மே 12
மே 12 எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான் (மத்.24:46). இயேசு கிறிஸ்து தம் போதனைகள் யாவற்றிலும், தான் இவ்வுலகத்தை விட்டுப்போன்பின்பு மீண்டும் இரண்டாம் முறை வரப்போவதைக் குறித்து அடிக்கடி போதித்திருக்கிறார். மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார். அப்பொழுது அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். (மத்.16:27). தமது ஊழியத்தின் கடைசி நாட்களில் சிலுவைப்பாடுகள் சமீபித்து வருகையில் அவர் தமக்கு நம்மை ஊழியம் செய்யும்படி அடிக்கடி கூறியுள்ளதைக் காணலாம். உண்மையுள்ள…