March

மார்ச் 31

மார்ச் 31

பயப்படாதிருங்கள். நான் தேவனா? (ஆதி.50:19)

பிறர் குற்றங்களை மன்னிருக்கிற நாம் அக்குற்றங்களை மறந்துவிடவேண்டியது அவசியம். பழிவாங்கும் எண்ணத்தை மக்கள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மனத்திற்குள் அடக்கி வைத்திருப்பது இயல்பு. அதுபோன்று யோசேப்பும் தங்கள் தகப்பன் மரிக்கும்வரையில் பழிவாங்கும் எண்ணத்தை அடக்கிவைத்துக் கொண்டிருப்பான் என அவனது தமையன்மார் கருதினர். இப்பொழுதோ அவர்களது அன்பான தகப்பன் யாக்கோபு மரித்துவிட்டான். வேதனையடைந்த யோசேப்பு நினைத்திருந்தால் அவர்களைப் பழிவாங்கமுடியும். அனால் அவன் அப்படிப்பட்டவனல்ல. பயந்து நடுங்கிக்கொண்டிருந்த அவர்களை நோக்கி யோசேப்பு, பயப்படாதிருங்கள், நான் தேவனா எனக் கேட்டான். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது. நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள் என்று பவுல் ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு எழுதியுள்ளார் (ரோ.12:19).

யோசேப்பைப்போல் நமக்கும் கொடுரமான தீங்கிழைக்கப்பட்டிருக்கலாம். தீங்கிழைத்த அதே கொடியவர்கள் நம் அதிகாரத்தின் கீழ்வரும் வாய்ப்புகள் கிட்டும். அப்பொழுதுதான் நாம் நம்முடைய பெருந்தன்மையையும், இரக்கத்தையும், இளகிய உள்ளத்தையும் காண்பிக்கவேண்டும். யோசேப்பு கூறியதுபோல, நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ… அதை நன்மையாக முடியப்பண்ணினார். ஆதலால் பயப்படாதிருங்கள் (ஆதி.50:20-21) எனக் கூறவேண்டும்.

நாமும் நமக்குத் தீங்கிழைத்தவர்களைக் குi கூறாமல் ஆறுதல் கூறுவதின்மூலம் யோசேப்பின் வழியைப் பின்பற்ற வேண்டும். பட்டசமாய் அவர்களோடு பேசி அவர்களை நம் விரோதிகளாகக் கருதாமல் நண்பர்களாக்கிக்கொள்ளவேண்டும். மன்னிப்போம். மறப்போம். இதனால் அவரது சீடர்கள் எனக் காட்டுவோம். ஏனெனில் அவரும், பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தஙர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமலிருக்கிறார்கள் என ஜெபித்தாரல்லவா!

இப்படியாக நாம் பிறர் உள்ளத்தில் உள்ள பயத்தை நீக்குவோம். அவர்களிடம் நட்புக்கொள்வோம். தேவனிடத்தும் இரக்கம் பெறுவோம்.