May

மே 6

மே 6

…. ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ? (யோபு 11:3).

தேவனுக்கென வாழ்வோரை எதிர்க்கும் மக்களை நாம்காலங்கள்தோறும் காண்கிறோம். சர்வ வல்லவரை எதிர்த்து நிற்கும் இந்தச் சுயநலக்காரர்கள்தங்கள் அயலாரைத் தங்கள் கண்கண்டபடியும், காதினால் கேட்டதின்படியும் கொடுமையாகத்தீர்ப்பிடுகின்றனர். புண்பட்ட மக்களை இவர்கள் மீண்டும் வேதனைப்படுத்துகின்றனர். பலவீனரைப் பாடுபடுத்துகின்றனர். ஆழ்ந்த துக்கத்திலிருப்போரை எழவிடாமல்அமிழ்த்துகின்றனர். சிட்சிக்கப்படுவோரைச் சிரமப்படச் செய்கின்றனர்.

இது காலங்கள்தோறும் நடந்துவரும் சம்பவங்களே.சோப்பார் யோபுவைப் பரிகாசம் செய்தான். தாத்தான் மோசேயைக் கேலி செய்தான். வயதுசென்ற தாவீதைச் சிமேயீ இழிவுபடுத்தினான். இரட்சகரை அறிக்கையிட்டு சுகம்பெற்றபிறவிக்குருட்டுப் பிச்சைக்காரன் வேதபாரகரால் வெளியேற்றப்பட்டான். பரிசேயர் நமது ஆண்டவர் இயேசுவுக்கு விரோதமாக அவரைக் கொன்றுவிட சதி செய்தனர். சனகரிம் சங்கம்பவுலுக்கு மரணதண்டனை கொடுக்கும்படி வேண்டிக்கொண்டது.

சோப்பாரைப்போன்ற ஊக்கமுள்ள மக்கள் தங்கள்தவறு செய்கிறோம் என்று உணருவதில்லை. அவர்கள் தேவனை அறிந்தவர்கள்தான். ஒருவன்வியாதிப்பட்டிருந்தால், அவன் கொடுமை செய்திருப்பான், அதனால்த்தான் அவனுக்கு வியாதிவந்தது என்றும், ஒருவன் பாவத்தில் தவறி விழுந்துவிட்டதினால்தான் துன்பப்படுகிறான்என்றும் கூறுவர். பாவத்தினால் மட்டுமே துன்பம் ஏற்படும் எனக் கருத்துவோர் இவர்கள். ஆனால்யோபுவோ தன் உத்தமகுணத்தை அறிவார், தேவனும் அறிவார். பிறர் குறை கூறுவதால் குழப்பமடைந்துஅவர்களது மிருகத்தனமான பண்புகளால் வேதனைப்படுத்துவோம். எது நேர்மையானது என்பதை தேவன்தௌ;ளத்தெளிவாக வெளிப்படுத்துவார்.