 2

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது (மத்.5:3).

தரித்திரர் எப்போதும்; உங்களிடத்தில் இருக்கிறார்கள்….நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம் என்று இயேசு கூறினார். ஏனெனில், அவர் அவர்களுக்காகமனதுருகுகிறவர்.

இங்குப் பணம், பொருள் இவற்றில்தரித்திரராயிருக்கிறவர்களை இயேசு குறிப்பிடாமல் ஆவியில் தரித்திரரைக் குறிப்பிடுகிறார்.யாக்கோபு இதையே, தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும்தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச்சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? எனக் கேட்கிறார் (யாக்.2:5).

தேவகிருபையும், மனுஷர் தயவும் தேவை என்ற உணர்வுடன்,இரட்சகர் இல்லாமல் தான் ஒன்றுமில்லை என்கிற அறிவும் கொண்டு, தன் வாழ்வில்கிறிஸ்துவுக்கென முதலிடம் கொடுத்து அவரை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு, அவரைத்தொழுதுகொள்ளுகிற உள்ளமும் உடையவர்கள்தான் ஆவியில் எளிமையுள்ளவர்கள். இப்படிப்பட்டவர்கள்தேவனுடைய அன்புக்குப் பாத்திரமானவர்கள். இதையே வேதத்திலும் மாம்சத்தின்படி ஞானிஅநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில்பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன்உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின்இழிவானவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார் (1.கொரி.1:26,29) எனக் கூறியிருக்கக் காண்கிறோம்.

தரித்திரனாக இருந்துகொண்டு அதை அறியாமல்லவோதிக்கேயா சபையைப்போல, நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும் எனக்குஒரு குறைவுமில்லையென்றும் (வெளி 3:17) கூறுவோர் பலர் உண்டு. இப்படிப்பட்டவர்களைத் தேவன்வாந்திபண்ணிப் போடுவார். ஆவியில் எளிமையாக இருப்போம், அசீர்வாதம் பெறுவோம்.