March

மார்ச் 27

மார்ச் 27

கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார் (சங்.94:22).

ஆவிக்குரிய காரியங்களில் மனிதர்கள்கண்டுகொண்டது கொஞ்சமே. இந்தப் பூமியில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் தரிசித்துநடக்கிறோம். விசுவாசித்து நடப்பது அரிதாயிருக்கிறது. சில வேளைகளில் தேவனுடையநியாயத்தீர்ப்பு தாமதப்படுவதைக் கண்டு நாமும் சங்கீதக்காரனைப்போல், கர்த்தாவேதுன்மார்க்கர் எதுவரைக்கும்…. எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்? (சங்.94:3) எனக்கேட்போம்.

இப்படிப்பட்ட ஒரு குழப்பம் ஆபகூக்தீர்க்கதரிசிக்கு ஏற்பட்டது. கிழக்கில் தோன்றிய ஒரு சாம்ராஜ்யம் கொடுமைநிறைந்ததாகவும், இரத்தம் சிந்துகிறதாயும் இருந்தது. இதைக் கண்ட தீர்க்கதரிசி,கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள்சாவதில்லை. கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர். கன்மலையே, தண்டனைசெய்ய அவனை நியமித்தீர். தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தைநோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே. பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன?துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?(ஆபகூக்.1:12-13) எனக் கூறி ஜெபிக்கிறார்.

குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் உள்ளமும் அன்றுஆபகூக் கூறியதுபோன்று, நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்குஎன்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கடிண்டிக்கும்போது நான் என்ன உத்தரவுசொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் (ஆப.2:1) என்று கூறும். ஆனால் தேவனில்விசுவாசம் வைக்கும்போது, குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது.முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அதுநிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (அப.2:3) என்று கூறமுடியும்.

தேவனுடைய நியாயத்தீர்ப்பு தாமதிப்பதாகத்தோன்றும். ஆனால் நம்பிக்கையுள்ள இருதயம் அதற்கென காத்துக்கொண்டிருக்கும்.