April

ஏப்ரல் 2

ஏப்ரல் 2 எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது (ரூத் 2:10) மோவாபியப் பெண் ரூத் சுகத்தோடும், சந்தோஷத்தோடும் தன் கணவனோடு தனக்குரிய வீட்டில் வாழ்ந்து வந்தாள். திடீரென மரணம் தன் கொடிய கரத்தை நீட்டினதால் அவள் தன் கணவனையும், தனக்குரிய யாவற்றையும் இழந்தாள். அவளது மாமியார் நகோமி மட்டும் அவளோடு இருந்தாள். அவளும் மோவாப் நாட்டைவிட்டுத் தன் சொந்த வீட்டிற்கு பெத்லேகேமுக்குச் செல்லத் தீர்மானித்தாள். ரூத்தும் அவளுடன் செல்லத் தயாராளாள். அவள் தேவனுக்கு முன்பாகவும்,…

April

ஏப்ரல் 1

ஏப்ரல் 1 காணாதிருந்து விசுவாசிக்கிறவன் பாக்கியவான்கள் (யோ.20:29) ஆண்டவர் இயேசு தன் கால்களைக் கழுவ வந்தபோது அவர் ஏதோ செய்யக்கூடாத ஒன்றைச் செய்வதாகப் பேதுருவுக்குத் தோன்றியது. ஆகவே அவன் தடுத்தான். இயேசு அவனிடம், நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். அவர் தமக்குச் சித்தமானபடி செய்ய, நாம் அனுமதிப்பதையே விசுவாசத்தில் நடப்பது எனக் கூறுகிறோம். நல்லது எது என்று அவருக்கு நன்றாகத் தெரியும் என்று நாம் நம்புவதைத்தான் விசவாசம் என்று கூறலாம்.…

March

மார்ச் 31

மார்ச் 31 பயப்படாதிருங்கள். நான் தேவனா? (ஆதி.50:19) பிறர் குற்றங்களை மன்னிருக்கிற நாம் அக்குற்றங்களை மறந்துவிடவேண்டியது அவசியம். பழிவாங்கும் எண்ணத்தை மக்கள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மனத்திற்குள் அடக்கி வைத்திருப்பது இயல்பு. அதுபோன்று யோசேப்பும் தங்கள் தகப்பன் மரிக்கும்வரையில் பழிவாங்கும் எண்ணத்தை அடக்கிவைத்துக் கொண்டிருப்பான் என அவனது தமையன்மார் கருதினர். இப்பொழுதோ அவர்களது அன்பான தகப்பன் யாக்கோபு மரித்துவிட்டான். வேதனையடைந்த யோசேப்பு நினைத்திருந்தால் அவர்களைப் பழிவாங்கமுடியும். அனால் அவன் அப்படிப்பட்டவனல்ல. பயந்து நடுங்கிக்கொண்டிருந்த அவர்களை நோக்கி யோசேப்பு,…

March

மார்ச் 30

மார்ச் 30 தேவன் உண்மையுள்ளவர் (1.கொரி.1:9) …. நீ…. உண்மையாயிரு (வெளி 2:10) கிறிஸ்தவர்கள் உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும். உண்மையாயிருப்பது கிறிஸ்தவ பண்புகளில் ஒன்று. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார், அவர் வாக்கு மாறாதவர். தம் பிள்ளைகளின்மீது மாறாத அன்புகொண்டவர். அவரைச் சார்ந்துள்ளவர்களையும், பலவீனரையும் தாங்கும் தன்மையுள்ளவர். சர்வவல்லவர், மாறாதவர், அவரை நம்பும் நாம் அவரில் அன்புகூரவேண்டும். அவருடைய கட்டளைக்கு உண்மையாகக் கீழ்ப்படியவேண்டும். ஒவ்வொரு நாளும் அவர் நமது வாழ்விற்கென வைத்துள்ள திட்டத்தினை அறிந்து அவருக்கென கடமைகளைச் செய்யத் தவறாதிருக்கவேண்டும். நாம் நமது…

March

மார்ச் 29

மார்ச் 29 …. அவள் வெட்கப்பட வேண்டாமோ? (எண்.12:14) உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டுரமுள்ளது. பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? (நீதி.27:4) என்று நீதிமொழிகளில் ஒரு பெரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மீரியாமும், ஆரோனும் மோசேயின் பேரில் பொறாமை கொண்டது நியாயமல்ல. அவர்களுக்குப் பெரும் பொறுப்புக்கள் இருந்தன. உயர்ந்த நிலையில் இருந்தனர். இருப்பினும் இஸ்ரவேலர் அனைவரும் மோசே தலைவனாக இருந்ததினால் அவன்மேல் அவர்கள் பொறாமை கொண்டனர். மக்கள் தலைவனாக இருப்பவர்கள் எவரும் பொறுப்பான பதவியில் இருப்பவர்களனைவரும் மக்களுடைய வெறுப்பையும்,…

March

மார்ச் 28

மார்ச் 28 இப்படியிருக்க பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள் (1.யோ.2:28). இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போதுநமக்கு ஊக்கமளிக்கும் விதமாக கூறப்பட்ட வாக்குத்தத்தங்களில் இதுவும் ஒன்று. அவரது இரண்டாம்வருகையைப்பற்றி வேதத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அவர் வரும் வேளையில் தேவஎக்காளம் ஊதப்படும். அப்பொழுது எல்லாக் காலங்களிலும் உள்ள அவருக்குச் சொந்தமானயாவரும் கூட்டிச் சேர்க்கப்பட்டு அவரோடுகூட வாழுவோம். அப்பொழுது முதலாவது நாம்கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பு நின்று, அவருக்கு…

March

மார்ச் 27

மார்ச் 27 கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார் (சங்.94:22). ஆவிக்குரிய காரியங்களில் மனிதர்கள்கண்டுகொண்டது கொஞ்சமே. இந்தப் பூமியில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் தரிசித்துநடக்கிறோம். விசுவாசித்து நடப்பது அரிதாயிருக்கிறது. சில வேளைகளில் தேவனுடையநியாயத்தீர்ப்பு தாமதப்படுவதைக் கண்டு நாமும் சங்கீதக்காரனைப்போல், கர்த்தாவேதுன்மார்க்கர் எதுவரைக்கும்…. எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்? (சங்.94:3) எனக்கேட்போம். இப்படிப்பட்ட ஒரு குழப்பம் ஆபகூக்தீர்க்கதரிசிக்கு ஏற்பட்டது. கிழக்கில் தோன்றிய ஒரு சாம்ராஜ்யம் கொடுமைநிறைந்ததாகவும், இரத்தம் சிந்துகிறதாயும் இருந்தது. இதைக் கண்ட தீர்க்கதரிசி,கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல்…

March

மார்ச் 26

மார்ச் 26 என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும் (சங்.89:24) தாவீதைப்பற்றிக் கூறப்பட்ட இந்த வசனம் தேவனுடைய பிள்ளைகள் யாவருக்கும் பொருந்தும். புயல் சூழ்ந்த வேளையிலும், நெருக்கப்படும் நேரங்களிலும் இவை நமக்கு சிறந்த வாக்குத்தத்தங்களாக அமைகின்றன. சத்துரு அவனை நெருக்குவதில்லை, ஒடுக்குவதில்லை (சங்.89:22). தேவனுக்கு விரோதமாகவும், அவரது ஊழியர்களுக்கு விரோதமாகவும் பிசாசு எதிர்த்து நிற்பதையும் கடுமையாக தாக்க முயல்வதையும் வேதாகமத்தில் காண்கிறோம். ஆனால் பிசாசை தேவன் வென்றுவிட்டார். நாமும்கூட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், தங்கள் சாட்சியின் வசனத்திலும் (வெளி…

March

மார்ச் 25

மார்ச் 25 என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானா? (நெகே.6:11) இக்காலத்தில் தேவனுடைய ஊழியர்கள் யாவரும் பொய், வந்திகள், ஏமாற்றம் போன்ற பல ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்திலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்த இவைகளால் இயலாது. தேவஊழியத்தைக் கெடுப்பதற்கென காலங்கள்தோறும் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்தான் இவை. மனுக்குலம் ஆரம்பமானது முதல் பிசாசானவன் நமக்கு எதிராளியாக இருந்து, பொய்க்குப் பிதாவுமாய் இருக்கிறான் (யோ.8:44). யோபுவைக் குறிவைத்த அவன், யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? (யோபு1:9) என்றான். எருசலேமின்மீது பற்றுக்கொண்ட…

March

மார்ச் 24

மார்ச் 24 அவரை அண்டிக்கொள்கிற யாவரும் பாக்கியவான்கள் (சங்.2:12). ஜனங்கள் கொந்தளித்து எழும்பினாலும், சமாதானத்தின் தேவனை அசைக்க முடியாது. புயலுக்குப்பின் அமைதியுண்டு. கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே ஒருவனுக்குப் பலம். யுத்தம் சர்வவல்ல தேவனுடையது. இரண்டாம் சங்கீதம் முழுவதிலும் இரைச்சலையும், சத்தத்தையும் காண்கிறோம். ஆனால் இரைச்சல் யாவும் ஓய்ந்த பின்பு, உண்மையுள்ளவர்களுக்கு ஆவியானவரின் மெல்லிய சத்தம் தொடர்ந்து நம்பிக்கையைக் கொடுக்கிறது. அவர்களது விசுவாசம் இவ்வுலகத்தைக் காட்டிலும் மேலானது. ஜனங்கள் கொந்தளித்தாலும், அவரை நம்பும் மக்கள் சந்தோஷமாயிருப்பார்கள். ஜனங்கள் ஏன் கொந்தளிக்க…