February

பெப்ரவரி 24

பெப்ரவரி 24

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்,… இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது (ரோ.1:16).

நம்மை வியக்கச்செய்யும் ஒரு காரியத்தை வைத்தேஅது நிகழ்வதற்குக் காரணமாயிருந்த சக்தியைக் கணக்கிடுகிறோம். சர்வவல்லமையுள்ளவரின்பெலனை நாம் எவ்வாறு கணக்கிட இயலும்.

சுவிசேஷம் என்று கூறப்படும் நற்செய்தி சர்வவல்லமையுள்ளது. அதாவது மனித வாழ்வில் தேவனுடைய வல்லமையை உணரச்செய்வது அது. ஏனெனில், இரட்சிப்புஉண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது. வேதத்திலுள்ள ஒரு நல்ல வார்த்தை இரட்சிப்புஎன்பது. அநேகர் இதை மதிக்காமல் தள்ளிவிடுகின்றனர். இது உண்மை எனக் கண்டுகொண்ட பலர் இதற்குபெருமதிப்புக் கொடுத்து வருகின்றனர்.

விசுவாசிக்கிற யாவருக்கும் அது இரட்சிப்பைக் கொடுக்க வல்லமை பொருந்தியதாயுள்ளது. விசுவாசிக்கிறவன் எவனாயினும் சரி – யாராயினும் சரிஎன்று தேவன் கூறுகிறார். நற்குணமுள்ளவனாகிலும் சரி, குடிகாரனாகிலும் சரி. தர்சுப் பட்டணத்துசவுலைப்போன்ற அறிவாளியாக இருந்தாலும், நாற்றம் பிடித்த அழுகிப்போன வாழ்க்கை நடத்தும்அகஸ்டினைப்போன்றவனாக இருந்தாலும், நாத்திகனாக இருந்தாலும் அவனைப்பற்றிக் கவலையில்லை.அவன் விசுவாசிக்கவேண்டும் என்பதுதான் நிபந்தனை. அப்பொழுது அவன் இரட்சிப்பைக்கொடுக்கவல்ல வல்லமையினால் அவன் மன்னிப்பையும், கழுவப்படுதலையும், மறுபிறப்பையும்,புதுப்பிக்கப்பட்ட வாழ்வையும் பெறுவான் என்பது உறுதி. உள்ளத்தில் மட்டுமல்ல, வெளிப்புறவாழ்விலும் மாறுதலைக் காணமுடியும். அது உடனடியாகவோ அல்லது படிப்படியாகவோ ஏற்படும்.

இந்த சுவிசேஷத்தை குறித்து வெட்கப்படுகிறீர்களா?தேவனுடைய வல்லமையைக் குறித்துச் சந்தேகமா?