May

மே 5

மே 5

தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர் நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி…. போ.. என்றார் (2.சாமு.5:23).

நம்முடைய வாழ்விலும் தேவன் இவ்விதமாக வழிநடத்தியுள்ளார் என்பதை நாம் அறிவோம். நாம் கடந்த நாட்களில் இவ்விதமான இக்கட்டுகள் நேரிட்டபோது, அந்தச் சூழ்நிலையில் எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதை அறிவோம். ஆகவே, நாம் அதேபோல் நடந்துகொள்ள விரும்புவதுண்டு. ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் எதிரிகள் வந்து பரவியபோது தாவீது எதிரிகளை முகமுகமாக சந்திக்க நேரிட்டது. அப்பொழுது அவன் தேவனிடம், போகலாமா எனக் கேட்டான். உடனே அவர், போ… உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் (2.சாமு.5:19) என்று பதிலளித்தார்.

ஆனால் திரும்பவும் எதிராளி வந்துவிட்டான். தாவீது தேவனிடம் சென்று திரும்பவும் அவருடைய வழிநடத்துதலுக்கு ஏன் காத்திருக்கவேண்டும்? ஜெபிக்கவேண்டும்? தானே ஒரு வழியை யோசித்துத் தனக்கு நன்கு தெரிந்த பதில்தான் மீண்டும் கிடைக்கும் என்று தாவீது முடிவுகட்டாமல் திரும்பவும் தேவனிடம் சென்று விசாரித்தான். அப்பொழுது தேவன், நீ நேராய் போகாதே என்று கூறினார். முதலில் கூறியபடி நேரே சென்று எதிர்க்காமல், அவர்களுக்குப் பின்னாகச் சென்று சுற்றி வளைத்து, எதிர்பாராதபடி எதிரேயிருந்து அவர்கள்மேல் பாயவேண்டும். பரத்திலிருந்து வரும் மேலான கட்டளைகட்கு மாத்திரமே தாவீது முற்றிலுமாகக் கீழ்ப்படியவேண்டும். இது அவன் பொறுப்பு. தன் இஷ்டப்படியே முன் செய்ததுபோலவே அனுபவப்படி தன் வழியே அவன் செயல்படவில்லை.

பிரச்சனைகள் எவ்வளவ சிறியதாக இருப்பினும், எவ்வளவு தான் இதேபோன்ற பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்ட அனுபவம் பெற்றிருப்பினும், தேவனிடம் வழிநடத்துதலுக்கென திரும்பவும் கேட்கவேண்டும். இது எவ்வளவு தெளிவான பாடம்!