June

தொழு நோயாளிகளைக் கையாளுதல்

(வேதபகுதி: எண்ணாகமம் 5:1-31) “குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும், பாளையத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு” (வச. 2). தொழு நோய்க்கு ஆட்பட்டவர்கள், உதிரப்போக்கு உள்ளவர்கள் மற்றும் பிணத்தினால் தீட்டுப்பட்டவர்கள் ஆகிய மூன்று விதமான நபர்களை குடியிருப்புகளை விட்டு தனிமைப்படுத்த வேண்டும். இவைகள் பெரும்பாலும் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு தொற்று பரவக்கூடிய நோய்கள். குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இல்லாத காரணத்தாலும், பிறருக்கு இத்தொற்றுகள் பரவாமல் இருக்கவும், அல்லது நோயின் பாதிப்பினால் துர்நாற்றத்தினால் வேறு எவரும் பாதிக்கப்படாமல்…

June

மெராரி புத்திரர்களின் பணி

(வேதபகுதி: எண்ணாகமம் 4:29-49) “மெராரி புத்திரருடைய பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய்” (வச.29,30). ஆசரிப்புக்கூடாரத்தைத் தாங்கி நிற்கக்கூடிய பொன் மற்றும் வெள்ளியிலான ஆதாரத் தூண்களை சுமந்து செல்லும் பொறுப்பு மெராரி புத்திரர்களுக்கு வழங்கப்பட்டது. இது அதிக எடையுள்ள பாரமான வேலை. இப்பொருட்களைக் கொண்டு செல்வதற்கு வசதியாக நான்கு வண்டிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன (எண். 7:8). கர்த்தர்மேல் நம்முடைய பாரங்களை வைக்கும்போது…

June

கெர்சோன் புத்திரர்களின் பணி

(வேதபகுதி: எண்ணாகமம் 4:21-28) “கொர்சோன் புத்திரருடைய பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக்கூடாரத்திலே பணிவிடை வேலை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி தொகை ஏற்றுவாயாக” (வச. 22,23). ஆசரிப்புக்கூடாரத்தில் என்னென்ன திரைகள் பயன்படுத்தப்பட்டதோ அவை எல்லாவற்றையும் சுமந்து செல்லும் பொறுப்பு கெர்சோன் புத்திரருக்கு வழங்கப்பட்டது. இதற்கு வசதியாக அவர்களுக்கு இரண்டு வண்டிகள் கொடுக்கப்பட்டன (எண். 7:7). ஆனால் ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள பரிசுத்த பொருட்களைச் சுமந்துசெல்வதற்கு கோகாத் புத்திரருக்கு வண்டிகள் வழங்கப்படவில்லை, அவர்கள் தங்கள்…

June

கோகாத்தியர்களின் சிறப்பான பணி

(வேதபகுதி: எண்ணாகமம் 4:1-20) “ஆசரிப்புக்கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது” (வச. 4). இஸ்ரயேலரின் பாலைவனப் பயணத்தில் கர்த்தருடைய மகிமை விளங்கும் ஆசரிப்புக்கூடாரத்தை சுமந்து செல்லும் பொறுப்பு லேவி கோத்திரத்தைச் சார்ந்த கோகாத், கெர்சோன், மெராரி புத்திரர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. இவர்களில் முதலாவது கோகாத் புத்திரர்களின் பணி சொல்லப்பட்டுள்ளது. இவர்களில் முப்பது வயது முதல் (இருபத்தைந்து வயதில் தெரிந்துகொள்ளப்பட்டு, ஐந்து ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். எண். 8:25) ஐம்பது வரை உள்ளவர்கள் இப்பணிக்கென்று தெரிந்துகொள்ளப்பட்டார்கள்…

June

லேவியர்கள் என்னுடையவர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 3:40-51) “நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருக ஜீவன்களுக்குப் பதிலாக லேவியரின் மிருக ஜீவன்களையும் பிரித்தெடு. லேவியர் என்னுடையவர்களாயிருக்கிறார்கள். நான் கர்த்தர்” (வச. 45). இஸ்ரயேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, “மனிதரிலும் மிருக ஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து, அது என்னுடையது” (யாத். 13:2) என்று தேவன் உரிமைபாராட்டினார். இவர்கள் இரத்தத்தினால் சங்காரக்காரனின் அழிவுக்குத் தப்பியவர்கள். இப்பொழுது இவர்கள் விடுதலை பெற்ற மக்கள். தேவனுடைய சிறப்பானவர்கள்.…

June

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி

(வேதபகுதி: எண்ணாகமம் 3:1-39) “நீ லேவி கோத்திரத்தாரை சேர்த்து அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து” (வச. 6). லேவியர்கள் ஆரோனுக்கு உதவியாளர்களாக இருக்கும்படி பரலோகத்திலிருந்து தெய்வீகக் கட்டளை பிறந்தது. பொருட்களைப் பராமரிப்பதும், காவல் காப்பதும், அவற்றைச் சுமப்பதும் ஆகிய தாழ்மையான வேலையாக இவை இருக்கலாம். ஆயினும் கர்த்தரின் பார்வையில் இவை கனமுள்ள வேலையாக இருக்கிறது. கிறிஸ்தவ ஊழியங்களிலும், திருச்சபைகளிலும் நிறைவேற்ற பணிகள் ஏராளமாக இருக்கின்றன. ஆகவே அவற்றைச் செய்யும்படி நம்மைக் கர்த்தர் அழைத்திருப்பாரானால்அவற்றை…

June

வேற்றுமையில் ஒற்றுமை

(வேதபகுதி: எண்ணாகமம் 2:1-34) “இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின் விருதாகிய தங்கள் தங்கள் கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்” (வச. 2). ஆசரிப்புக் கூடாரம் நடுவிலும், அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் அவரவருக்கு தேவன் ஒதுக்கிய இடத்தில் அவர்களுடைய கொடிகளுடன் கூடாரம் போட்டு தங்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு கோத்திரமும் எங்கே தங்க வேண்டும் என்பதை தேவனே தீர்மானித்தார். எந்தத் திசையில் எந்தக் கோத்திரத்துடன் தாங்கள் இணைந்து…

June

ஆன்மீக போர் வீரர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 1:47-54) “நீ லேவி கோத்திரத்தாரை மாத்திரம் எண்ணாமலும் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும் லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும் அதிலுள்ள சமஸ்த பொருட்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து.” (வச. 49,50). ஒரு நாட்டைக் காப்பதற்கு இராணுவம் எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆவிக்குரிய காரியங்களில் அந்த நாட்டை வழிநடத்திச் செல்வது. எல்லா கோத்திரத்தாரிலும் இருபது வயதுக்கு மேற்பட்டோர் தங்களை போர்வீரர்களாக அடையாளப்படுத்திக்கொண்டபோது, லேவியர் இதிலிருந்து விலக்கப்பட்டார்கள். இவர்களுக்கென சிறப்பான…

June

கிறிஸ்துவின் போர் வீரர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 1:22-37) “சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர்” (வச. 22,23). வாழ்வதற்கு சாதகமற்ற பாலைவனத்தில் தேவனுக்கென்று ஓர் இளைஞர் படை உருவாகிக்கொண்டிருந்தது. இந்த உலகத்தில் போர் இருக்கிறது, அதற்கு ஆட்கள் தேவை, பயிற்சியும் அவசியம். ஆயினும் வெற்றி எப்பொழுதும் கர்த்தரைச் சார்ந்தது. ஒவ்வொரு கோத்திரத்திலும் இருபது வயதுக்கு மேற்பட்ட போரிடக்கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ…

June

தேவ குடும்பத்தின் உறுப்பினர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 1:1-21) “நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச் சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர் பேராக எண்ணித் தொகையேற்றுங்கள்” (வச. 2). ஆதியாகமம் தேவனுடைய பிள்ளைகளை வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்டு இந்தப் பூமியில் தங்களை அந்நியர்களும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டவர்களாகச் சித்திரிக்கிறது. யாத்திராகமமும், லேவியராகமமும் தேவனுடைய விடுதலையின் மக்களை ராஜரீக ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த இனத்தாராகவும் நமக்கு முன் காட்டுகிறது. இந்த எண்ணாகமம் தேவனுடைய மக்களை, எதிரிகளை வாகை சூடி வாக்குத்தத்த நாட்டைச்…