May

மே 10

மே 10

…. கிறிஸ்து இயேசுவை கவனித்துப் பாருங்கள். இருவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார் (எபி.3:1-2).

தேவ குமாரனும், மனுஷகுமாரனுமாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிதாவுக்கு உண்மையுள்ளவராயிருந்தார். ஆதியிலிருந்த அவரது தன்மையைப்பற்றி நீதிமொழிகளில் நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன். நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன் (8:30) எனக் கூறுகிறது. இதையே நம் அண்டவரும் யோவான் 17:5ல் உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் உண்மையுள்ளவராயிருந்தார். எப்படியெனில் தனக்குள்ள மகிமையை வெறுத்து, தம்மை வெறுத்து, தாழ்மைக் கோலமானார்! (பிலி.2:5-8). ஆகவேதான் பிதா அவரைப் பாராட்டி, இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் எனக் கூறினார் (மத்.3:17). ஏசாயா 53ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள எல்லாவிதமான பாடுகளுக்கும் தம்மை ஒப்புக்கொடுத்து தீர்க்கதரிசனம் நிறைவேறும்படி செய்து தம்மை ஒப்புக்கொடுத்து தீர்க்கதரிசனம் நிறைவேறும்படி செய்து தம்மை உண்மையுள்ளவராகக் காண்பித்தார். (நம்மைப்போல்) அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து தீர்த்தார். நம்முடைய மீட்புக்கென அவர் கல்வாரிச் சிலுவையில் தன் கடமையைச் செய்து முடிப்பதில் உண்மையுள்ளவராயிருந்தார். ஆகவேதான் முடிந்தது எனக் கூறினார்.

நமக்கு அவர் போதுமான இரட்சகராக இருக்கிறார். ஏனெனில் இருவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். இப்பொழுது அவர் பிதாவின் சமுகத்தில் நின்று நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். மகா பிரதான ஆசாரியனாக இருக்கிறார். தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றும் முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார் (எபி.7:25).